Tuesday, February 7, 2012

மறுபடியும் ரஜினி - தீபிகா படகோன்! கோச்சடையான்!


ரஜினி இந்தத் தள்ளாத வயதிலும் புதுப்படம் பண்ணப் போறார்னா என்னைப் போன்ற ஒருசிலருக்கு அது ஒரு மிகப்பெரிய சந்தோசமான விசயம்தான் . ராணா படத்தை ஆரம்பித்தபோது அதில் எனக்கு அதிக "interest" வந்ததுக்குக் காரணம் ரஜினியோட நம்ம தீபிகா படகோன் சேர்ந்து நடிப்பதாக முடிவு செய்யப்பட்டவுடன் தான். பச்சையா உண்மையைச் சொன்னால், I find her extremely attractive, and HOT! I think Rajni-Deepika on screen chemistry will work great!

ராணா படம், ரஜினி உடல்நிலை காரணமாக நிறுத்தப் பட்டபோது, ரொம்ப வருத்தமாத்தான் இருந்துச்சு. "சே ரஜினியும் தீபிகா படகோனும் சேர்ந்து நடிக்கிற படம் பார்க்க முடியாமல் போச்சே" என்கிறதுதான் அந்த வருத்தத்துக்கு ஒரு முக்கியக் காரணம். இனிமேல் ந்ன்னத்தை ரஜினி உடல்நலம் தேறி வந்து ..இவரோட நடிச்சு, இதெல்லாம் நடக்கும்னு நெனைக்கவே இல்லை!

ஆமா, ரஜினிக்கு 62 வயசுதான், தீபிகா படகோன் க்கு 26 வயதுதான்! நல்லாவே தெரியும். எனக்கு பிடிக்குது அவர்களுக்குள் உள்ள "கெமிஸ்ட்ரி" இப்போதைக்கு. படம் பார்த்துட்டு என்ன சொல்வேன்னு தெரியவில்லை! ஆனால் படம் பார்க்க இந்த ஜோடி ஒரு பெரிய் உந்துதல்தான். இன்றைய சினிமா உலகில் அது ரொம்ப முக்கியம் !

ஆமா, நிஜவாழ்வில் இந்தளவுக்கு வயது வித்தியாசம் இருக்கும் ஜோடி என்பது சிரிக்கத் தக்கதுதான். ஆனால், சினிமாதானே? இதில் எல்லாமே நடிப்புத்தான். எல்லாமே "ரீல்" தானே? அதனால பரவாயில்லைனு தோனுது. ரஜினிக்காக என் "லெவெலை" இன்னும் இறக்கிக்கொள்வது என் பலஹீனம்னு கூடச் சொல்லலாம்!

ரெண்டு நாள் முன்னாள கோச்சடையான் "ஸ்டில்" வெளியிட்டபோதுகூட, நண்பர் கிரியுடைய "ப்ளாக்"க்கு போயி ஒண்ணும் எழுதத்தோணவில்லை. ஆனால் இப்போ தீபிகா படகோன் தான் ராணாவில் ரஜினி ஜோடினு சொன்னதும், கோச்சடையானில் ஆர்வம் வந்துருச்சு. :) எதையாவது எழுதுவோமே னு எழுதுறேன்.

என்னைப்பொறுத்தவரையில் எந்திரனிலேயே தீபீகா படகோனைப் போட்டு இருக்கலாம்! படம் இதைவிட நல்லாப் போயிருக்கும்! :) ஆமா இப்போ சொல்லுவீங்களே? :)))

3 comments:

Jayadev Das said...

\\பச்சையா உண்மையைச் சொன்னால், I find her extremely attractive, and HOT! I think Rajni-Deepika on screen chemistry will work great!\\ அதெப்படிங்க என்னை மாதிரியே நீங்களும் நினைக்கறீங்க!! [ஆனா இந்த செங்கோவி மாதிரி பய புள்ளைங்ககிட்ட தீப்ஸ் அழகுன்னு சொன்னா அப்படியான்னு கேட்குதுங்களே!! ரசனை இல்லாத பயலுங்க...!!]

Jayadev Das said...

\\இனிமேல் ந்ன்னத்தை ரஜினி உடல்நலம் தேறி வந்து ..இவரோட நடிச்சு, இதெல்லாம் நடக்கும்னு நெனைக்கவே இல்லை!\\ இப்போ கம்பியூட்டர் காலமாப் போச்சு, எந்திரன் படத்துல 80% கிராபிக்ஸ் தான் ஹீரோவா நடிச்சிருக்காம், இனிமே, நடிகர் சம்மதிச்சா போதும், அவரை 360 டிகிரியில் ஒரு படத்தை எடுத்துவிட்டு முழு படத்தையுமே உருவாக்கும் காலம் வரப் போகுது, கவலையே படாதீங்க.

Jayadev Das said...

\\ஆமா, ரஜினிக்கு 62 வயசுதான், தீபிகா படகோன் க்கு 26 வயதுதான்! நல்லாவே தெரியும். \\ சிவகாசி ஆயிரம் வெடியை சைலண்டா பொருத்தி போடுறீங்களே தலைவா... ஹா....ஹா...ஹா.....