Monday, May 31, 2010

வினவு (முகமூடி)யின் பதிவரசியல் சாக்கடை அலசல்!

எனக்கு வினவு குழுவிலிருந்து வரும் பதிவுகள் பொதுவாப் பிடிக்கும்! யாரை வேணா விமர்சிப்பார்கள்- நல்லாவே! பதிவுலகில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இடம் உண்டு எனபதை மறுக்க முடியாதுதான். ஒருமுறை ஜெயராமுக்கு வக்காலத்து வாங்கியபோது எரிச்சலாகி இவர்களை விமர்சித்தேன்.

மற்றபடி பொதுவா நல்லாத்தான் எழுதுவார்கள்- வினவு என்கிற முகமூடி போட்டு அதில் மறைந்து எழுதும் பல மேதாவிகள். நான் போட்டிபோட்டுக்கொண்டு வினவுக்குப்போயி பின்னூட்டமெல்லாம் இடுவதில்லை. ஏன் னா இவங்க ரொம்ப ப்ரஃபெஷனல் மாதிரி இருக்கும். வளர்ந்துகொண்டிருக்கவங்களைத்தான் நாம படிச்சு பாராட்டி, திட்டி முன்னேத்தனும். பெரிய மேதாவிகளை அல்ல என்பது என்னுடைய மேதாவித்தனமான ஐடியா!

பதிவர் நரசிம்மை பிரபலமாக்கும் எண்ணத்துடன், தாமிரா-ஆதி பேட்டி என ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து மயில் என்பவர் அதை விமர்சித்து ஒரு பதிவுபோட (இத நான் படிக்கலை), அதில் பதிவர் சந்தனமுல்லை ஒரு எரிச்சலைக்கிளப்பும் பின்னூட்டமிட (இதையும் நான் பார்க்கலை), இதைபடிச்சு நர்சிம் கடுப்பாகி அள்ளிக்கொட்ட! (வினவுக்கு நன்றி). அப்புறம் பதிவர நரசிம்மை பலர் கண்டிக்க...

ஆதி ஆரம்பிச்சது, நரசிம்மை பிரபலமாக்குவதுபோல ஒரு முயற்சி. அதுவே ஒரு அரசியல்தான். ஆனால் கடைசியில் நரசிம்மோட "பூக்காரி" (புனைவு)ப் பதிவால் ஆதி ஆரம்பிச்ச அரசியல் தடம் புரண்டு நர்சிம் தலையில் அவரே மண்ணள்ளிப்போட்டுக் கொண்டதுபோல கடைசியில் முடிஞ்சிருச்சு! இதெப்படி இருக்கு?

அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!
அட யாருக்கடா புரியும்?

அவன் வேடிக்கையும் அதன் விளைவும்!

ங்கிற பாட்டுத்தான் ஞாபகம் வருது!

இப்போ யார் செஞ்சது தப்பு, ஆதியா? இல்லை அதை விமர்சித்த மயிலா? பின்னூட்டமிட்ட சந்தனமுல்லையா? இல்லை நரசிம்மா? னு பார்த்தால் நரசிம் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் அள்ளிக்கொட்டிவிட்டார்!

சரி அதுக்கு என்ன தண்டனை? அதெல்லாம் நம்ம யாருங்க முடிவு செய்ய? பாதிக்கப்பட்ட பதிவர் காயத்துடன் இருப்பார். தப்பு செய்தவரை ஆளாளுக்கு பதிவுபோட்டு கண்டிச்சுக்கிட்டே இருக்காங்க! Everybody gets their turn. This time it is Narasim's!

வினவு முகமூடி போட்ட ஒருவர்தான் இதை "பதிவரசியல்" என்கிற பதிவில் எல்லாவற்றையும் பி டி எஃப் ஆக்கி அழிக்க முடியாதபடி ஆக்கியிருக்காங்க! வினவு எழுதிய இந்தப்பதிவை எழுதிய மேதாவி யாருனு தெரியலை! இவருக்கு பதிவுலகில் உள்ள எல்லாவிதமான அரசியலும் தெரிஞ்சிருக்கு! அளவுக்கு அதிகமாகவே மேதாவித்தனமாத் தோண்டி எடுத்து நாறடிச்சு இருக்கார்!

நரசிம் இன்னொரு பெண் பதிவரை அவமானப்படுத்தியது தப்புத்தான். ந்ரசிம்மின் பதிவு சாதாரணமாக கறபனையாக ஒரு பதிவரை மனதில் கொண்டு எழுதாமலிருந்தால் அது ஓ கே. ஒருவரை தாக்கவேண்டுமென்று அவரை நினைத்து எழுதியிருந்தால், அது தப்புனு சொல்லலாம். இதனால் பாதிக்கப்படும் பதிவர் எவ்வளவு பாதிக்கப்படுவார் என்பது நரசிம் சிற்றறிவுக்கு எட்டாமல் போய்விட்டதுபோல தோனுது.

இருந்தாலும் பதிவுலகில் It happens to everybody, when you try to pay off someone. I dont think narasim realized that he was crossing the line until other critics and readers pointed out that. Because that is a creator's weakness- we all should know that! When he/she gets emotional, he/she would not know the limit! இன்னைக்கு நரசிம். நாளைக்கு யாரோ?

சரி, நரசிம் செய்தது தப்பு! வினவுவுடைய பதிவரசியல் சாக்கடை அலசல்ப்படி நரசிம்மின் அந்தப் பதிவு மட்டுமா தப்பு? இல்லை!

* நரசிம் பார்ப்பனராக பிறந்தது தப்பு!

* நர்சிம் பணக்காரரா பிறந்தது தப்பு!

* " நரசிம் என்ன வேலை பார்க்கிறார். நர்சிம் அப்பா எப்படிப்பட்ட பார்ப்பனர். இப்படி போயிக்கிட்டே இருக்கு! இதெல்லாம் என்னங்க "வினவு முகமூடி"?


ஏன் நம்ம திராவிடர்கள் யாரும் இதுபோல் உணர்ச்சிவசப்படுவதில்லையா? ஆணாதிக்கவாதிகள் இல்லையா? திராவிடர்கள் எல்லாருமே பெண்ணியவாதிகளா, என்ன? நரசிம், ஒரு திராவிடரா இருந்தால் இதுபோல் உணர்ச்சிவசப்பட்டும் எழுதியிருக்கமாட்டார்னு நீங்க நெனச்சா, நீங்க ஒரு முட்டாள்!

நரசிம் செய்தது தப்புனு சொன்னதோட வினவு முகமூடி போட்டிருக்கும் அந்த மேதாவி நிறுத்தி இருக்கலாம், இல்லை நிறுத்தி இருக்கனும்.

அதுமட்டுமல்ல, * அபி அப்பா, *லதானந்த் * மங்களூர் சிவா போன்ற பதிவர்களையும் அவர்கள் பின்னூட்டமிடும் பதிவுகள் எழுதும் பெண் பதிவர்களையும் தேவையே இல்லாமல் சங்கடப்படுத்தியுள்ளார்கள். இதெல்லாம் கேவலமா இருக்கு வினவு முகமூடி போட்டிருக்கும் மேதாவி அவர்களே! குறையில்லாத பதிவர் யாருங்க? இந்த ஆரட்டிக்கிள் எழுதிய மேதாவி மட்டும் ஏதோ குறையே இல்லாத யோக்கியம் போலவும் வினவு என்கிற "முகமூடி"க்குள் மறைந்துகொண்டு அளவுக்கு அதிகமாக சின்னச் சின்ன விசயங்களையும் விமர்சித்து இந்தப் பதிவின் தரத்தை குறைந்து சாக்கடை அலசல் ஆக்கி விட்டார்கள்!

என்னவோ வினவோட இந்தப் பதிவைப்பத்தி விமர்சிக்கனும்னு தோனுச்சு! அம்புட்டுத்தான்! :)

Sunday, May 30, 2010

விஜயுடைய “முதல்வர் ஆசை”க்கு விலை!



சுறா நல்லாப்போகலை என்பதென்னவோ எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மைதான். நம்ம ஊர்ல எப்படியோ, ஆனால் "மலேசியாவில் சுறாவை சிங்கம் வந்து முழுங்கிவிட்டது" என்பதை மலேசியா “நவ் ஷோயிங்” பார்த்தால் தெரியும். சுறா விழுந்தா? அதுக்காக திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து விஜயை மிரட்டனுமா?


படம் மினிமம் கியாரண்டியை க்கூட ஈட்டவில்லைனா, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் படத்தயாரிப்பாளரைத் தானே கேக்கனும்? இல்லையா? விஜய்தான் இதற்கு பொறுப்பா? விஜய் எப்படி இதுக்கு பொறுப்பாவார்?

ரஜினியின் பாபா நல்லாப்போகாதபோது ரஜினி ஓரளவு பணத்தைத் திருப்பிக்கொடுத்தார். அது ஏன் என்றால் பாபா ரஜினியுடைய தயாரிப்பு. பாபா, மினிமம் கியாரண்டியை ஈட்டவில்லை அதனால் ரஜினி அதற்கானதை செய்தார். அதேபோல் குசேலன் சரியாகப்போகததால், மினிமம் கியாரண்டியை சம்பாரிக்க முடியாததால் கவிதாலயா மற்றும் ப்ரமிட் சாய்மீராவைத்தான் திரையரங்கு உரிமையாளர்கள் அனுகினார்கள். ரஜினியை அனுகவில்லைனுதான் நினைக்கிறேன்.
இப்போ சுறா சரியாப்போகலைனா அதேபோல் திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கிலி முருகனைத்தானே அனுகனும்?

திரையரங்கு உரிமையாளர்கள் ஏன் விஜய்யை அனுகுகிறார்கள்? என்பது என் குழப்பம்! திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரை அனுகி நஷ்டப்பணம் பெறனும். நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விஜையை அனுகனும்னுதான் எனக்குத் தோனுது.

திரையரங்கு உரிமையாளர்கள் => விநியோகஸ்தர்/தயாரிப்பாளர் => நடிகர் விஜய்!

அதைவிட்டுவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் விஜயை அனுக, மற்றும் மிரட்டக்காரணம்?

மேலும் சம்மந்தமே இல்லாமல் அவருடைய பழைய படங்களை எல்லாம் சுறாவோட இணைப்பது?

இதுக்கெல்லாம் காரணம் என்ன?

விஜயின் “முதல்வர் கனவு” தான் இதற்கு காரணம்! விஜய்க்கு அந்த ஆசை இருப்பதால் விஜய் மீடியா/மக்கள் முன்னால் நல்லவராக நடிச்சே ஆகவேண்டிய கட்டாயம் இது! பெரிய தியாகி போலவும், நல்லவர்போலவும் நடிக்காமல் நான் சாதாரண வியாபாரி, ஒரு நடிகன் என்பதுபோல அவர் பேசலாம். ஆனால் அப்படிப் பேசினால் அவருடைய “முதல்வர் கனவு” வீணாகிவிடும்! முதல்வராக ஆசைப்படும் விஜயின் வீக்னெஸை அறிந்த திரையரங்கு உரிமையாளர்கள் இதுபோல் அரசியல் செய்து விஜயை மிரட்டுறாங்கனுதான் தோனுது. விஜய், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி அவருடைய “முதல்வர் கனவை” பாதுகாப்பாராக!
தயவு செய்து விஜய்க்காக யாரும் பரிதாபப்படாதீங்க!
ஏன்னா அவரு விவேகத்தில் 100 சாணக்யனுக்கு சமமாம்! அவர் பட வசனம்தான்! :)

Friday, May 28, 2010

சிங்கம்! வெற்றி நிச்சயம்!


ஹரி - சூர்யா இணையும் மூனாவதுபடம்தான் இந்தச் சிங்கம். என்னப்பா பேரு வச்சிருக்கீங்க? சிங்கம் கரடி, நாய், பூனையினு?னு சொன்னால், "அண்ணே, தொரசிங்கம்னு பேரு கேட்டதில்லையா? தமிழ்ப் பேருண்ணே "னு சொல்லி சமாளிக்கிறாங்க!

சரி, ஹரியுடைய ஆறு, வேல் ரெண்டுமே மசாலாப் படங்கள்தான் ஆனால் வெற்றியடைந்த படங்கள்! அதேபோல் சிங்கமும் ஒரு முழுநீள மசாலாப் படம்தான். இருந்தாலும் விமர்சகர்களை கவர்ந்திருக் கிறார்கள் ஹரியும் சூர்யாவும்! விமர்சனங்கள் எல்லாம் ஒரு மாதிரி பாஸிட்டிவாத்தான் வந்திருக்கு! எ செண்டர் மட்டுமல்லாமல் பி & சி செண்டர்களிலும் படம் நல்லாப் போகும்னு உத்திரவாதம் கொடுக்கிறாங்க, எல்லாரும். வெற்றி நிச்சயம் என்கிறார்கள்!

சில விமர்சகர்கள் என்ன சொல்றாங்கனு கேளுங்க!

Sify: பைசா வசூல்! அப்படினா, கமர்சியல் ஹிட் என்று அர்த்தம்னு நான் நெனைக்கிறேன்! சூர்யாதான் இந்தப் படத்தை தோளில் சுமக்கிறார் என்று கண்ணா பின்னானு சூர்யாவை மேலே தூக்கி வைத்துள்ளார்கள்! விவேக் காமெடி ரொம்ப சுமாருக்கும் கீழயாம்! அந்த ஹீரோயின், "அனு அக்கா" எப்படி? அவர் சும்மா க்ளாமருக்கு மட்டும்தானாம்! பிரகாஷ்ராஜ், வழக்கம்போல நல்லாவே செய்திருக்காராம்!

Rediff: என்ன சொல்றாங்கனா, இப்போ வந்த எல்லா மசாலாப் படங்களுக்கும் தாயாம்! இந்த சிங்கம்! இப்படியும் மசாலாப் படத்தை புகழலாமா? இரண்டரை நட்சத்திரங்கள்தான் கொடுத்தாலும் விமர்சனம் நல்லாவே எழுதி சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருக்காங்க! விவேக் காமெடி நல்லாயில்லைனுதான் சொல்லியிருக்காங்க இவங்களும். சரக்கு தீர்ந்து போச்சா விவேக்குக்கு? :( ஹீரோயின் சும்மா வந்து போறாராம்!

ஆமா, சுறா னா விஜயை திட்டுறீங்க, சிங்கம் னா சூர்யாவை புகழ்றீங்க? இதெல்லாம் அநியாயம்னு தோனுதா? சூர்யா தொடர்ந்து வெறும் சிங்கமா (மசாலாவா) ஒரேமாதிரி பண்ணாமல் எல்லா வகையிலும் படம் பண்ணுவதால்தான் இருக்கும். அப்புறம் அவரு இன்னும் முதல்வராகனும்னு ஆசைப்படலை அதுவும் ஒரு காரணம் போல!

அப்புறம், ஆறுச்"சாமி"யோட கம்பேர் பண்ணினால் இந்தச் சிங்கம் எப்படினு கேட்டால், நிச்சயம் சாமி இதைவிட நல்லபடம்னுதான் எல்லாரும் சொல்றாக! ப்ளாட்டும் சரி, காமெடி (விவேக்கிடம் அப்போ கொஞ்சம் சரக்கு இருந்துச்சு) எல்லாமே சாமி பெட்டர்தானாம்.

இப்படி படமே பார்க்காமல் விமர்சனம் எழுதுறது கொஞ்சம்கூட நல்லாயில்லைங் கிறீங்களா? நம்மளவிட இது போல் வலையில் எழுதும் ஆங்கில விமர்சகர்கள கருத்து தரம் மற்றும்ம் விலையுயர்ந்தது இல்லையா? அதான்!

நான் எழுதினா அங்காடி தெரு விமர்சனம் மாதிரிதான் வரும் எனக்கு! நான் எஸ்கேப்!

Wednesday, May 26, 2010

அரிசிப்புழு சாப்பிடாதவனும்.. -கடலை கார்னர் (55)

"என்ன ஆண்ட்டி! அந்த வடநாட்டு அம்மா உங்கள நல்லா கவனிச்சுச்சா!"

"யாரைச் சொல்றீங்கனு தெரியலை. ஆனால் அங்கவுள்ள அம்மா கொஞ்சம் அறுக்கத்தான் செஞ்சது. ஆனால் விலையெல்லாம் ரொம்பப் பரவாயில்லை கண்ணன். இது மாதிரி கடையெல்லாம் காண்சஸ் சிட்டியில் கெடையாது. இங்கேதான் எல்லாம் கெடைக்குது!"

"பேசாமல் சிகாகோ மூவ் பண்ணிடுங்க, ஆண்ட்டி!"

"நெனச்ச நேரம் மூவ் பண்ண முடியுமா, பிருந்தா? இந்த ஊர்ல பர்மணெண்டா ஒரு வேலையும், ஒரு ஹஸ்பண்டும் வச்சிருக்க முடிஞ்சதுனாவே பெரிய சாதனைதான்"

"அது சரி, உங்க "எக்ஸை" அப்பப்போ கவுத்தலைனா போர் அடிக்குமா, ஆண்ட்டி?"

"ஹா ஹா ஹா! உண்மையைத்தானே சொல்றேன், கண்ணன்!"


"அவரும் ஆம்பளைனு அவங்க "எக்ஸ்"க்கு வக்காலத்து வாங்குறீங்களா, கண்ணன்?"

"வக்காலத்தெல்லாம் வாங்கல பிருந்த்! ஒருவரோட சேர்ந்து வாழமுடியலைனா அவர் மோசமா இருக்கனும்னு இல்லையே! அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலை! அவ்வளவுதான்"

"இப்போ என்ன சொல்ல வர்றீங்க?'

"மேரிட்டல் ப்ராப்ளம்ஸ் ரொம்ப காம்ப்ளெக்ஸான ஒண்ணு, பிருந்த்! உனக்கு அனுபவம் பத்தாதுனு சொல்ல வர்றேன்!"

"நீங்க இதுவரை எத்தனை முறை கல்யாணம் பண்ணி வாழ்ந்து இருக்கீங்க? பெரிய அனுபவசாலி!"

"ஏய்! நான் அனுபவசாலினு உன்ட்ட இப்போ சொன்னேனா?"

"அப்ப எதுக்கு பெரிய இவர் மாதிரி பேசுறீங்க?"

"உன்னைவிட எனக்கு அனுபவம் ஜாஸ்திதான்!"

"இருக்கலாம். ஆனா இந்த ஆண்ட்டி "எக்ஸ்" மேட்டர்ல என்னைவிட உங்களுக்கு கெடையவே கெடையாது!"

"என்ன ரெண்டு பேரும் அவங்க "எக்ஸ்" பத்தி நைட் பூராம் பொறணி பேசுனீங்களா?"

"நெறையா சொல்லியிருக்காங்க! ஆண்ட்டி! அந்த "பீட்சா" கதையை கண்ணன்ட்டசொல்லவா?"

"கண்ணன்ட்டயா? ஐயோ வேணாம், பிருந்தா!"


"என்ன இவ்ளோ வெக்கப்படுறாங்க ஆண்ட்டி! என்னனு சொல்லு!"

"ஆண்ட்டி சொல்றேனே?"

"சரி சொல்லு!"

"இரு, இரு! என்ன? ரொம்ப மோசமான பெட்ரூம் மேட்டரா?"

"ஆமா!"

"ஆண்ட்டியை எம்பாரெஸ் பண்ண வேணாம் அப்புறம் இன்னொரு நேரம் சொல்லு, பிருந்த்!"

"கண்ணன்! நீங்க என்ன கைல ஏதோ இன்னொரு பார்ஸல் வச்சிருக்கீங்க?"

"ஏன் நீங்க மட்டும்தான் ஷாப்பிங் பண்ணனுமா? இங்கேயே நின்னுட்டே இருக்க எனக்கு போர் அடிச்சது அதான் ஒரு கடையில் போய் எனக்குத் தேவையனா ஒரு சிலதை வாங்கிட்டு வந்தேன்!"

"என்ன அது!"

"அதெல்லாம் சொல்ல முடியாது! என் ஃப்ரெண்டு ஒருத்திக்கு "

"ஒருத்தியா? யாருக்கு அது?"

"என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்டு ஒருத்திக்கு ஜூலைல பொறந்தநாள் வருது. "

"எனக்கும் ஜூலைலதான் பொறந்த நாள்!"

"ஆமா உலகத்திலேயே ஜூலையிலே பொறந்தது நீ மட்டும்தான்னு நெனச்சுக்காதே!"

"நீங்கதான் என் பொறந்த நாளுக்கு எதுவுமே வாங்கித் தர்றது இல்லையே! சும்மா ஒரு ஹாப்பி பர்த்டே விஷ்! அவ்வளவுதான்"

"வேறென்ன வேணும்? செக்ஸா?"

"அபப்டியா நான் சொன்னேன்?"

"கண்ணன் ரொம்ப கஞ்சமா பிருந்தா?"


"நீங்க வேறயா!"

"ஆமா, ஆண்ட்டி! எச்சில் கையிலே காக்காய் விரட்டமாட்டார்னு சொல்லுவாங்க இல்லை! அதுக்கு அழகான உதாரணம் இவர்தான்!"

"ஹா ஹா ஹா!"


"உன்னை மாதிரி மேக் அப், காஸ்மடிக்ஸ் அது இதுனு ஊதாரியா செலவழிக்கலைனா கஞ்சமா?"

"நான் ஊதாரி எல்லாம் இல்ல!"

"அமெரிக்கா வந்து இண்டிப்பெண்டெண்டா நாலு காசு சம்பாரிச்சாச்சுனா, நீங்க ஆடுற ஆட்டம் இருக்கே!"

"நான் சம்பாரிச்ச காசை, என் மேக் அப்க்கு செலவழிப்பது எல்லாம் தப்பில்லை!"

"சரி ஏதாவது இந்தியன் ரெஸ்டரண்ட் போவோமா? எனக்குப் பசிக்குது"


"ஆண்ட்டி ப்யூர் வெஜிட்டேரியன்! உடுப்பி பேலஸ்தான் போகனும்!"

"அய்யோ அங்கே சாம்பார் படு மட்டமா இருக்கு! அங்கே வேணாம்! வைஸ்ராய் போவோமா? லன்ச் பஃபே! வெஜ் நான் வெஜ் ரெண்டும் இருக்கும்"

"சரி வைஸ்ராயே போவோம்!"

**************************

"கண்ணன்! நீங்க என்ன வெஜிட்டேரியனா!"


"அவர் சும்மா நடிக்கிறார், ஆண்ட்டி! விட்டா உங்களையும் என்னையும்கூட சாப்பிட்டுவிடுவார்"

"இல்லை ஆண்ட்டிக்கு கம்பெணி கொடுக்கத்தான்!"

"ஏன் எனக்கு கம்பெணி கொடுத்தா என்ன?"

"ஆமா நீ சிக்கன் இல்லாமல் சாப்பிடுறதே இல்லை! அமெரிக்கா வந்து கெட்டுப்போயிட்டா இந்த "மாமி"!

"இங்கே வந்துதான் சிக்கன்லாம் சாப்பிடுறியா, பிருந்தா!"


"வேற என்ன? இவங்க ஆத்துலயா இவங்க அம்மா கோழியடிச்சு சமைக்கிறாங்க? அவங்களுக்கு இவ சிக்கன்லாம் சாப்பிடுறது தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியலை!"

"இங்கே வந்துதான் சிக்கன்லாம் சாப்பிடுறேன் ஆண்ட்டி! அமெரிக்கா வந்து ரொம்ப முன்னேறிட்டேன் போல இருக்கு!"

"ரெட்லாப்ஸ்டர்ல போயி சீ ஃபூட் எல்லாம் திண்பா! கேட்டால் அதுலதான் ஃபேட் கம்மியா ப்ரோட்டீன் ரிச்சா இருக்காம்!"

"எனக்குப் பிடிச்சத நான் சாப்பிடுறேன் உங்களுக்கென்ன?"

"ஆண்ட்டி, நீங்க என்ன சுத்தமான வெஜிட்டேரியனா?"

"ஆமா, கண்ணன்!"


"அப்சலூட் செண்ஸ்ல பார்த்தால் நீங்க நிச்சயம் ஏதாவது நான்வெஜ் சாப்பிட்டுத்தான் இருப்பீங்க!"

"இல்லையே!"

"இங்கே உள்ள அமெரிக்கன் ரெஸ்டாரெண்ட்ல ஆயில்ல எல்லாம் அனிமல் ஃபேட் எல்லாம் சேர்கிறாங்க ஆண்ட்டி!" ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கூட நாண்வெஜ்தான்!

"நெஜம்மாவா?"

"நெஜம்மாத்தான் ஆண்ட்டி! சரி விடுங்க. நீங்க வெஜ்னே நெனச்சு சாப்பிட்டா அது வெஜ்தான்!"

"கண்ணன் ஒரு பழமொழி சொல்லுவாரு, ஆண்ட்டி!"

"பழமொழியா?.. என்ன பழமொழி அது?"


"மரப்பசுல ஜானிகிராமன் சொன்னது! எனக்கு க்ரிடிட் கொடுக்காதே!"

"என்ன பழமொழி? சொல்லுங்க!"


"இப்போ சாப்பிடுற போது வேணாம் . சாபிட்டுட்டு காருக்கு போகும்போது சொல்றேன்!"

********************

"ஆண்ட்டிக்கு அந்தப் பழமொழியை சொல்லுங்க, கண்ணன்!"

"விட மாட்டியா?"

"ஆமா சொல்லுங்க!"

"அசிங்கமா இருக்கும். பரவாயில்லையா?"

"சரி பரவாயில்லை!"

"அரிசிப்புழு சாப்பிடாதவனும், அவுசாரி கையால சாப்பிடாதவனும் இந்த உலகத்திலே இல்லையாம்! னு ஜானகிராமன் எழுதி இருப்பாரு! அதாவது ஏதாவது ஒரு அக்கேஷனில் நம்மளயே அறியாமல் நம்ம நான்வெஜ் சாப்பிட்டு இருக்கலாம்!"

"சரி அவுசாரினா என்ன, கண்ணன்?"

"நன்னடத்தையில்லாத பெண்மணினு வச்சுக்குவோமே!"

"நெஜம்மாவே மரப்பசுல இது இருக்கா?"

"அப்படித்தான் எனக்கு ஞாபகம்!"

"ஏன் இப்படி ஒரு பழமொழி?"

"என்னைக்கேட்டால் சில அசிங்கமான பழமொழியிலும் நல்ல அர்த்தங்கள் இருக்குங்க. அதையும் நம்ம எடுத்திக்கிறதுல தவறேதும் இல்லையே!"

"கண்ணன்! அந்த கழுதைப் பழமொழி ஒண்ணு சொல்லுவீங்களே.. அதையும் சொல்லுங்க"

"நீ சும்மா இருக்க மாட்டியா!"

"அதென்ன கழுதைப் பழமொழி!"

"அது ரொம்ப "எ" பழமொழி! அதெல்லாம் உங்ககிட்ட சொல்லி என்னை நானே தாழ்த்திக்கப் போவதில்லை! வேணும்னா பிருந்தாட்ட கேட்டு தெரிஞுக்கோங்க! அவளுக்கு நல்லாத் தெரியும். விழுந்து விழுந்து சிரிச்சா அதை கேட்ட்டுட்டு"

"நானா? நான் அந்தப் பழமொழியெல்லாம் செத்தாலும் சொல்லமாட்டேன், கண்ணன்!"

"அப்போ ஆண்ட்டி ரொம்ப அன்லக்கி! சரி, ட்ரங்க்ல வாங்கின எல்லாத்தையும் டம்ப் பண்ணுங்க! இடம் பத்தலைனா, பேக் சீட்லதான் வைக்கனும்!"

"இடம் எல்லாம் பத்தும் கண்ணன்!"

-தொடரும்

Monday, May 24, 2010

அங்காடி தெரு- நாடார்களை கேவலப்படுத்தவா?




அங்காடி தெரு பார்த்த கடைசி ஆள் நாந்தான்! வலையுலகில் அந்தப்படத்துக்கு கடைசி விமர்சனம் எழுதுவதும் நாந்தான் போல இருக்கு. இருந்தாலும் என்னுடைய கண்ணோட்டம் முற்றிலும் வேறு மாதிரியா இருக்கப் போவுது. “என்ன லூசுத்தனமாவா?” இல்லைனா "குருட்டுப்பார்வையா?"நு கேக்குறீங்களா? அப்படியும் எடுத்துக்கலாம். முழுக்க முழுக்க சாதிச்சாயம் பூசப்போகிறேன் இந்தப் படத்துக்கு! நான் பூசவில்லை! வசந்தபாலனால் பூசி மொழுகப்பட்டு இருந்ததை "unveil" பண்ணுகிறேன்.

வசந்தபாலனை எல்லாரும் பாராட்டிப் பாராட்டி டயர்டாகிட்டாங்க. சரி, நானும் அதையே செய்யனுமா? அது சுத்தமான போர்!

இந்தப்படத்தில் சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் வைத்து நடத்தும் நாடார்களை "மெயினா"கவும், கொஞ்ச வயசு ஏழைப் பெண்களை வேலைக்கு வைத்து இருக்கும் சென்னையில் வாழும் பார்ப்பனர்களையும் சைட்-லயும் கடுமையாக சாடுகிறார், வசந்தபாலன். இல்லை , நேரிடையாகவே திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்து சம்பாரிச்சு முன்னேறி பெரிய பணக்காரகளான “அண்ணாச்சி போல” நாடார்களை கேவலப்படுத்துறார். பிழைப்புக்காக வேலைக்கு வந்து இருக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளையும் பிச்சைக்காரகளைவிட கேவலமாக எவ்வளவு மட்டமாக் காட்டமுடியுயுமோ காட்டியுள்ளார், வசந்தபாலன்.

சரி, அதிலென்ன தப்பு? அதுபோல் இவர்களை விமர்சிப்பதால் நாலு பணமுதலைகள் திருந்தட்டுமே? நாலு ஏழைகள் பட்டணத்தில் வந்து அடிமைபோல் வாழ்ந்து பிச்சை எடுக்காமல் திருநெல்வேலியிலேயே இருந்து வயக்காட்டில் வேலை செய்யட்டுமே? ங்கிற நல்ல எண்ணத்தில் வசந்தபாலன் இந்தப்படத்தை எடுத்தார்னு விவாதம் செய்ய முடியாத அளவுக்கு இந்த வொர்த்த்லெஸ் சிறுவர்கள் காதல் சப்ஜெக்கட்டை பெருசுபடுத்தி வீணாக்கிவிட்டார்.

மனிதாபிமானமே இல்லாத மேனேஜர் "கருங்காலி" போன்ற மிருகங்களை மேனேஜர்களாக் ஒரு பக்கம் காட்டியது சரினு வச்சுக்கிட்டாலும். கருங்காலி போலில்லாமல் நல்ல மேனேஜர்கள் ஒருவர் கூட இருப்பதாக இந்தப்படத்தில் காட்டப்படவில்லையே! அது ஏன்? இதுபோல் மேனேஜர்களில் நல்லவர்களே இல்லையா? இல்லை நாடார்களை கேவலப்படுத்த இவர் செய்த சதியா?

சரி, ஒரு வியாபாரி, கடையில் உள்ள கஸ்டமர்களை வச்சுக்கிட்டே கூட வேலை பார்ப்பவனை அடிச்சு அடிதடியில் இறங்குவானா? வியாபாரிகள் பொதுவா கஸ்டமர் முன்னால நல்லவனாக நடிப்பார்கள். கருங்காலி மாதிரி ஒரு மேனேஜர் கஸ்டமரை வச்சுக்கிட்டே அடிதடியில் இறங்கினால், அண்ணாச்சிகள் கருங்காலியத்தான் முதலில் வீட்டுக்கு அனுப்புவார்கள். இது ஒண்ணும் பெரிய பரோபகாரம் எல்லாம் இல்லை! தன் வியாபாரத்தில் மண் விழுந்துவிடக்கூடாது என்கிற அண்ணாச்சிகளின் சுயநலமதான்.

அதென்ன இப்போ எல்லாம் நம்ம ஊர்ல காதல், காதல், செக்ஸ், ஏமாத்து, பொய் சொல்றது இதெல்லாம் சரி என்பதுபோலவும், அதுதான் இன்றைய சுதந்திரம் போலவும் எல்லாரும் நினைக்கிறாங்களா?? அதாவது, அந்த “கருங்காலி மேனேஜரை” இவ்வளவு கெட்டவனாக்கி (ஃபிசிக்கல் மற்றும் செக்ஸூவல் அப்யூஸ் பண்ணுவதாக) , சின்னப்பொண்ணுக பசங்க செக்ஸ் வச்சுக்கிட்டு பொறுப்பில்லாமல் இருப்பதையும்தான் சரினு சொல்றமாதிரி படம் எடுத்தால்தான் எல்லாரும் கை தட்டுவாங்களா?

ஏழைகள் ஒழுக்கமானவர்களாகவும், வொர்க் எத்திக்ஸுடன் வாழமுடியாதுனு சொல்றாரா வசந்தபாலன்?

இதுல இன்னொரு மேட்டர்! நின்னுக்கிட்டு 10 மணி நேரம் வேலை செய்தால் கொடிய வியாதி வந்துவிடும்னு ஒரு பொய் பிரச்சாரம்! இதெல்லாம் என்ன மிஸ்டர் வசந்ந்தபாலன்? படுகேவலமா இருக்கு நீங்க செய்ற இந்தக் காரியம்!

ஐ டி கார்ட், பங்க்ச்சுவாலிட்ட்டியை இண்ஸிஸ்ட் பண்றதெல்லாம் ஏதோ பெரிய தப்பு மாதிரி காட்டுறாரு. Why? I thought punctuality and proper identification are the things we need to work on and improve ourselves!

தன் மகள்கள் இருவரையும் வேலைசெய்யவிட்ட பொறுப்பில்லாத அப்பாவைக்கூட சுமாரான நல்லவராக்கிட்டாரு. கவனமாப் பார்த்தால் கனியுடைய அப்பா செய்றதுதான் மிகப்பெரிய துரோகம். ஆனால் வசந்தபாலன், அதை ஏதோ சாதாரணமான விசயம் மாதிரி பேருக்கு சொல்லி விட்டுவிட்டார்.

சரி, திருநெல்வேலியில் இருந்து வந்து வேலைபார்க்கும் நாடார் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் உண்மையிலேயே பிச்சைக்காரனைவிட கேவலமாகத்தான் வாழ்கிறார்களா? நாடார் சமூக ஏழைகள் கண்ணீரைத் தொடைக்கத்தான் வசந்த பாலன் இதுபோல் ஒரு ப்ளாட்டுடன் வந்து போராடுகிறாரா? இல்லை அவர்களை கேவலப்படுத்துதான் இவரோட ஒரே குறிக்கோளா?

சரி திருநெல்வேலியில் இருந்து வந்து இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் இங்கே இருந்து கிராமத்துக்கு ஓடிப்போகும் உரிமையை யார் தடுத்தது?

இதுபோல் வேலையில் இன்றைக்கு இருக்கும் சிறுவர்கள் "ஆமாம்" எங்களை பிச்சைக்காரனைவிட கேவலமாக நடத்துறாங்கனு, எங்களுக்கு வாழ்வு கொடுத்த "பெரியார்" வசந்தப்பாலன் னு சொல்வார்களா? இல்லைனா, ஏன்யா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி படம் எடுக்குறேன்னு எங்களை கேவலப்படுத்துற? சினிமா எடுக்க சப்ஜெக்ட் இல்லைனா நாங்கதான் உனக்கு கெட்ச்சாமானு சொல்லுவாங்களா?

இன்னைக்கு எடுபிடியாக இருக்கும் இவர்கள் நாளைக்கு கருங்காலியாகவும் அண்ணாச்சியாகவும் ஆவதே இல்லையா?

இந்தப்படத்தில் வசந்தபாலன் சாதிச்சது.. சென்னையில் வந்து எப்படியோ (by hook or crook) முன்னேறி இன்னைக்கு தொழிலதிபர்களாகி இதுபோல் தொழில் நடத்தும் நாடார்களையும், அங்கே வந்து தன் எஜமானுக்கு லாயலாக வேலை செய்யும் ஏழை நாடார்களையும் அவமானப்படுத்துவது மட்டும்தான் என்று சொலலாம்.

மணிரத்னம் அக்னிநட்சத்திரத்தில் ஒரு சிவகாசி தொழிலதிபருடைய (அண்ணாச்சிதான்) அயோக்கியத்தனத்தை அழகா காட்டியிருப்பார். அதேபோல் சாமியில் ஹரியும் ஒரு "அண்ணாச்சி" வில்லனை அழகா உருவாக்கி இருப்பார். மிஸ்கின்கூட ஒரு அண்ணாச்சியை நல்லாவே காட்டியிருப்பார். அதெல்லாம் ரசிக்கத்தக்க இருந்தது. ஆனால் "அங்காடி தெரு"வில் வசந்தபாலன் "அண்ணாச்சிகளை" கேவலப்படுத்தனுமே இப்படி ஒரு ப்ளாட் டுடன் வந்து இருப்பதால் கொஞ்சம் வரம்பு மீறி எரிச்சலைக் கிளப்புது!

அப்புறம் இன்னொரு விதமாகவும் இந்த மேட்டரை ஜோடிக்கலாம்! ஐங்கரன், எப்படி இப்படி ஒரு கதையை தேடி எடுத்தார்கள்? சமீபத்தில் ஒரு தவறே செய்யாத ஈழத்தமிழரை சென்னையில் இதுபோல் இரக்கமே இல்லாமல் ஒரு அண்ணாச்சி கடையில் அவமானப் படுத்தியதாகப் படித்து இருப்பீர்கள். அந்த அநியாயத்திற்கு பதிலடி கொடுக்கத் (பழிக்குப் பழி) தான் இந்தப்படம் ஐங்கரன் எடுத்துள்ளார்கள் என்றும் கதைவிடலாம்!

Saturday, May 22, 2010

சுறா, செத்து கருவாடானது!

சன் க்ரூப் வினியோக உரிமை பெற்ற எல்லாப்படத்தையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் ப்ரமோட்ப் பண்ணி வெற்றியடைய வைக்க முடியாது! விஜய் இனிமேல் ரிஸ்க் எடுக்காமல் இப்படியே சுறா, புறானு எதையாவது பண்ணி பொழப்பு ஓட்டமுடியாது! நு நம்ம மக்கள் தற்காலிகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்!

உடனே இவருக்கு விசய்னா பிடிக்காது அது இதுனு என்னை குற்றம் சாட்டும் முன்னர். Sify, behindwoods எல்லாத்திலேயும் சுறாவுடைய பாக்ஸ் ஆஃபிஸ் அவுட்கம் பத்தி விசாரிச்சு தெரிந்து கொள்ளவும்.

சரி, சென்னைலதான் படம் தேறலைனா விஜயோட கோட்டை பி, சி செண்டர்களில் எப்படிண்ணே போகுதுனு விசாரிச்சுப்பார்த்தால், இந்த சுறா ரொம்ப தூரம் நீந்தமுடியலைண்ணே அதானால மிதக்கவிட்டுத்தான் கரையேத்த முடியும்போலனு சொல்றாங்க!

சுறா விஜயோட தோல்விப்பட வரிசையில் இடம்பிடித்துவிடும் என்பது விநியோகஸ்தர்களாலும் நம்பப்படுகிறது. சன் க்ரூப்பும் சுறாவை இனிமேல் தேத்த முடியாதுனு ஒரு முடிவுக்கு வந்து சூர்யாவுடைய சிங்கத்தை ரெடி பண்ணுறாங்க போல இருக்கு!

விஜய், தன் அரசியல் கனவை கொஞ்சம் தூக்கி ஓரமா வச்சுப்புட்டு ஏதாவது கொஞ்சமாவது வித்தியாசமான கதையம்சங்களுடன் நடிக்க முயற்சிப்பது நல்லது! இல்லை நான் இப்படியேதான் ஓட்டுவேன்னா நம்ம சூர்யாவுக்கு அடுத்து அவர் தம்பி கார்த்தி விஜயை முந்திக்கொண்டுபோய் விடுவார்.

விஜய் அண்ணா! தமிழ்மக்கள் முழிச்சுக்கிட்டாங்க போல இருக்கு! எம் ஜி ஆர் படம் பார்க்கனும்னா அவங்க அதை டி வி டி யில் பார்த்துக்குவாங்க! நீங்க எதுக்கு சும்மா எம் சி யார் “படம்” எல்லாம் காட்டுறீங்க? இப்படியே போனா நம்ம கார்த்தியும் உங்க முன்னாலே போயிடுவார்! அது ஏன் இப்படி புது மாதிரியா எதுவும் நடிக்கிறதுக்கு பயப்படுறீங்க? இப்படியே அரச்ச மாவ அரச்சா உங்க விசிறிகள்கூட உங்களை காப்பாத்த முடியாது. உங்களுக்கு நான் சொல்லவேண்டியதை சொல்லிப்புட்டேன்.

Friday, May 21, 2010

ஆமா, பச்சைத் தமிழ்! - கடலை கார்னர் (54)

"என்ன ஆண்ட்டி, வாங்கினதை எல்லாம் கொண்டுபோய் ட்ரன்க்ல வச்சிட்டு வருவோமா? அப்புறம் புடவை எடுக்க அந்த்க்கடைக்குப் போகனும்னு சொன்னீங்களே?!"

"பிருந்த்! நம்ம கைலயே வச்சிருப்போம். நம்ம கார்ல வைக்கிறத எவனாவது பார்த்தால் என் ட்ரங்க்க ஒடச்சு அள்ளிட்டுப் போயிடுவான்."

"ஆமா, ஆண்ட்டி, இவர் காரு ஒரு ஓட்டைக்காரு, ஈஸியா ஒடச்சிடலாம்! பேசாமல் கையிலேயே வச்சிருப்போம்!"

"என்னடி கொழுப்பா!"

"உங்க கார் பழைய கார்தானே?"

"இந்தப் பாருடி, பிருந்தி! என்னைப்பத்தி என்ன வேணா சொல்லு! என் காரைப்பத்தி பேசின ..!"

"என்ன மிரட்டுறீங்க? என்ன பண்ணுவீங்களாம்?"

"பப்ளிக்ல வச்சே உன் பட் ல வலிக்கிறாப்பிலே கிள்ளுவேன்!'

"எங்கே கிள்ளுங்க பார்க்கலாம்?"

"என்ன தைரியம் உனக்கு!"

"கிள்ளுங்க! எல்லாருக்கும் உங்களப் பத்தி தெரியட்டும்!"

"ஹா ஹா ஹா! பிருந்தா நிக்கிற போஸ் நல்லாயிருக்கு! எல்லாரும் உங்களை வேடிக்கை பார்க்கிறாங்க!"


"எதுக்குடி என் காரைப் பத்தி கொறை சொல்ற?"

"எங்கே என் பட்ல கிள்ளுடா பார்க்கலாம் பொறுக்கி!"

"டெம்ப்ட் பண்ணாதேடி!"

"எங்க ஊர்ல பக்கத்து தெருல போடுற சண்டை பார்க்கிற மாதிரி இருக்கு! நல்லா சண்டை போடுங்க! இது மாதிரி சண்டை போடுறத வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாச்சு!"


"ஆனாலும் நம்ம மக்களுக்கு இந்த குழாயடி சண்டைய வேடிக்கை பார்க்கிறதுல உள்ள கிக் சினிமா பார்க்கிறதுலகூட வராது!"

"ஏன் ஆண்ட்டி, உங்க ஊர்ல குழாயடி சண்டையெப்போ "பட்"ல எல்லாம் கிள்ளுவாங்களா?"

"ஹா ஹா ஹா! என்னால சிரிப்பு அடக்க முடியலை!" ஆண்ட்டி விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

"ஹா ஹா ஹா! இவகிட்டப்போயி சொல்றீங்களே!"

"இப்போ என்னத்துக்கு ரெண்டுபேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க?"

"இப்படி வெகுளியா இருக்கியே பிருந்த்!"

"நான் வெகுளியெல்லாம் இல்லை. அது மாதிரி சண்டை பார்த்ததில்லை!"

"எங்க ஊருக்கு வா உனக்கு ஒரு சண்டை காட்டுறேன்"

"இந்த சம்மர்க்கு போவோமா?"

"சரி, லீவ் கெடச்சா போகலாம்."

"எப்படி சண்டை போடுவாங்க?"

"உன் முன்னாலே யாரும் சண்டை போட மாட்டாங்க! எல்லாரும் உன்னை வேடிக்கை பார்ப்பாங்க!"

"ஏன்?"

"இவ்வளவு அழகா ஒரு பொண்ணு இவனுக்கு எப்படி கெடச்சதுனுதான்!'

"சாண்ஸ் கெடச்சா ஐசா!"

"கண்ணன் ரொம்பத்தான் பிருந்தாவ அப்பப்போ குளீர வைக்கிறீங்க!"

"சரி, குழாயடி இல்லைனா தெருவிலே பொம்பளைங்களுக்கு இடையிலே நடக்கிற சண்டையிலே பொதுவா கைகலப்பெல்லாம் இருக்காது பிருந்த்!"

"ஆண்ட்டிதானே சொன்னாங்க!"

"அவங்க சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாங்க! பொதுவா பொம்பளைங்களுக்குள்ளதான் இந்தச்சண்டை நடக்கும். ஆனா ரொம்ப அசிங்க அசிங்கமா பேசி சண்டை போடுவாங்க! அவங்க ஃப்ரெஸ்ட்ரேஷனை எல்லாம் இப்படிதான் "கெட் ரிட் ஆஃப்" பண்ணுவாங்க!"

"ஆமா பிருந்தா! பொம்பளைங்களா அவளுக! காது கொடுத்து கேக்க முடியாது! ஆனால் கேக்காமலும் இருக்க முடியாது!"


"அப்படினா?"

"ஆண்ட்டிக்கு அது மாதிரி பச்சை பச்சையா பேசி சண்டை போடுறத வேடிக்கை பார்க்கப் பிடிக்குமாம்!"

"கண்ணன்! என்னை இப்படி வாரிவிடுறீங்களே!"

"எனக்கு அதைப்பத்தி சொல்லுங்க!"

"அவங்க பேசுற அந்தக் கெட்ட வார்த்தையெல்லாம் உனக்குப் புரியாது. நீ சிட்டில வளர்ந்தவ இல்லையா?"

"தமிழ்தானே?"

"ஆமா தமிழ்தான். எங்க ஊர்ல உன் சென்னைத் தமிழ் இல்லை!"

"தமிழ் எனக்குப் புரியாதா?"

"கலோக்கியல் தமிழ் எல்லாம்லாம் உனக்குப் புரியாது!"

"கெட்ட புத்தகத்துல கூட போட்டிருக்க மாட்டாங்களா?"

"அப்படினா?"

"அதான் ஒரு மாதிரியான கதை புத்தகம்!"

"அதெல்லாம் படிச்சிருக்கியா?"

"நான் படிச்சதில்லை. சும்மாதான் கேட்டேன்.."

"சரி நான் உன் காதுல ஒரு கெட்ட வார்த்த சொல்றேன். அதுக்கு அர்த்தம் சொல்லு! உனக்கு எவ்ளோ தெரியுதுனு பார்ப்போம்"

"சொல்லுங்க!"

"ஆண்ட்டி தள்ளி நில்லுங்க! ஒட்டுக்கேக்காதீங்க!"

"நானா ஒட்டுக் கேக்கப்போறேன்? எல்லாம் என் நேரம்தான்'


"இந்த விசயத்தில் யாரையும் நம்ப முடியாது!"

"இதெல்லாம் அநியாயம் கண்ணன்! எங்க ஊர்ல நான் பார்க்காத சண்டையா!"

"அப்படிச் சொல்லுங்க, ஆண்ட்டி!"

"ஹா ஹா ஹா! இதென்னவோ அவங்களுக்குப் பெரிய க்ரிடிட் மாதிரி சொல்ற!"

"எல்லாம் ஒரு நாலெட்ஜ்தானே?"

"கெட்டவார்த்தை பத்தி தெரிஞ்சுக்கிறதா? நாலெட்ஜா? நாசமாப் போச்சு போ!"

"சரி சொல்லுங்க, இந்தக் கடைக்குப் போகனும்!"

"இந்தக்கடைக்கா! இந்தக் கடைக்கு நான் வரலைப்பா!"

"ஏன், கண்ணன்?"

"ஐயோ! ஒரு முறை ஸ்டெய்ஸியோட போயி மாட்டிக்கிட்டேன். ஏதாவது ஒரு புடவையை உங்க இடுப்பிலே கட்டி அனுப்பிடும் அங்கே உள்ள அம்மா! மோஸ்ட் அன்னாயிங் கேரக்டர்! குஜராத்ல இருந்து இறக்குமதி பண்ணி இருக்கானுக நம்மள கொல்றதுக்குனே"

"ஸ்டெய்ஸிக்கு கண்ணன் புடவை வாங்கி கொடுத்தாரா, பிருந்தா?"

"நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா? அவளுக்கு எல்லாம் தெரியும்ங்க காயத்ரி!"

"ஆமா புடவை வாங்கி அவளுக்கு கட்டி விட்டாரு! வேற என்னென்ன பண்ணினாருனு எனக்குத் தெரியாது"

"நெஜம்மாவா!"


"அவ வெளையாட்டுக்கு சொல்றா ஆண்ட்டி! இவதான் கட்டிவிட்டாள்"

"சரி எனக்கு அதை சொல்லுங்க!"

"என்ன சொல்ல?"

"அந்த உங்க ஊரு கெட்ட வார்த்தைதான்"

"பக்கத்தில் வா!"

"வந்தாச்சு. சொல்லுங்க!"

" "

"இது என்ன தமிழா?"

"ஆமா பச்சைத் தமிழ்! வெளியிலே சொல்லிடாதே!"

"இதுக்கு என்ன அர்த்தம்?"

"ரொம்ப மோசமான கெட்ட வார்த்தை. ஆண்ட்டிதான் இதில் எக்ஸ்பர்ட் போல இருக்கு! அவங்க கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ!"

"எனக்கு உங்க ஊர் கெட்ட வார்த்தை எல்லாம் தெரியாது! நான் திருச்சி பக்கம், கண்ணன்!"


"நீங்க கெட்ட வார்த்தையில் எக்ஸ்பர்ட்னு நெனச்சேன்!"

"என்னிடம் உதை வாங்கப் போறீங்க கண்ணன்!"


"நீங்க அடிச்சா நான் தாங்க மாட்டேன்.. சரி சரி போய் ஷாப் பண்ணிட்டு வாங்க!"

"நீங்க எங்கே போறீங்க?"

"எங்கேயும் போகல! இப்படியே வெளியிலே நிக்கிறேன்! அதான் செல் ஃபோன் இருக்கே! ஆண் பண்ணிதான் வச்சிருக்கேன்."

"கண்ணன்! திருட்டு தம் அடிக்கப் போயிடாதீங்க!"

"நான் ஸ்மோக் பண்றது இல்லங்க, காயத்ரி!"

"சும்மாதான் சொன்னேன்! நாங்க வர கொஞ்ச நேரம் ஆகலாம்! திட்டாமல் இருங்க!"


"டேக் யுவர் டைம், ஆண்ட்டி! யு டூ பிருந்த்!"

-தொடரும்

Thursday, May 20, 2010

டேர்ட்டி ஹரி! (திரை விமர்சனம்)


Harry Callahan (Clint): Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy.

The Mayor: Intent? How did you establish that?

Harry Callahan (Clint): When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross!
[walks out of the room]

The Mayor: He's got a point.
-----------------------

மேலே உள்ள Hilarious quote டன் ஆரம்பிக்கிறேன்! க்ளிண்ட் ஈஸ்ட்வுட் "outlaw" வாக ஸ்பகட்டி வெஸ்டர்ன் படங்களில் நடித்து ஒரு சூப்பர் ஸ்டார் ஆன பிறகு ஒரு "டேர்ட்டி" போலிஸ் இண்ஸ்பக்டர் ஆக நடிக்க ஆரம்பித்த முதல்ப்படம் இது.

சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் உள்ள ஒரு போலிஸ் சப் இண்ஸ்பக்டர்தான் ஹேரி கல்லஹான்(க்ளிண்ட் ஈஸ்ட்வுட்). மனைவி ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்து போய்விடுவாள். விடோவெர் என்பதால் எதற்கும் துணிந்து "ரஃப் அண்ட் டஃப்" "காப்"பாயிருப்பார். இவர்கூட வேலை செய்யும் கோ-வொர்க்கர்கள் எளிதில் பல இன்னல்களுக்கு ஆளாவாங்க. இறந்தும் போவதுண்டு. அப்படி ஒரு கலீக் அடிபட்டவுடன் புதிதாக ஒரு ஹிஸ்பானிக் டெப்ட்டி, க்ளிண்ட்டுடன் வேலை செய்ய "அசைன்" பண்ணி இருப்பாங்க! அப்போ அவர் க்ளீண்ட் பத்தி விசாரிப்பார் ..

Gonzales (புது மெக்ஸிகன் டெப்ட்டி): There is one question, Inspector Callahan: Why do they call you "Dirty Harry"?

De Georgio (மூன்றாமவர்): Ah that's one thing about our Harry, doesn't play any favorites! Harry hates everybody: Limeys, Micks, Hebes, Fat Dagos, Niggers, Honkies, Chinks, you name it.

Gonzales (புது மெக்ஸிகன் டெப்டீ): How does he feel about Mexicans?

De Georgio (மூன்றாமவர்): Ask him.

Harry Callahan: Especially Spics (மெக்ஸிக்கன்ஸ்).

----------------------------

சான்ஃப்ராண்ஸிஸ்கோ மேயருடன் க்ளிண்ட் பேசும்போது!

The Mayor: Well let's have it.

Harry Callahan: Have what?

The Mayor: A report! What have you been doing?

Harry Callahan: Well, for the past three quarters of an hour I've been sitting on my ass in your outer office waiting on you!
__________________

மேலே கொடுக்கப்பட்டவையிலிருந்து தெளிவாக சொல்லப்படுவது என்னனா Clint is just RUDE and RUTHLESS COP!

படம் ரொம்ப சிம்பிள் ப்ளாட்தான். போலிஸ் இண்ஸ்பக்டர் ஹீரோவாகவும், ஒரு சைக்கோ கொலைகாரன் வில்லனாகவும். இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் நடக்கும் வார்தான் படம். அதில் as usual க்ளிண்ட் தான் வெற்றிவாகை சூடுவார்!

அந்த கொலைகாரன் ஒரு "வைட் மேல்". தன்னை ஸ்கார்பியோ என்கிற பேரில் அழைத்துக்கொள்வான். முதன் முதலில் ஒரு கொலை செய்துவிட்டு, சிட்டி மேயர்க்கு ஒரு message கொடுப்பான். அதாவது எனக்கு இவ்வளவு பணம் தரனும் இல்லைனா இதுபோல் தொடர்ந்து கொலை செய்துகொண்டே இருப்பேன் என்று ஒரு மிரட்டல்.




ஆரம்பத்திலேயெ கொலை செய்ற ஆள் யாருனு இந்த வில்லனை கண்டு பிடித்துவிடுவார்கள். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அவனை ஜெயிலில் போட முடியாது.போதுமான எவிடெண்ஸ் இல்லாததால் அவனை பிடிச்சு உள்ளே போட முடியாது. சட்டம் ஒழுங்கு, போலிஸ்காரர்கள் எந்த அளவுக்கு க்ரிமினல்களை தண்டிக்கலாம், அவங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கு என்பவைதான் இடையூறுகள், ப்யூராக்ரஸிதான் பிரச்சினை.

ஒருமுறை க்ளிண்ட் அந்த கொலைகாரனை அர்ரெஸ்ட் பண்ணி, அடிச்சு டார்ச்சர் பண்ணி போலிஸ் கஸ்டடியில் அடைத்தபிறகும், சட்டம், ஒரு சிட்டிஷனுடைய உரிமை, காண்ஸ்ட்டிடூஷன் என்று சொல்லி அவனை வெளியே விட்டுடுவாங்க! கீழே அவனைஏன் ஜெயிலில் போட முடியாது என்பதற்கான காரணங்கள்.

------------------

Harry Callahan: Are you trying to tell me that ballistics can't match the bullet up to this rifle?

District Attorney Rothko: It does not matter what ballistics can do. This rifle might make a nice souvenir. But it's inadmissible as evidence.

Harry Callahan: And who says that?

District Attorney Rothko: It's the law.

Harry Callahan: Well, then the law is crazy.

Harry Callahan: You know, you're crazy if you think you've heard the last of this guy. He's gonna kill again.

District Attorney Rothko: How do you know?

Harry Callahan: 'Cause he likes it.


------------------------------------------------------------------

Harry Callahan: There must be something you can get him on.

Judge Bannerman: Without the evidence of the gun and the girl, I couldn't convict him of spitting on the sidewalk.


--------------------------------------------------------------------------------

District Attorney Rothko: You're lucky I'm not indicting you for assault with intent to commit murder.

Harry Callahan: What?

District Attorney Rothko: Where the hell does it say that you've got a right to kick down doors, torture suspects, deny medical attention and legal counsel? Where have you been? Does Escobedo ring a bell? Miranda? I mean, you must have heard of the Fourth Amendment. What I'm saying is that man had rights.

Harry Callahan: Well, I'm all broken up over that man's rights!

-------------------

போதுமான எவிடென்ஸ் இல்லாததால் அவனை வெளியே விட்டுடுவாங்க!

அந்தக்கொலைகாரன் வெளியே வந்தவன் ஒரு ஷாப் ஓனரை அடைச்சு அவனிடம் இருந்து துப்பாக்கி பணத்தை பறித்துப்போவது அழ்கா ரொம்ப ரியலிஸ்டிக்கா எடுத்து இருப்பாங்க.

கடைசியில் மறுபடியும் ஒரு ஸ்கூல் பஸ்ஸை குழந்தைகளுடன் கடத்திப் போய் மேயரை கால் பண்ணி இவ்வளவு பணம் வேணும் என்பான். க்ளிண்ட்டிடம் மேயரும், உயர் அதிகாரியும் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து, குழந்தைகளை காப்பாத்த சொல்லுவார்.,

Chief: Callahan? You willing to take the money to him?

Harry Callahan: When will you people stop messing around with this guy? He's gotta be stopped now!

The Mayor: He's got a busload of kids and I can't take that chance. I gave my word of honor on it and he will not be molested! That's a direct order, Callahan!

Harry Callahan: Well, you can just get yourself another delivery boy.

க்ளிண்ட் என்னால அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டு அவனை தன் தனிப்பட்ட முயற்சியால் விரட்டிப் பிடிச்சு, அவனை சுட்டு கொன்னுட்டு தன் போலிஸ் பேட்ஜை தூக்கி எறிவதுடன் முடியும்!

சோர்ஸ்: ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளவைகள். IMDB- memorable quotes லயிருந்து எடுக்கப்பட்டவைகள்.

Wednesday, May 19, 2010

ஐயா, தயவு செய்து என் பொண்டாட்டியை நீங்களே..

இன்னிக்கு மதர்ஸ் டே, அட்லீஸ்ட் விஷ் கூட பண்ணமாட்டியா நீ?

அப்படியா? சாரிமா, மறந்துப்போச்சு!

இதெல்லாம் கரெக்ட்டா மறந்துடு! இப்படி ராத்திரியானா தொந்தரவு பண்ணறியே, இதை மட்டும் மறக்கமாட்டியா?

இதை மறப்போமா? நீ வேணா தூங்கு, நான் பார்த்துக்கறேன்

எருமைமாடு மாதிரி என் மேலே வந்து விழறியே, எப்படி தூங்கறதாம்? பகலெல்லாம் உன் பையன் தொந்தரவு, ராத்திரியானா நீ!

உன்னை யாரு என்னை கல்யாணம் பண்ண சொன்னது? வேற நல்லவனா பார்த்து பண்ணியிருக்கலாம் இல்லை?

ஹலோ, எனக்கு எவ்வளவு மார்க்கெட் வேல்யூ இருந்தது தெரியுமா? எத்தனை பேரு என் பின்னால சுத்தியிருக்காங்க தெரியுமா? இப்போ ஏதோ இப்படி இருக்கேன்!(இரவில் மெல்லிய வெளிச்சத்திலும் அவன் முகம் கருத்தது நன்றாக தெரிந்தது. எனக்கு ரொம்ப சிரிப்பு! இத்தனை சீக்கிரம் ஒருவனை பொறாமை பட வைக்க முடியுமா?)

எத்தனை பேரு சுத்தியிருக்காங்க? நீ எத்தனை பேரை லவ் பண்ணி இருக்கே? நம்ம கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னால கூட ஏதோ இருந்ததாக சொன்னியே, அதை பத்தி கொஞ்சம் சொல்லேன்!

ஏன் உனக்கு சொல்லனும்? பொறாமையா?

பொறாமையா, சே சே அதெல்லாம் கிடையாது! உன்னை முதலில் பார்க்கும் போதே நினைச்சேன்! இவ்வளவு அழகா இருக்காளே கூட நல்ல வேலையில் வேற இருக்கா- நிறைய பேரு இவ பின்னால சுத்தியிருப்பானுங்களேனு நினைச்சேன்(குரலில் சற்று முன் இருந்த உற்சாகம் நன்றாக வடிந்திருந்தது)

சரி சொல்றேன், கேட்டுட்டு அப்புறம் இதை வைச்சு டார்ச்சர் பண்ணக்கூடாது!

சத்தியமா பண்ணமாட்டேன்! சீக்கிரம் சொல்லுடி செல்லம்(இதற்கு மேல் எழுதினால் அடுத்தவர் ப்ரைவசி கெடும் என்பதால் கதையை சென்சார் செய்கிறேன்)

"................ அப்புறம்.........."

சீக்கிரம் முடிவை சொல்லு, முடிவு இருக்கு தானே?

(அவன் கண்களில் மிளிரும் கவலை+பொறாமை+தவிப்பை ரொம்ப ரசித்தேன்)கொஞ்சம் பொறுடா, அவசரப்படுத்தாதே! "...................."

பச் அவ்வளவு தானா? நான் ஏதோனு பயந்துட்டேன்!

ஏதோனா? என்ன நினைச்சே?

ரியலாவே செக்ஸ் இருக்குமோனு பயந்தேன்!

அப்படி ரியலா இருந்தா என்ன, என்னை டிவோர்ஸ் பண்ணிடுவியா?

அடிப்பாவி! உன் வாயை மவுத்வாஷ் போட்டு கழுவு!

அப்புறம் என்னவாம்?

ஒன்னும் இல்லை, வருத்தப்பட்டிருப்பேன்! என் ஈகோ டேமேஜ் ஆகியிருக்கும், வேறென்ன! என் பொண்டாட்டிக்கு நான் தான் முதல் அனுபவமா இருக்கனும்னு நினைக்கிறது தானே காமன் இண்டியன் மெண்டாலிட்டி, நான் மட்டும் எக்செப்ஷனா என்ன?

அப்படி நினைக்கிறது சரியா?

தப்புதான்! இருந்தாலும் நான் ரொம்ப லக்கி!

இப்போ நான் அவரோடு பேசினால் உனக்கு ஓகேவா?

சாதாரணமா ப்ரெண்ட்ஸ் மாதிரினா ஓகே!

என்ன இவ்வளவு தாராளம்?

எல்லாம் ஒரு சின்ன லாஜிக் தான்! நீ ரொம்ப ஸ்லிம்மா, நல்ல வேலையில் இருக்கும் போதே வேண்டாம்னு சொன்னவங்க, இப்போ நீ முப்பது பவுண்டு ஏறி, ஒரு குழந்தை பெத்து, பார்ட் டைம்மா வேலை பார்க்கறே, he is definitely not going to go for you now!

ரொம்ப கொழுப்புடா உனக்கு! ஒருவேளை உன் லாஜிக் தப்பாயிடுச்சுனா?

தப்பாயிடுச்சுனா என்ன? "ஐயா தயவு செய்து என் பொண்டாட்டியை நீங்களே வச்சுக்கோங்க" னு சொல்லிட்டு நான் ஊர்ல இருந்து ஏதாவது 18 வயசு பொண்ணா பார்த்து பண்ணிப்பேன்!

முதல்ல என் மேலே இருந்து கையை எடு, தள்ளிப்படு! என்ன ஹஸ்பண்ட் நீ?

கண்ணுக்குட்டிக்கு கோபமா? சரி கண்ணை மூடு!

எதுக்கு? அன்னிக்கு மாதிரியா? அதுக்கெல்லாம் இப்போ எனக்கு மூட் இல்லை. ரொம்ப இன்சென்சிடிவ் நீ!

நீ நினைக்கிற மாதிரி இல்லை, ப்ளீஸ் கொஞ்சம் கண்ணை மூடேன்!கையை நீட்டு

என்ன இது?

கண்ணை திறந்து பார் இப்போ! ஹாப்பி மதர்ஸ் டே ஸ்வீட் ஹார்ட்!

ஹேய் ரொம்ப அழகாயிருக்கு! மறக்கலையா நீ?

லூசு, இதைப்போய் மறப்பேனா?

எவ்வளவு இது?

அதெல்லாம் உனக்கெதுக்கு? டாக்ஸ் ரிட்டன்ஸ் வந்தது இல்லையா? அதான்!

உனக்கும் ஏதாவது வாங்க வேண்டியது தானே?

நான் என்ன பொண்ணா நகையெல்லாம் போட? எனக்கு வேண்டியதெல்லாம் தான் உன் கிட்ட இருக்கே, தினமும் கொஞ்சம் கொஞ்சமா வாங்கிக்கறேன்!

(சிரிப்பு) ரொம்ப தேங்க்ஸ்டா!

எதுக்கு?

வேறெத்துக்கு, கிப்ட்டுக்கு தான்! அடிவாங்கப்போறே நீ!

ஷங்கரால் முடியும்! மணிரத்னத்தால் முடியாது!

எனக்கு இயக்குனர் மணிரதனத்தை பார்த்துட்டு ஒரே குழப்பம்! இயக்குனர்களுடைய கனவு அல்லது மோட்டிவேஷன் என்னனு தெரியலை! இவர்களுக்கு வேண்டியது புகழா ? இல்லை பணமா? இல்லை சுதந்திரமா? இல்லை எல்லாமேவா?

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படங்களில் அல்மோஸ்ட் 90% இவருடைய சொந்தத் தயாரிப்பில்தான். மெட்ராஸ் டாக்கீஸ் இல்லைனா ஜி வி ஃபில்ம்ஸ்! ராவணனும் இதற்கு விதிவிலக்கல்ல! அதாவது இவருக்கு ஒரு இயக்குனர் அந்தஸ்து கிடைத்தவுடன்! அதற்கு முன்னால் பலர் படங்களை இயக்குனராக மட்டும் வேலை செய்து இயக்கியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளர் எதுக்குப் படம் எடுக்கிறாங்க? ரொம்ப சிம்ப்பிள்! வியாபாரம்! பணம் சம்பாரிக்க! அதைத்தான் எ வி எம் பண்ணுறாங்க, பாலாஜி பண்ணினார், கவிதாலயா மூலம் பாலசந்தர் பண்ணினார். இவர்களைப் பொருத்தவரையில் சினிமா ஒரு வியாபாரம். கலைத்தொண்டெல்லாம் கெடையாது! அதற்கு தேவையான நடிகர்களை, இயக்குனரை, இசையமப்பாளரை ஹயர்ப் பண்ணி பணத்தைப்போட்டு படத்தை எடுத்து லாபம் சம்பாரிக்கிறாங்க. படம் ஃப்ளாப் ஆனா நொடிச்சுப் போவதும் உண்டு.

பொதுவாக இயக்குனர்களில் ஒரு வகை என்னனா இயக்குனராக பணியாற்றி சம்பளத்தை வாங்கிக்கொண்டு புகழையும் பேரையும் அவார்ட்டையும் பெறுவது. எஸ் பி எம், கே எஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, பி வாசு மற்றும் ஷங்கர் எல்லாம் இந்த வகைதான். இதில் இவர்கள் திறமையை நம்பி ஒரு ஆள் பணம் போடனும், இவர்களை படத்தை சீக்கிரம் முடிக்கச்சொல்லி ப்ரெஷெரை பண்ணுவாங்க. பெரிய நடிகர்னா, அவர்கள் ஐடியாவையும் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிப்போகனும்.

ஆனால் மெளனராகத்தில் இருந்து மணிரத்னம் இயக்கியபடங்கள் (>95%) இவர் அல்லது இவர் அண்ணந்தான் தயாரிப்பாளர். இதனால் இவருக்கு பல நன்மைகள் இருந்தாலும், இது ஒண்ணும் பெரிய ஸ்மார்ட் மூவ் னு சொல்ல முடியாது! ஸ்மார்ட் மூவ் வாயிருந்தால் ஏன் ஜி வி இந்த நிலைமைக்கு ஆளானார்?

புகழ் வந்தவுடன், நம்ம மக்களுக்கு எல்லாமே அவங்க கண்ட்ரோல்ல இருக்கனும் என்கிற மிகப்பெரிய ஈகோ வந்துவிடுகிறது என்றுதான் சொல்லனும். அதாவது இவர்களால் அடுத்தவர்களுடன் இணைந்து வேலை செய்யமுடியாது. இன்னைக்கு கமலோட மணிரத்னம் சேர்ந்து வொர்க் பண்ன முடியுமா? இல்லை ரஜினியோட சேர்ந்து வொர்க்ப் பண்ண முடியுமா? இது ஒரு மாதிரியான வியாதி! இதனால் இவர்களால் தெளிவா ஒரு படத்தில் ஃபோக்கஸ் பண்ண முடியுது. இவர்களுக்கு ஒரு திருப்தி இருக்கு! இவர்களால் இவர்கள் திறமையை, க்ரியேட்டிவிட்டியை வெளிக்கொண்டுவர முடியுது!

தயாரிப்பாளர் மணிரத்னம் ஒரு வியாபாரி தான்! இயக்குனர் மணிரத்னம் ஒரு பெரிய ஈகோயிஸ்ட் தான்! இவரால் ஷங்கர் போல் ஒரு எ வி எம் படத்தையோ, அல்லது சன் டி வி படத்தையோ அல்லது எ ஆர் ரகுமான தவிர இன்னொரு இசையமப்பாளரைப் போட்டு வெற்றி பெரமுடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

கலைஞன் என்றாலே "அகம்பாவம்" தலைவிரித்தாடுவது என்னவோ தவிர்க்க முடியாதுதான். இளையராஜாவின் ஈகோ உலகத்துக்கே தெரியும்! கமலஹாசனின் ஈகோ சிறுகுழந்தைக்கு கூடத் தெரியும்! ஆனால் மணிரத்னத்தின் ஈகோ அவருக்கே தெரியுதோ என்னவோ! கவனிச்சுப் பார்த்தால் அவருடைய பல இயலாமைகள் விளங்கும்! ஆமாம் இயக்குனர் ஷங்கரால் ஒரு இயக்குனராக மட்டும் தன்னை அர்ப்பணிக்க முடியும்! அது மணிரதனத்தால் முடியாது! இல்லை இல்லை மணிரத்னம் பெரிய கலைத்தொண்டு செய்றவர் என்றெல்லாம் பேசினால் அது வெட்டிப் பேச்சு!

Monday, May 17, 2010

தரமான விகடன் விமர்சனம்!


பழமையானது எல்லாமே தரமானதாக இருப்பதாக பெரியவர்கள் சொல்வார்கள். "இன்னைக்கு எல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராப் போச்சு! காலம் மாற மாற தரம் குறைஞ்சுக் கிட்டேதான் போகுது" என்பதைக் பெரியவர்கள் சொல்லும்போது கேட்கும் இளையதலைமுறைகள் கோபப்படுவதுண்டு! இதே இளைய தலைமுறையை ஒரு 30 வருடமான பிறகு தரமானவர்கள் என்றும் சொன்னாலும் சொல்வார்கள் என்பதை யோசிப்பார்களா என்னனு தெரியலை!

ஆனால் உண்மையில் பழசெல்லாம் தரமானதெல்லாம் கெடையவே கெடையாது! தீண்டாமையையும், சதி யையும், சிறுவர்கள் திருமணங்களையும் நடத்திய நம் கலாச்சாரம் தரமானதானு கேட்டால், இல்லைனுதான் சொல்லனும். அதனால பழசெல்லாம் தரமானதா இருந்ததாவும் இன்னைக்கு எல்லாம் நாறிப்போயிட்டதாக சொல்வது முற்றிலும் உண்மையல்ல!

ஒரு சில விசயங்களில் பழசு நல்லாத்தான் இருந்தது இன்னைக்கு குரங்கு கைல போன பூமாலை மாதிரி ஆயிப்போயிடுச்சு! சினிமா விமர்சனம் என்றால் விகடன் விமர்சனம் மதிக்கத்தக்கதாக ஒரு காலத்தில் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இன்னைக்கு கண்ட அரைவேக்காடுகளும் விகடன் விமர்சனக்குழுல நொழஞ்சு விகடன் விமர்சனம் மற்றும் மதிப்பெண்களில் எந்தவிதமான குவாலிட்டியும் இல்லாமல் போயிடுச்சு என்பது உண்மைதான்!

சரி, விகடன் அந்தக்காலத்தில் என்னத்த ஒழுங்கா விமர்சனம் எழுதிக் கிழிச்சாங்க? னு கேக்கிறவர்களுக்காக தோண்டி எடுத்த ஒரு பழைய விமர்சனம் இங்கே !

---------------------

Review by Ananda Vikatan Dated 3.9.1978

சினிமா விமர்சனம்

லைப்பிலேயே இலக்கிய மணம் கமழ் கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, முரட னான அண்ணனையும் பூப்போன்ற தங்கையை யும் 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பு குறிப்பிடு வதாகத் தோன்றினாலும், முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன் தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்ப தையே அது குறிக் கிறதோ?

தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத் திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கி றோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடு கிறார்.

மேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு திரும் பும் காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ''நான் வரமாட்டேன், போ!'' என்று குழந்தை போலச் சிணுங்குவதும், பிறகு தங்கையிடம், ''நீ என்னை அடிச்சுடுடா'' என்று கெஞ்சுவதும் அருமை.

எஞ்சினீயர் தன்னை மணந்துகொள் ளக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும் ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம் புகும் பாசம்... அப்பப்பா! இத்தனையும் கொட்டி நடித் திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை: ஷோபிக்கிறார்!

சரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர் வேடம். மேல் மட்ட அதிகாரி களுக்கே உரித்தான கொச்சைத் தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது.

சரியான சாப்பாட்டுராமி மங்கா! அடைக்கலம் புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது 'படாபட்'டுக்கு! வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில் கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு அந்நியோன்னியத்தை மிகைப் படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.

காலை உதயத்தின் அழகு, வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா. கண்களில் ஐஸ் வைத் துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி!

நான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத் திருக்கிறார் இளையராஜா. 'ராமன் ஆண்டாலும்' பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின் மத்தியிலும் போட்டிருக்கும் 'லேலே... லேலே...' கோரஸ், காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான 'மூட்' உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.

இதுவரை கதை -வசன கர்த்தாவாக மட்டுமே இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு...

எஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர் கோள்மூட்ட, ஒவ் வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச் சொல் வதா...

நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சித மாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா...
இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்!

சொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரை யில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!



-------------------------

சோர்ஸ்: இது ரஜினிவிசிறிகள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது! அவர்களுக்கு என் நன்றிகள்! :)

Saturday, May 15, 2010

“காண்டம் குஷ்பு” தி மு க வில் சேர்ந்தார்!


"கற்பைப் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க, கல்யாணத்துக்கு முன்னாலே உடலுறவு கொள்ளும்போது கவனமா காண்டம் மட்டும் பயன்படுத்துங்க" னு தான் குஷ்பு சொன்னார். இதில் கற்பை மட்டும் பிடிச்சுத் தொங்கி காண்டத்தை தவறவிட்ட தமிழர்கள் பலர்!

யுஎஸ் யுனிவேர்சிட்டி லைப்ரரிகளில் வெண்டிங் மெஷினில் காண்டம் விற்பதை நான் பார்த்திருக்கேன். மொதல்ல சிப்ஸ், கோக்குடன் காண்டமும் இருப்பதைப் பார்த்ததும் ஷாக்!!!! ஆமா, லைப்ரரியில் எதுக்கு இதெல்லாம் விக்கிறாங்கனு நண்பர்களிடம் சொன்ன போது, என் அறியாமையை கேலி செய்யாமல் ஒரு சில அமெரிக்கர்கள் விளக்கினார்கள். "அதாவது ஸ்டூடண்ட்ஸ் இதுபோல் தப்பு செய்வது சகஜம். ஆனால் இந்த வயதில் அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்கள் வாழ்க்கை பாழாப்போயிடும். காண்டம் பயன்படுத்தினால் எச் ஐ வி யும் இவர்களுக்குள் பரவாமல் இருக்கும். அதனால தப்பு பண்ணினாலும், இதுபோல் பெரிய வம்பில் மாட்டாமல் இருப்பது நல்லதுதானே?" என்று விளக்கினார்கள்.

இன்னைக்கு குஷ்புவின் எயிட்ஸ் விழிப்புணர்வு முயற்சி மூலம் காதல் முற்றி காமத்தில் இறங்கும் நம்ம மாணவர்கள், புரிந்து கொண்டது, செக்ஸ் வச்சுக்கிட்டா தப்பில்லை என்பது மட்டும்தானா? இல்லைனா காண்டம் பயன்படுத்தி செக்ஸ் வச்சுக்கிட்டா தப்பில்லைனுதான் குஷ்பு சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு கவனமாக காண்டம் பயன்படுத்துறாங்களா? அப்போ இன்றைய மாணவர்கள் கடைகளில் போய் காண்டம் வாங்க பயப்படுவதோ வெட்கப்படுவதோ இல்லையா?

இதை ஏன் நான் இத்தனை பெருசு படுத்துறேன்னா நம்ம ஆளு எதையுமே ஒழுங்கா புரிஞ்சுக்க மாட்டான். "காண்டம் பயன்படுத்தினால் செக்ஸ் நல்லாவே இல்லை, நீ பேசாமல் ஏதாவது ஓரல் காண்ட்ராசெப்டிவ் எடுத்துக்கோ"னு அறிவுரை சொ ன்னாலும் சொல்லுவானுகள் லூசுப்பயலுகள். I mean the whole point of giving a “license” to have premarital sex is for controlling the spread of HIV. Did our younger generation understand that correctly? They are not stupid to have sex with oral contraceptive protection??

நம்ம உச்சநீதி மன்றமே "குஷ்பு சொன் னதில் தப்பில்லை, கற்பாவது கழுதையாவது. கடவுளே இரண்டு பெண்டாட்டிக்காரர், கல்யாணதிற்கு முன்னாலேயே காதலியிடம் உடலுறவு- காண்டம் பயன்படுத்தாமல்- கொண்டிருக்கிறார், அப்படியிருக்கும்போது நம்ம எல்லாம் என்ன? சாதாரண மனிதர்கள்தானே? கடவுள் மாதிரி முட்டாள்தனமாக காண்டம் பயன்படுத்தாமல் இருக்காமல், 100% எச் ஐ வி ப்ரூஃப் காண்டம் பயன்படுத்தி உடலுறவு கொள்ளுங்கள். அதெல்லாம் தப்பே இல்லை!" என்று சொல்லி விட்டார்கள்.

சரி குஷ்பு தப்பே செய்யலைனாலும், குஷ்புவை இந்த சட்டப்பிரச்சினை யிலிருந்து யாரு காப்பாத்தினார்கள்? கடவுளா? இல்லை நம்ம அரசியல் வாதிகளா? சோனியா காந்தியா இருக்குமோ ? அவர்தானே இத்தாலி நாட்டுக்காரர். அங்கேயெல்லாம் ப்ரிமேரிட்டல் செக்ஸ் எல்லாம் பெரிய விசயமே இல்லையே! ஆனால் கத்தோலிக்க மதம் கல்யாணததிற்கு உடலுறவு கொள்வதை சரினு சொல் லலையே னு சொல்றீங்களா? மதம் சொல்றதை யெல்லாம் யாரு ஃபாலோ பண்ணுவா?

அப்போ சோனியாதான் ப்ரிமேரிட்டல் செக்ஸ்லாம் ஒண்ணுமில்லைனு நம்புவதால் குஷ்புவை காப்பாத்தினாரா? ஒருவேளை அதற்கு நன்றிக்கடனா குஷ்பு காங்கிரஸில் சேருவாரா? அப்படித்தான் ஆகும் என்று பலரும் நினைத்ததை தப்பு என்று நிரூபிப்பதுபோல இன்று தி மு க வில் சேர்ந்துவிட்டார் குஷ்பு! என்னைப் பொறுத்தமட்டில் இது குஷ்புவின் “ஸ்மார்ட் மூவ்” டு சேவ் ஹெர் பட்!
பார்க்கலாம் தி மு க வின் உதவியுடன் இவர் எவ்வளவுதூரம் காண்டம் விற்பனையை அதிகமாக்கி எச் ஐ வி பரவுவதை தடுக்கிறார் என்று!

Wednesday, May 12, 2010

முடிந்தால் சிரித்துவிட்டு சிந்திக்கவும்!

"என்னண்ணே, நம்ம வினோத் யார்கூடயும் பேசவே மாட்டேன்கிறாரு?"

இன்னும் ரொம்ப பேசுற டைப்தான். பேசுறதுக்கும் டைப்தான் அடிப்பாரு! அதனால அமைதியா இருக்க மாதிரி தெரியும்! டெய்லி ஆண்லைன்ல கெட்ட கெட்ட வார்த்தையாப் பேசி ஒரு பத்து சண்டையாவது போடாமல் இருக்க மாட்டாரு!

"என்னண்ணே இது அநியாயம்! நம்ம சங்கருக்கு எந்தவிதமான குடிப்பழக்கமோ, சிகரெட் பழக்கமோ, இருந்ததாவோ, இல்லைனா யார்ட்டயும் தப்பா நடந்ததாவோ இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அவரைப்போயி அவர் ஒய்ஃப் டைவோர்ஸ் பண்ணுறாங்க!"

அவருக்கு இதெல்லாம்விட பெரிய அடிக்ஷன்! அதுக்குப்பேர் இண்டெர்னெட் அடிக்க்ஷனாம்! பேசாம, இண்டெர்னெட்டையே கட்டிக்கோ என்ன விட்டுடுனு அந்தம்மா சொல்லிடுச்சாம்!

"கமலஹாஷன் மட்டும் எப்படினே இப்படி புதுப் புது ஐடியாவோட வர்றாரு? அவரு பெரிய ஜீனியஸ்ணே!"

ஹாலிவுட் படம் நெறையா பார்த்தால் நீயும் ஜீனியஸா ஆயிடலாம்!

"அமெரிக்காவில் சிகரெட் குடிக்கிறது கெடுதினு சொல்றாங்க ஆனால் இப்போ கஞ்சாவ லீகலாக்கப் போறாங்களாம்! என்னண்ணே இது நியாயம்? கஞ்சால இருந்து வர்ற புகை உடம்புக்கு நல்லதா? இல்லைனா லங் கேண்சர் கொடுக்காதா?"

பணம் தேவைப்படுது! என்ன பண்றது? நம்ம புரட்சித் தலைவர் கூட படத்துக்குப் படம் குடிக்கக்கூடாதுனு மக்களை பாட்டுப்பாடி, அட்வைஸ் பண்ணி திருத்தினாரு. ஆனால் அவரே, எம்பதிலே சாராயக்கடைய திறந்து மதுவிலக்கை எடுத்துட்டாரு! அதுக்காக அவர் செஞ்சது தப்புனு ஆயிடுமா?

"வாலி எழுதிய பாடல்கள்தான் எம் ஜி ஆர் ஆட்சியைப் பிடிக்க உதவுச்சாமில்ல?"

ஆமா, வாலிதான் "தரைமேல் பிறக்க வைத்தாய்" "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்" "நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்" எல்லாம் எழுதினாரு. ஆனா, அதே வாலிதான், "எடுத்தான் தடையை (மது விலக்கை) திறந்தான் கடையை (சாராயக்கடையை) இனிமேல் ரொம்ப ஜாலி" னு எம் ஜிஆர் மதுவிலக்கை தளர்த்தியபோது எம் ஜி ஆரை சாடி ஒரு பாட்டையும் எழுதிவிட்டாரு! "It is not personal, just business" they say!

Tuesday, May 11, 2010

எள்ளுனா எண்ணெய்யா நிக்கிற! கடலை கார்னர் (53)

“எங்கே பார்க்ப்பண்ணப்போறீங்க, கண்ணன் ?”

“ரோட்ல நிறுத்தினால் தொந்தரவுடா. நான் அந்த பார்க்கிங் லாட்லயே பார்க் பண்ணிடுறேன். They may charge couple of bucks!”

“சரி பண்ணுங்க.”

“அதென்ன பிருந்தாவ “டா”போட்டு கூப்பிடுறீங்க!”

“சும்மாதான் அன்பா! உங்களையும் வாடா போடானு கூப்பிடவா ”

"ஐயோ வேணாம்!"

"ஹா ஹா ஹா! கண்ணன் இப்படித்தான் என்னை நல்லா ஐஸ் வச்சு அப்பப்போ குளிரவைப்பாரு, ஆண்ட்டி!”

"ஏன் பிருந்தா பையனாக்கண்டா இருக்குமோனு பயந்துட்டீங்களா? பொண்ணுதான் அவ!"

"அதெப்படி ரொம்ப உறுதியா சொல்றீங்க, கண்ணன்?"


"ஆண்ட்டி, என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்களும் கண்ணனோட சேர்ந்து கெட்டுப்போயிட்டீங்க"

"ஏய்! ஷாப் பண்ண நானும் உங்களோட வரனுமா? உங்களுக்கு ப்ரைவசி வேணாமா?”

"ப்ரைவசியா? ஷாப் பண்ணவா?"

"இல்லை ஏதாவது லேடீஸ் ஐட்டம்லாம் வாங்கும்போது நான் எதுக்கு?"

“அப்படியெல்லாம் எதுவும் இங்கே வாங்கல. மொதல்ல ஆண்ட்டிக்கு ரெஸ்ட் ரூம் போகனுமாம்!”

“சரி, இந்த மக்டொனால்ட்ஸ்ல போய் போயிட்டு வரச்சொல்லு!”

“சரி, நான் போயிட்டு வர்ரேன்! இங்கேயே இருங்க! பிருந்தாவை ரொம்ப குளிர வச்சுடாதீங்க, கண்ணன்”

********************

“ஆமா, நீங்கமட்டும் இங்கே இருந்து என்ன பண்ணப்போறீங்க?”

“கார்லயே உக்காந்து உன்னைப்பத்தி ஃபேண்டசைஸ் பண்ணலாம்னு பார்த்தேன்!”

“என்ன ஃபேண்டசைஸ் பண்ணப் போறீங்க?”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு? ரொம்ப மோசமா இருக்கும்!”

“அப்படியா? ரொம்ப மோசமாவா? நல்லவிதமாவே என்னைப்பத்தி யோசிக்க மாட்டீங்களா?”

“எனக்கும் ஆசைதான். ஆனா முடியலையே.. உனக்கும் அதானே பிடிக்கும்?'

“என்னப்பத்தி நீங்க மோசமா ஃபேண்டசைஸ் பண்றது எனக்கு பிடிக்குமா? ”

“ஆமா! சரி நீ இங்கே வாடி!”

“எங்கே?”

“ஆண்ட்டிதான் இல்லைல முன்னால வந்து உக்காரு!”

“வந்தாச்சு!”

“டோரை க்ளோஸ் பண்ணு! விண்டோஸையும்தான்!”

“எதுக்கு கதவை அடைக்கச் சொல்றீங்க?”

“சும்மா தான்! ஏ சி ஆண் ஆகி இருக்குல? இங்கே பக்கத்தில் வாடி!உன்ன கடிச்சு திண்ணுட மாட்டேன்”

”கடிச்சு முழுசா சாப்பிட்டா பரவாயில்லையே!”

“சாப்பிட்டா பரவாயில்லையா? என்னடி சொல்ற?”

“நீங்க அன்னைக்கு என்னை எங்கே கடிச்சீங்க, ஞாபகமிருக்கா? இங்கே!'"

“அது ஜெண்ட்லாத்தானே?. வலிச்சதா?'

“வலிக்கல, அங்கேலாம் கடிச்சா வேறென்னமோ பண்ணும்! அதுக்கு ஒழுங்கா "மருந்து" போடனும்.”

“சரி, நானும் உங்க பின்னாலேயே வரனுமா?”

“ப்ளீஸ், ஐ வாண்ட் யு டு! இல்லைனா எனக்கு போர் அடிக்கும்.”

“என்னை ரொம்ப டீஸ் பண்ணிட்டே இருக்க! அதான் ...”

“என் மேலே கோபமா, டார்லிங்?”

“இல்லையே. இப்படி டார்லிங்னு சேர்த்துச் சொன்னா எப்படி கோபம் வரும்? சரி, உன் பின்னாலேயே நடந்து வர்றேன். கொஞ்சம் ரெண்டடி தள்ளி பின்னால நீ நடக்கிற அழகை ரசிச்சுக்கிட்டே வரவா?”

“இதெல்லாம் கொஞ்ச நாள்ல போயிடுமா?”

“அபப்டினா?”

“இல்லை கல்யாணம் செய்து சில வருடங்கள் ஆச்சுனா இதெல்லாம் போயிடுமா?”

”எது?'

“இந்தமாதிரி எல்லாம் முன்னால நடக்கவிட்டு என்னை ரசிப்பது?'

“ஏன் அப்படிகேக்கிற?'

“இல்லை காயத்ரி ஆண்ட்டி அப்படித்தானே சொல்றாங்க?”

“அதெல்லாம் போகாத மாதிரி பார்த்துக்குவோம். ஆமா, என்னை கட்டிக்கப் போறியா?”

“ஐ வாண்ட் டு ஹேவ் யுவர் பேபி, கண்ணன்! தட்ஸ் ஆல்”

"அதுக்காகத்தான் கல்யாணமா பண்ணுவாங்க?"

"ஆமா. பேபியை கடவுளை கும்பிட்டா பெறமுடியும்? நீங்கதான் அதுக்கு ஆகவேண்டியதை செய்யனும்"

"அப்போ சும்மா "எ ஐ" பன்ணிக்கிறியா?"

"எ ஐ னா?"

"artificial insemination!"

"Artificial எல்லாம் வேணாம்!"

"செக்ஸ்தான் வேணும்னா சொல்ல வேண்டியதுதானே? உங்க பேபி வேணும்னு எதுக்கு சொல்ற?"

"எனக்கு ரெண்டும் வேணும்! இல்லை எல்லாமே வேணும்"

"சரி, இன்னைக்கு என்ன சல்வார்ல வந்து இருக்க?”

“சும்மாதான். நல்லா இருக்கேனா?”

“ரொ ம்ப செக்ஸியா இருக்கடி!”

“அப்படினா?”

“யு டேர்ன் மி ஆன்! பகக்த்தில் வா! என்ன லிப்ஸ்டிக் இது?”

“ஏன் பிடிக்கலையா?”

“உன் உதடு நல்லா அழகா இருக்கு! டேஸ்ட் பண்ணிப் பார்க்கவா?”

“லிப்ஸ்டிக்கையா?”

“ஆமா.. ஒட்டுமா? இட் ஸ்மெல்ஸ் குட்”

“ஒட்டுமானு தெரியலையே?”

“கிஸ் பண்ணிப் பார்க்கவா?”

“ம்ம்..அப்போ த்தானே தெரியும் ஒட்டுதா இல்லையானு?”

“ஏண்டி இப்படி இருக்க?”

“எப்படி?”

“எள்ளுனா எண்ணெயா நிக்கிற?”

“ரொம்ப நாளாச்சு இல்லையா? உங்க கிஸ் எப்படி இருக்கும்னு மறந்து போச்சு!”

“ ”

"இப்போ எப்படி இருக்கும்னு தெரியுதா?'

“இப்படியெல்ல்லாம் பப்ளிக்ல கிஸ் பண்ணலாமா?”

“டிண்டெட் விண்டோ ஸ்தானே?”

“ஒட்டி இருக்கா?”

“இல்லை! இப்படி பார்க்கிங்லாட்ல கிஸ் பண்ணும்போது கையை இங்கே வைக்காதீங்க”

“எங்கே?”

“இங்கே!”

“ஏன்? அங்கே வச்சா என்ன?”

“சொன்னா புரிஞ்சுக்கோடா பொறுக்கி! பார்க்கிங் லாட் வச்சு மூடைக் கிளப்பி விடுற!”

"ஏய் ஆண்ட்டி வர்றாங்க!"

******************************

"சரி போகலாமா?"

"என்ன அது உங்களுக்கு மட்டும் ஐஸ் க்ரீமா?"

"சும்மா போய் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண இஷ்டம் இல்லை. அதான் இதை வாங்கிட்டு வந்தேன்!"


"நல்ல பாலிஸிங்க, காயத்ரி!"

"ஆமா நீ எப்படி முன்னால போய் உக்காந்த , பிருந்தா?"

"ரொம்ப ப்யம்மா இருக்குனு சொன்னாரு. அதான் முன்னால உக்காந்தேன்"

"கண்ணன்! உங்க உதட்டில் லிப்ஸ்டிக் ஒட்டி இருக்கு! தொடச்சிக்கோங்க"


"ஏய் நான் கேட்டதுக்கு இல்லைனு சொன்ன!" கண்ணன் அவசரமாக உதட்டை தொடச்சான்.

"ஹா ஹா ஹா! மாட்டினீங்களா! லிப்ஸ்டிக் எல்லாம் இல்லை! நான் சும்மாதான் சொன்னேன்"


"இப்படி பொய் சொல்றீங்களே, காயத்ரி!"

" பாவம் கண்ணன், அசடு வழியிறாரு!"

'ஹா ஹா ஹா"


"சரி வாங்க போவோம்!"

-தொடரும்

Monday, May 10, 2010

சிம்புத்தேவனுக்கு ஏன் இந்த கொலைவெறி?


“ஆனாலும் சிம்புத்தேவனுக்கு இதெல்லாம் தேவையில்லண்ணே.!”

“இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமா?”

“ஆமா, தமிழ்ல ஒரு வெஸ்டேர்ன் படம்! கேக்கவே ஒரு மாதிரியா இருக்கு இல்ல? எதுக்கு இந்த மாதிரி ஒரு ஆசை? நாலு வெஸ்டெர்ன் படம் பார்த்துட்டு நானும் வெஸ்டர்ன் எடுக்கிறேன்னு இப்படி ஒரு படம்.”

“1992 ல க்ளிண்ட் அன்ஃபர்கிவன் எடுத்தாரு. அவருக்கு முதல் ஆஸ்கர் அதிலேதான் கெடச்சது. வெஸ்டெர்ன் படத்துக்கு ஆஸ்கரா நு எல்லாரும் ஆடிப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் க்ளிண்ட் லெவெலே தனியாயிடுச்சு!”

“இப்போ என்ன சொல்றீங்க? சிம்புத்தேவனுக்கு அதே மாதிரி தமிழ் வெஸ்டெர்னுக்கு நேஷனல் அவார்ட் கெடைக்கும்னு சொல்றீங்களா? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லண்ணே!”

“இல்லப்பா, அண்ஃபர்கிவெனை ஸ்பகெட்டி வெஸ்டெர்ன் நு சொல்ல முடியாது. அதில் நெறையா மேட்டர் சொல்லியிருப்பாரு! வெற்றிக்குக் காரணம் சும்மா "கன்ஃபைட்" எல்லாம் கிடையாது. ஒவ்வொரு கேரக்டரையும், அவர்களுடைய ஸ்ட்ரெங்த் மற்றும் வீக்னெஸ்களை அழகா அந்தக்கதையிலே சொல்லியிருப்பார்.”

“லாரெண்ஸும், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் ஒண்ணா அண்ணே? ரஜினியும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும்னு ஒண்ணுனுகூட சொல்ல முடியாது! க்ளிண்ட் லெவெல் தனி லெவெல்”

“ஆமா இது ரொம்ப சீரியஸ் படமா?”

”லாரண்ஸ்தான் Fastest gun the frontier! 24ம் புலிகேசி இல்லை இது!”

“அப்போ ஜம்புவா?”

“அதென்ன ஜம்பு?”

“கர்ணன் இயக்கத்தில் ஜெய்சங்கர் பண்ணிய படுகேவலமான ஒரு படம் அது!”

“கர்ணனா? யார் அவரு?”



“ஒரு கேமராமேன் மற்றும் படுமட்டமான இயக்குனர். ஜெய்சங்கர் பண்ணிய படுகேவலமான தேர்ட் ரேட்டெட் படம்”

“இது காமப்படம்லாம் இல்லை, சீரியஸான முயற்சிதான்!”

“ஒருவேளை அடிமைப்பெண் மாதிரி ஒரு முயற்சியா?”

“அடிமைப்பெண் வெஸ்டெர்ன் படமா?”


“இல்லை! ஒரு மாதிரியான காட்டுவாசிகள் பற்றிய உலக நடப்புக்கு சம்மந்தமே இல்லாத படம்! ஆனால் மிகப்பெரிய வெற்றிப்படம். பாடல்கள் எல்லாம் சிறப்பா இருக்கும்!”

“ஏண்ணே எம் ஜி ஆரும் லாரெண்ஸும் ஒண்ணா?”

“நல்ல கதையுடன் படம் போரடிக்காமலிருந்தால் யார் நடிச்சாலும் பார்ப்பாங்கப்பா! வெஸ்டர்ன்னா என்ன? மாஃபியானா என்ன?”

“படம் படுகேவலமா இருக்குண்ணே! அமெரிக்கண்ஸ்க்கே வெஸ்டெர்ன் ஒரு மாதிரி செலெகக்டிவா ஒரு சிலருக்குத்தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க! நம்ம மக்கள்ல யாரு வெஸ்டெர்ன் பார்க்கப்போறா?”

“பாவம் சிம்புத்தேவன்! இது விழுந்தா எந்திரிப்பாரா?”

“கஷ்டம்தான். ஆனால் இந்தப்படம் பார்க்கிற நம்மதான் பாவம்ண்ணே!”

Thursday, May 6, 2010

என்ன பண்ணப் போறீங்க? ரேப்பா? கடலை கார்னர் (52)

"ஏய்! நீ முன்னால உட்காரலையா, பிருந்த்? "

"எதுக்கு முன்னால வர?"

"நீதானே என்னோட ஜி பி எஸ், பிருந்த்!"

"வேணாம்! நீங்க பக்கத்தில் இருந்தா ஆண்ட்டிய வச்சுக்கிட்டே அங்கே இங்கே கையை வைப்பீங்க!"

"அடிப்பாவி! கையை வைப்பேனா! ஏதோ பொறுக்கியைப்பத்தி சொல்றமாதிரி சொல்ற!"

"அவ எதுக்கு பொய் சொல்லனும் கண்ணன்?"


”அதானே?” ஆமா அன்னைக்கு எதையோ பார்க்கச்சொல்லி என் பட்ல கிள்ளுனீங்க! ஞாபகம் இல்லையா?"

"அது யார் தப்பு?"

"என் தப்பா?"

" நீ என்ன சொன்ன?! உன் வாய வச்சுண்டு சும்மாவா வர்ற? தலையும் இல்லாமல் வாலும் இல்லாம ஏதோ என்னை மட்டமான ஆளு மாதிரி அவஙககிட்ட ஒரு இமேஜ் உண்டாக்குற!""


"அப்போ அவ பொய் சொல்லலனுதானே சொல்றீங்க, கண்ணன்?"


"வரவர இவ நெறையா சேர்த்து விடுறா! நான் இண்ணொசண்ட்! இவர் என்னை கற்பழிச்சாருனு சொன்னாலும் இல்லைனு நான் எப்படி ப்ரூவ் பண்ணமுடியும்?"

"டி என் எ டெஸ்ட்லாம் பண்ணலாம் இல்லையா?"

"காண்டம் போட்டு கற்பழிச்சாருனு சொல்லுவா!"

"நீங்க செஞ்சாலும் செய்வீங்க!"

"சரி நீ பின்னாலேயே உன் "பிக் பட்"டை வச்சு உட்காந்து தொலைடி! ஐ வில் ஹேவ் லெஸ் டிஸ்ட்ராக்ஷன்!"

"பாருங்க ஆண்ட்டி! பச்சை பச்சையா பேசுறதுனா இவருக்கு ரொம்பப் பிடிக்கும்!"

"இருக்கிறதைத்தானே சொன்னேன்?"

"கண்ணன் ஒரு சரியான "பர்வ்" ஆண்ட்டி!"

"அப்படித்தான் தோனுது, பிருந்தா! ஹா ஹா ஹா."

"நீங்க இவளுக்குப் பக்கவாத்தியமா? உங்க ஹோஸ்ட்க்கு தேங்க்ஃபுல்லா இருக்கீங்க போல இருக்கு! எல்லாம் என் நேரம்தான், போங்க!"

"இல்லைனு சொல்லாதீங்க! அன்னைக்கு ஸ்டேஸியும் சொன்னா இல்ல?"

"யாரு அது ஸ்டேஸி, பிருந்தா?"

"அதான் சொன்னேன்ல ஆண்ட்டி! என் ஃப்ரெண்டு! இவரோட கேர்ள் ஃப்ரெண்டு!"

"அப்போ நீ?"

"நான் என்னனு சொன்னேன் இல்ல, ஆண்ட்டி? அப்பப்போ இவருக்கு அதுக்கு மட்டும் நான்"

"ஆமா ஆமா!"

"என்ன ஆமா ஆமா? ஸ்டெய்ஸி சும்மா ஒரு குட் ஃப்ரெண்ட்ங்க, காயத்ரி! சும்மா ஏதாவது சொல்லி டீஸ் பண்ணுவாள்."

"அவகிட்ட ஜொள்ளுவிடுறதுனா கண்ணனுக்கு ரொம்ப இஷ்டம்!"

"அமெரிக்கனா?"

"ஆமா ஒரு வைட் கேர்ள்! இவர்தான் அவளுக்கு பாஸ்! ஆனா அவதான் பாஸ் மாதிரி பேசுவா!அவங்களுக்குள்ள என்ன நடக்குதுனு யாருக்குத் தெரியும்?"


"ஆமாமா இந்த ஆம்பளைங்கள நம்பவே முடியாது, பிருந்தா! ஹா ஹா ஹா"

"காயத்ரி ஆண்ட்டி போனதும் உன்னை என்ன பண்ணுறேன் பாரு!"

" என்னை என்ன பண்ணப்போறீங்க? ரேப் பண்ணப்போறீங்களா?"

"பண்ண வச்சிடாதே!"

"ஐ ஆம் லுக்கிங் ஃபார்வேர்ட் டு இட்!"

"கண்ணன் சிக்னல் மாறிடுச்சு! பின்னால் உள்ளவ ஹாங்க் அடிக்கிறா!"

"எல்லாம் இவளாலதான்! பின்னால இன்னொரு பிம்போ! எங்கே இருந்து வர்ராளுகனு தெரியலை"

"ஏன் இவ்வளவு ஸ்லோவாப் போறீங்க!"

"ஹாங்க் அடிச்சா இல்லையா? ஐ வாண்ட் டு பிஸ் ஹெர் ஆஃப் நவ்! பிட்ச்!"

"இப்போத்தான் தெரியுது எதுக்கு ஆளாளுக்கு உங்களை "ஃபக் யு" னு ஃப்ளிப் பண்ணுறாளுகனு! ஹா ஹா ஹா"

"அவசரமாப்போயி என்னத்தை கிழிக்கப் போறாளாம்?'

"அதுக்காக? சிக்னல் மாறியதும் தூங்கிக்கிட்டு இருந்தால் உங்களை எழுப்ப வேணாமா?"

"இதுக்குத்தான் உன்னை முன்னால உட்கார்ச்சொன்னேன்?'

"உக்காந்தா?"

"இது மாதிரி ஒரு ஒய்ட் ட்ராஷ்க்கு சப்போர்ட் பண்ணும்போது உன்னை பட்ல இல்லை வேற இடுப்பிலே கிள்ளலாம் இல்லையா?"

"உங்களை விட்டா எங்க வேணா கிள்ளுவீங்க! தப்புப்பண்ணியது நீங்கதானே?'

"இதெல்லாம் பெரிய தப்பு இல்லை!"

"அவ உங்களை ரைட்ல பாஸ்பண்னி திட்டிக்கிட்டே போறா! ஹா ஹா ஹா"

"போயி தொலையட்டும்!"

"இதான் லேக் ஷோர் ட்ரைவ்ங்க காயத்ரி!"

"சிகாகோ அழகான ஊர்தான்!"

"ஆமா டெவான் ஸ்ட்ரீட் மட்டும்தான் கேவலமா இருக்கும்!"

"இந்தியாவுக்கே போன மாதிரி இருக்கும்! இல்லையா கண்ணன்?"

"ஆமா, நம்ம ஆட்களை விட்டா அமெரிக்காவையும் இந்தியாவாக்கிடுவானுக!"

-தொடரும்

Tuesday, May 4, 2010

கொறிப்பதற்கு நொறுக்குகள் (யு கே-வில் சுறா)!


* யு கே பாக்ஸ் ஆஃபிஸில் விஜயின் 50 வது படமான சுறா, கலக்சன் ஓ கே யா இருக்கு! இந்தப்படம் 7 திரையரங்குகளில் திரையிடப்பட்டு (7 X 6331), 44318 பவுண்ட்ஸ் கலக்சன் ஆகி இந்த வாரம் யு கேவில் 22 இடத்தைப் பெற்றுள்ளது. இது ஏற்க்குறைய வேட்டைக்காரன் கலக்சன் அளவுதான். ஆனால் குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டு அதே அளவு கலக்சன் வந்திருக்கு. ஈழத் தமிழர்களுக்கு அவர் மேலிருந்த கோபம் குறைந்துவிட்டதா?




* நியூயார்க் டைம் ஸ்கொயர் ல குண்டுவைக்க முயன்ற பயங்கரவாதி என நம்பப்படும் Mr. Faisal Shahzad, பிடிபட்டு உள்ளார். இவர், தன்னை பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் 5 மாதங்கள் ட்ரயின் பண்ணியதாக ஒத்துக்கொண்டார். இவர் பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவ்ருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உண்டு.

* குஷ்புவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர்கள்/அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஒண்ணு இருக்கு. நம்ம கடவுள்களே ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிட்டாங்கனு சொல்லி உச்சநீதிமன்றம் ஜஸ்டிஃபை பண்ணியது படுகேவலமான ஒண்ணு. கடவுள்கள் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் நிற்கவைக்க முடியாது. Unlike human beings Gods do not have to obey or follow law!

* கமலஹாசன் முதல்வருக்கு சோப் அடித்ததை பெருசுபடுத்துவது ரொம்ப அதிகம்னு தோனறுகிறது. ஒருவரைப் பற்றி மேடையில் பேசனும்னா சோப் அடிக்காமல் வெளக்கெண்ணையா கொடுக்க முடியும்? வயதில் முதிர்ந்த திரு கருணாநிதியை அவர் தமிழ் அறிவைச் சொல்லிப் பாராட்டுவதில் எனக்கெதுவும் தவறாக தோணவில்லை! அஜீத் பேசியதை முதல்வர் பெருசுபடுத்தாமல் விட்டு இருக்கலாம்தான். அதுக்காக பாராட்டுமேடையில் போய் கமலஹாசனும் முதல்வரை திட்டனும்னு எதிர்பார்க்கிறதெல்லாம்...

* ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் அதிகமாக விற்பனையான கார்கள் லிஸ்ட் இங்கே!
Top 10 Best-Selling Cars April 2010:

Ford F-Series: 40,946
Honda Accord: 31,766 (including 2,455 Crosstours)
Chevrolet Silverado: 29,618
Toyota Corolla: 27,932
Toyota Camry: 27,914
Honda Civic: 25,042
Ford Escape: 19,146
Ford Fusion: 18,971
Hyundai Sonata: 18,536
Honda CR-V: 16,661

கடந்த மாதம் மேலே இருந்த டொயோட்டா கேம்ரி இந்த மாதம் ஹாண்டா அக்கார்ட் க்கு கீழே போய்விட்டது!

Sunday, May 2, 2010

திருநங்கை! ஹி இல்லை, ஷி!!

"என்னம்மா அமெரிக்காவிலிருந்துகொண்டு விஜய் டிவி பார்க்கிற, பத்மா? அதுவும் கம்ப்யூட்டரிலேயே!" என்றார் சம்மர்க்கும் அமெரிக்கா வந்திருந்த வயதான மாமனார்.

"இல்ல மாமா "இப்படிக்கு ரோஸ்"னு ஒரு ஷோ. நம்ம ஊரில் உள்ள பிரச்சினைகளையெல்லாம் தெரிஞ்சுக்க முடியுது. நல்லாயிருக்கும்! சும்மா ஆண்லைன்லயே பார்க்கலாம்"

"தப்பா நெனச்சுக்காதே இந்த ரோஸ்.. இவரை பெண்பால்தான் என்று ஏற்றுக்கொண்டார்களா? ஆணா பிறந்து ஏன் பெண்ணாகிவிட்டார் இவர்?"

"இவர் ஆணாகப் பிறந்தாலும் தன்னை பெண்ணுனு உணர்கிறார் போல, மாமா! இவரைப்போல் இருப்பவர்களை ட்ரேன்ஸ்ஜெண்டர்னு சொல்றாங்க. தமிழ்ல திருநங்கைனு சொல்றாங்க! இவரை "ஷி" னுதான் சொல்லனும் "ஹி" இல்லை, மாமா"

"நான் இந்த ஷோவே பார்க்கிறது இல்லைம்மா!"

"ஏன் உங்களுக்குப் பிடிக்கலை?"

"இல்லம்மா இவரைப் பார்க்கும்போது எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருதும்மா! அதான் பார்க்கிறது இல்லை!" அவர் குரல் தழுதழுத்தது.

"பழசா? என்னனு கொஞ்சம் விபர்மா சொல்லுங்களேன்?"

"இது 35 வருசத்துக்கு முன்னால நடந்த கதைம்மா, பத்மா. உன் ஹஸ்பண்ட் சுந்தருக்கு ஒரு அண்ணன் இருந்தாம்மா. அவன்தான் எனக்கு மூத்த மகன். பேரு சேகர்!"

"ஏதோ கொஞ்ச வயதில் தற்கொலை செய்து இறந்துட்டதாக சுந்தர் சொல்லியிருக்காரு மாமா!"

"ஆமாம்மா. 21 வய்திலேயே இந்த உலகத்தைவிட்டுப் போயிட்டான். தற்கொலை என்பதால போஸ்ட்மார்ட்டம் பண்ணி, போலிஸெல்லாம் வந்து எல்லாரையும் விசாரிச்சு.. ஒருவழியா எல்லாத்தையும் சரிக்கட்டி எப்படியோ முடிஞ்சது."

"தற்கொலை கேஸ்னா போஸ்ட்மார்ட்டம் பண்ணித்தானே ஆகனும், மாமா?"

"ஆமாம்மா. சேகரும் இந்த ரோஸ் மாதிரித்தான் இருந்தாம்மா, பத்மா. பொண்ணு மாதிரி சேலை கட்டி டாண்ஸ் ஆடுறது, பொண்ணு மாதிரி மேக்-அப் போடுவது, தலையில் பூ வைத்துக்கொளவ்து, இப்படி வித்தியாச மாகத்தான் இருந்தான்ம்மா. சுந்தர் மாதிரி அவன் கெடையாதும்மா"

"ஒருவேளை அவரும் ட்ரேண்ஸ்ஜெண்டரா இருந்திருக்கலாமா மாமா?!"

"அப்படித்தான் இப்ப தோனுதும்மா. ஆனா முப்பதஞ்சு வருடம் முன்னால அவனை யாராலையும் புரிஞ்சுக்க முடியலை! அவனை தெருவில், பள்ளியிலே, காலேஜிலே எல்லா இடத்திலேயும் பலவிதமாக கேலி பண்ணி நரக வேதனை அனுபவிச்சாம்மா, பத்மா!"

"நீங்களாவது புரிஞ்சுக்கிட்டிங்களா மாமா?"

"எனக்குக்கூட ஒரே குழப்பம்மா. ஏன் இப்படி இருக்கான்? அவனை வச்சு என்ன பண்ணுறதுனே தெரியலை. அவனுக்கு எப்படி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது? யார்ட்டப்போயி பொண்ணு கேக்கிறது? என்ன செய்றதுனே புரியலைம்மா!"

"நம்ம ஊர்ல இதையெல்லாம் இப்பக்கூட புரிஞ்சிக்கிறதில்லை மாமா. இது இயற்கையிலேயே வருகிற ஒண்ணு. "

"இல்லம்மா ஆணா பிறந்தவன், ஆண் உடலுறுப்புகள் உள்ள ஒருவன், பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணுவதைப் பிடிக்காமல் நானே ஒவ்வொருதர்ம் ரொம்ப திட்டி இருக்கேன்ம்மா! அப்புறம் மனசுக்கு கஷ்டமா இருக்கும்."

"நம்ம ஊர்ல இடதுகை பழக்கம் உள்ளவர்களைக்கூட, இடது கை பழக்கம் உள்ளவர்களாக வர விடுவதில்லையே மாமா! ஒரு ஆண் பெண்போல நடந்தால் எப்படி புரிஞ்சிக்குவாங்க? இதை புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான்! வித்தியாசமாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ்க்கை கஷ்டம்தான்"

"நானாவது அவனை புரிந்து நடந்து இருக்கனும். இப்போ யோசித்துப் பார்த்தால் அவன் தற்கொலைக்கு நானும் ஒரு காரணம்தான்ம்மா!"

"அவரை சரியா புரிந்துகொள்ளாமல்த்தான மாமா திட்டி இருக்கீங்க? என்னவோ நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் வருகிற ட்ரேண்ஸ்ஜெண்டர்களை (திருநங்கைகளை) யாவது சரியாகப் புரிந்து கொள்ளுவோம் மாமா!"

"ஆமாம்மா காலம் கடந்து வந்த ஞானோதயம்தான்!" என்றார் கண்ணீரோடு.

"இப்போ எல்லாம் நம்ம ஊர்களிலேயே இவர்களை புரிஞ்சு நடந்துக்கிறாங்க மாமா!"

"உண்மைதான்ம்மா பத்மா! 40 வருடம் முன்னாலே இப்படி ஒரு ரோஸை ப்ரோக்ராம் கொடுக்க வச்சிருக்க மாட்டாங்க!"

"மனிதர்களை மனிதர்கள் சரியாகப்புரிந்துகொண்டால், அதைவிட பெரிய முன்னேற்றம் உலகத்தில் கெடையாது!"

Saturday, May 1, 2010

நீங்க ஜெண்டில்மேனா? இல்ல, சுயநலவாதியா?

* உங்க காதலி உங்களை டம்ப் பண்ணியதும் அவளைத்திட்டாமல் உங்க கிட்ட உள்ள குறைகளை பூதக்கண்ணாடி போட்டு பெருசுபண்ணி உங்களை நீங்களே கொறைச்சுக்குவீங்களா?

* உங்களுடைய "ரைவல்" உங்களை "பீட்" பண்ணி ஒரு உலகத்தர அவார்ட் வாங்கியதைப் பார்த்து, போகட்டும், என்ன இருந்தாலும் இவர் நம்ம “கலீக்” ஒரு “இந்தியன்” அதுவும் “தமிழன்” என்று உங்க எதிரி வெற்றி பெற்றைதை நினைத்து பெருமையடைவீங்களா?

* உறவுகொள்ளும்போது உங்களை சந்தோஷத்தைவிட உங்க பார்ட்னரை சந்தோஷப்படுத்தி அவரை முதலில் உச்சுக்கு கொண்டு சென்று அவர் அடையும் இன்பத்தைப் பார்த்து ரசிப்பீங்களா?

* கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து, அவர்கள் உணர்ச்சிகளை மதித்து வாழும் பெரிய தியாகியா நீங்கள்?

* யாரையும் பலவந்தப் படுத்தியதே இல்லையா? காமமா இருக்கட்டும், காதலா இருக்கட்டும், நட்பா இருக்கட்டும், எதிலுமே அடுத்தவரை உங்கள் விருப்பத்திற்கு இணங்க வலியுறத்த மாட்டீங்களா?

* உங்களைப் பற்றி உங்க "கலீக்ஸ்" மற்றும் “நண்பர்கள்” பொறணி பேசுவதை ஒட்டுக்கேக்கப் பிடிக்காதா?

* பழிக்குப் பழி வாங்கனும்னு வெறி வந்தாலும், கொஞ்ச நேரம் யோசித்தபின் “தொலையிறான் விடு” இதோட இவன் “அக்கவுண்ட்”டை க்ளோஸ் பண்ணி இவனிடம் இருந்து ஒதுங்கிப் போவோம்னு முடிவுக்கு வருவீங்களா?

* பொய் சொல்லப் பிடிக்காதா?

* சினிமால வர்ற சோகமான காட்சிக்கு அழுதுடுவீங்களா?

* மனசறிஞ்சி யாருக்கும் துரோகம் பண்ணியதில்லையா?

* எதிரியா இருந்தாலும் அவர்கள் துன்பத்துக்கு உள்ளாவதை ரசிக்க முடியாதா? பரிதாபப்படுவீங்களா?

இப்படியெல்லாம் நீங்க இருப்பதால் உங்களை நீங்களே பெரிய ஜெண்டில்மேன் நு நெனச்சுக்கிட்டிங்கனா அதை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உண்மை என்னனா சாதாரண ஆறறிவு உள்ள மனிதர்கள் எல்லாமே உங்களைப் போலதான் நடந்துகொள்ளுவாங்க. நீங்க மட்டுமல்ல உங்களைப் போல நடந்துகொள்ளும் பல கோடி மக்கள் வாழ்றாங்கனு தெரிஞ்சுக்கோங்க! அதனால் உங்களை நீங்களே ஜெண்டில்மேனாக நினைத்து உயர்த்திக் கொள்வது "gentleman-ness" கெடையாது.

மேலும் இன்னொரு கோணத்துல பார்த்தால், நீங்க ஏன் இப்படி நடக்கிறீங்கனா, உங்க மனசாட்சிக்கு பயந்த ஒரு கோழை நீங்கள்! இதுபோல் நடக்காமல் வேறு மாதிரி இதற்கு எதிர்மாறாக நடந்தால், உங்க நிம்மதி போயிடும்! உங்களுக்கு தூக்கம் வராது! அதனால, உங்களை ஜெண்டில்மேன் நு சொல்வதைவிட உங்களை சுயநலவாதினு யாராவது சொன்னால் அவர்கள் சொல்வதில் தவறில்லைனு புரிஞ்சுக்கோங்க- just like a gentleman!

பின்குறிப்பு: Disclaimer: I am not able to find an "equal word" for women. Anyway, I dont mean only "men" here. It is meant for "gentlewoman" as well!