Friday, February 3, 2012

எஸ் ரா விழாவில் ரஜினிக்கு என்ன வேலை?!


உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு பழைய ரஜினியாகத் தெரிகிறார். நடிப்பில்தான் எல்லாரையும் கவர்ந்தார், இப்போ மேடைப் பேச்சிலும் இன்று நாள்வரை ரஜினியை சோடை சொல்ல முடியவில்லை! ரஜினியின் வெற்றிக்குக் காரணம், தன்னடக்கம் மற்றும் பொய் பேசாமை, இது இரண்டுமதான். "கடவுள் நம்பிக்கை", "இறைபயம்" என்று சிலர் நினைப்பதை என்றுமே என்னால் ஏற்கலாகாது.

மறுஜென்மம் எடுத்து வந்திருப்ப்பதால் இறைவன் பக்தி இன்னுமே அதிகமாகியிருக்கு! கடவுள் இருக்கிறார் என்று சொல்லிச் சொல்லி ஊர்ஜிதம் பண்ணிக்கொள்கிறார்.

எடிசன் பற்றி சொல்லும்போது கொஞ்சம் நெருடலாவே இருந்தது. கடைசியில் அந்தக் கதை உண்மையோ இல்லை கற்பனையோ? எதுவாக வேணா இருந்துட்டுப் போகட்டும், அதில் உள்ள விசயம் இதுதான் என்று சொல்லியதால், தன்னை விமர்சனங்களில் இருந்து காப்பாற்றிக் கொண்டார்.

எஸ் ராவுக்கும் ரஜினிக்கும் பாபா படத்தில் இருந்து ஒரு மாதிரி நட்பு உண்டாகியிருக்கிறது என்பதைப் பற்றியும், தனக்கு இங்கே, இலக்கியவாதிகள் முன்னால், பேச பயமாக இருக்கிறது என்கிற உண்மையான வாக்கியங்கள் ரஜினியை இமயத்திற்கு மேலும் உயர்த்திக் கொண்டு சென்றுவிட்டது!

இலக்கியவாதி எஸ் ரா, ஏழையாக இருந்தாலும் தன்னைவிட உயர்ந்தவன் என்று எஸ் ராவைப் புகழ்ந்து தன்னை இறக்கியதால் இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு சென்றுவிட்டார் ரஜினி என்றே சொல்லனும்!

ரஜினியின் வெற்றிக்குக் காரணம், ஆன்மீகமோ, இறைநம்பிக்கையோ கெடையாது, honesty is the best policy என்கிற அவர் "பாலிஸி"தான்! என்பது ஆத்திகர்களுக்கு நான் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய ஒன்று. :)

2 comments:

Radhakrishnan said...

நான் கூட 'இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை' அப்படின்னு சொல்லிட்டீங்கனு நினைச்சேன்.

ரஜினி மனதில் பட்டதை சொன்னவிதம் ரசிக்கும்படியாக இருந்தது.

வருண் said...

***நான் கூட 'இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை' அப்படின்னு சொல்லிட்டீங்கனு நினைச்சேன். ***

அப்படித்தான் நெனச்சேன்.. பேச்சைகேட்ட பிறகு, பரவாயில்லை ரஜினினு தோனுச்சு! நெகட்டிவாக் நெனச்சதாலே சுமாரா அவர் பேசியிருந்தாலும் நல்லாப் பேசியதாகத் தோணுச்சு! :-)