Friday, March 30, 2012

மனைவிக்கு கணவன் நவநாகரிக மாமா! (18 பிளஸ் மட்டும்)

கலச்சாரக் காவலர்களை திட்டுவதும் தப்பு இல்லை! அதே சமயத்தில் கலாச்சார சீரழிவை தட்டிக்கேக்கக்கூடாதுனு ஒண்ணுமில்லை! இன்னைக்கு நெலைமைக்கு ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி எழுதினால் அது நம்ம மக்களை நல்வழிப் படுத்துமா இல்லை, அந்த முயற்சியே அவங்களை இன்னும் கெடுப்பதற்கு ஊக்குவிக்குமா என்கிற கேள்வி எல்லாம் எழாமல் இல்லை! இன்றைய நம் சமுதாயம் குழம்பிப்போயி, என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம், எது சரி, எது தப்பு என்று தெரியாமல் சுதந்திரம் என்ற பெயரில் நாறிப்போய் நிற்கிறதால்தான் இந்த குழப்பம்னு தோனுது!

சரி, இப்போ இந்த 18 +, கற்பனை கதைக்கு போவோம்!

----------------

என்னனுதெரியலை வாராவாரம் இண்டோர் "டென்னிஸ்" விளையாட வரும் இந்த சந்தானத்தை திடீர்னு ரெண்டு வாரமாக காணோம். "என்ன ஆச்சு சந்தானத்துக்கு ?" னு கேட்டால் "பாஸ்டன் மூவ் பண்ணிட்டாராம்" னு ஒரு சிலர் ஏனோ தானோனு சொன்னாங்க. வேற எதுவும் அதுக்கு மேலே காரணம், விளக்கம் எதுவும் சொல்லவில்லை. இது நவநாகரிக உலகம்! அதுக்கு மேலே இன்னொருவருடைய தனிப்பட்ட பிரச்சினைகள் பத்தியெல்லாம் கேட்பது அநாகரிகம், பேசுவது அநாகரிகம்.

என்னனா நமக்கென்ன? கூட டெண்னிஸ் வெளையாட வர்றவங்க எல்லாம் ஃப்ரெண்டா? சும்மா ஒரு டீம்மேட்", அம்புட்டுத்தான். உயிருக்கு உயிரா இருந்த உண்மையான நண்பர்களே காலப்போக்கில் ஒண்ணுமேயில்லாமல் மறைந்து போகிறபோது இதுபோல பட்டும் படாமல் பழகியவர்கள் எல்லாம் சொல்லாம கொள்ளாம திடீர்னு காணாமல்ப் போவதெல்லாம் பெரிய விசயமா என்ன?

கணேஷின் செல் ஃபோன் மணிஅடித்தது...சிவாதான்..

"என்னடா சிவா?"

"கணேஷ்! என்ன நீ இன்னும் புறப்படலையா ?"

"புறப்பட்டுட்டேண்டா..20 நிமிடத்தில் வந்து சேந்துருவேன்!"

"சரி, கொஞ்சம சீக்கிரம் வா! நெறையப்பேர் இருக்க மாதிரி இருக்கு?"

"அதனாலென்ன?"

"ஃப்ர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்ட் தான் ரூல் இங்கே! இங்கே மூனு டென்னிஸ் கோர்ட் தானே இருக்கு. லேட்டா வந்தா நீ நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்."

"ஹைவே ல எண்டர் பண்ணிட்டேன். சீக்கிரம் வந்துடுறேன், ஆக்ஸிடெண்ட் எதுவும் ஆகலைனா"

"வந்து சேருடா!"

"ஆமா, நம்ம சந்தானத்தை எங்கே ரெண்டு வாரமா காணோம்?"னு இவனிடமும் கேட்டு வைத்தான்.

"தெரியலைடா. ட்ரைவ் சேஃப்லி"

"சரிடா பார்ப்போம்."

சந்தானத்துக்கு என்ன பிரச்சினையோ ? வேலை போயிடுச்சோ? ஒருவேளை மனைவி இன்னொரு காதலனைத் தேடிக்கொண்டாளோ? ஏன்ப்பா இப்படி எல்லாம் யோசிக்கிற? இதல என்ன இருக்கு? இதுதான் நவநாகரிக உலகமாச்சே! இந்தியாவிலேயே "கற்பெல்லாம்" அர்த்தமில்லாதாக மாறிய காலம் இது. கணவனாவது? மனைவியாவது? கற்பாவது? கருமாதியாவது..

இது  "காசுவல் செக்ஸ்" "வைஃப் ஸ்வாப்" எல்லாம் சாதாரணமாக நடக்கும் நவநாகரீக இந்தியா. ஆமாம் "கள்ளக் காதல்"  தப்புனு சொல்றதெல்லாம் தப்புனு சொல்ற காலம் இல்லையா இது. சாரு நிவேதிதா போல வாழ்க்கையில் படுதோல்வியடைந்த "லூசர்"களை "ரோல் மாடல்" களாக வைத்து கொண்டாடும் அரை டவுசர்கள் நெறைந்த உலகம்.

ஆமாம், இந்தியர்கள் "தேஷிவேட்டை" என்று தற்காலிக படுக்கை சுகத்திற்காக தன் மனைவியை இன்னொருத்தன் மனைவிக்காக, ஒரு இரவுக்கு இல்லை சில இரவுகளுக்கு மாற்றுதல்கள் செய்துகொள்ளும் வெங்கங்கெட்ட காலம் இது. ஆமாம் தேஷி சிக் பாஸ்டட்ஸ் நெறைந்த காலம்!

"வைஃப் ஸ்வாப்" செய்றதை எல்லாம் புதுமாதிரியான விபச்சாரம்னு சொல்றதெல்லாம் அநியாயம்னு சொல்ற காலம்! வேற எப்படி சொல்றது? இதுதான் உண்மையான சுதந்திரம்! யோசிச்சுப் பாருங்க! எந்தளவுக்கு கணவன் மனைவிக்குள்ளே ஒரு புரிதல் இருக்கனும்- தன் மனைவியையே கணவன் கூட்டிக்கொடுக்க? அந்த "பெரிய மனசை" இந்தக் காலத்தில் இவனுகளுக்கெல்லாம் மனைவியும் "கிராக்கி"தான்னு அசிங்கமாச் சொல்லக்கூடாது! வேணா, அந்த  மனைவிக்கு, இந்தக் கணவன் "நவ நாகரிக மாமா"னு சொல்லலாம்.

எனக்கு உண்மையிலேயே புரியலை, படு லோ-க்ளாஸான விசயத்தை எல்லாம் கடைசியில் உயர்ந்த சிந்தனைங்கிற மாதிரி சொல்லிப்புடுறானுக சில "பெரிய மனுஷர்கள்" . யாருக்குத் தெரியும்? அவன் அவனோட கூட்டிட்டு வர்ரவ அவனோட மனைவியா இல்லை காதலியா இல்லை அவனோட "கிராக்கியா" என்று? ஆமா.. "ஆண் சைட்" எச் ஐ வி டெஸ்ட்லாம் பண்ணிக்குவானுகளா? கிழிச்சானுக, காண்டமே ஒழுங்கா மாட்ட மாட்டனுக இந்த தேஷிப் பரதேஷிகள்! என்னப்பா இது, "கூட்டிக்கொடுக்கிறதை" எல்லாம் உயர்தர சிந்தனைகள்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுக.

 இல்ல, அப்படி மனைவியை மாற்றும்போது, மாற்றானுடைய செக்ஸ்தான் அவளுக்கு இனிமையாக இருந்தால் அப்புறம் என்ன பண்ணுவானுக இந்த பெரிய மனுஷனுகள்? அதுக்கப்புறம் இந்த வீணாப்போன கணவனோட முற்போக்கு சிந்தனையுள்ள அவள் எப்படி இருக்க இல்ல படுக்க முடியும்?  அதே தேஷிஹண்டரையே மாற்றிக்கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானோ? கல்யாணாமாவது கருமாதியாவது!  அந்த  நிலைமை வந்தால் தேஷிஹண்ட்லையே எவனாவது இன்னொரு சின்னப் பையனைத் தேட வேண்டியதுதான். அதான் நாய்மாரி இணையதளத்தில் அலையிறானுகளே பொறம்போக்கு தேஷிகள்!

இல்ல, அந்த  "புதுக் கணவனு"க்கும் கொஞ்ச நாள்ல படுக்க முன்னால வயாகாராவும், போர்னும் தேவைப் பட்டுச்சுனா? இன்னைக்கு மாதிரியா நாளைக்கு இருக்கப் போறான்? பார்க்கலையா நம்ம ஒரு காலத்துல ஊர் மேஞ்ச மன்மதக்குஞ்சுகள் எல்லாம் இப்போ வீரியம் இல்லாமல் ஆண்மிகம்னு சொல்லிக்கிட்டு அலைவதை எல்லாம்? ஆமா, இப்படியே தேடித் தேடி அலைஞ்சு திரிஞ்சு கடைசில ஒண்ணும் முடியாமப் போனதும் ஞானோதயம் வந்து ஆண்மீகக் கடல்ல எறங்கிடுவானுக.

ஒரு வேளை சந்தானத்துக்கு வேறெதுவும் பிரச்சினையோ? யாருக்குத் தெரியும்? என்ன பிரச்சினைனா என்ன? அதை என்ட்ட சொன்னால் என் வேலையைப் போட்டுவிட்டு அவருக்கு உதவப்போறேனா என்ன? எதுக்கு இந்த வெட்டி அலட்டல்? நானும் ஒரு சாதாரண சராசரி சுயநலவாதிதானே?

 ஃப்ரீவேல ட்ரைவ் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, கணேஷ்க்கு, நேற்றைய நிகழ்வு ஞாபகம் வந்தது. நேற்று எதார்த்தமாக ஏர்போர்ட்ல "பேகேஜ் கலக்ட்" பண்ணுற இடத்தில் மைதிலியைப் பார்த்துட்டான். அவளோட ஹாண்ட்சம் ஹஸ்பண்ட் மற்றும் அழகான ஆண்குழந்தை யுடன் நின்றாள்.

என்ன ஒரு அழகான குடும்பம்! எவ்ளோ சந்தோஷமாக இருக்கிறாள், மைதிலி! நல்லவேளை அவள் கணேஷை கவனிக்கவேவில்லை! போய் "ஹாய்" சொல்லலாமா? னு ஒரு வினாடி யோசிச்சான். நிம்மதியாக இருக்கும் அவளிடம் எதுக்குப் போயி "ஹல்லோ" சொல்லி பழசை ஞாபகப்படுத்தி, அவளைக் கஷ்டப்படுத்தி, நம்மையும் கஷ்டப்படுத்திக்கிட்டு? இந்த "ஹல்லோ"வோ அல்லது அவளுடன் "எந்தவிதமான உறவுமே" இன்றைய நிலையில் தேவையில்லாத ஒண்ணுனு தோனுச்சு அவனுக்கு!

-இன்னும் கொஞ்சம் வரும்

4 comments:

Avargal Unmaigal said...

இந்த நவநாகரிக மாமாக்கள் மேலைநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் அதிகரித்து விட்டார்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தொடரா...? தொடருங்க தொடர்கிறோம்....

வருண் said...

***Avargal Unmaigal said...

இந்த நவநாகரிக மாமாக்கள் மேலைநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் அதிகரித்து விட்டார்கள்

30 March 2012 3:30 PM***

அந்தக் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் பத்தலைனு வைப்பாட்டி, வேஷி னு ஆண்கள் மட்டும்தான் போயிக்கிட்டுத் திரிந்தார்கள். இப்போ, பெண்களுக்கும் அந்த "சுதந்திரத்தை" "ஆண்கள்" கொடுக்க முன் வந்துள்ளார்கள்னு "பாராட்டலாமா?"

செக்ஸ்தான் வாழ்க்கை என்றால் கல்யாணம், குழந்தை குட்டி, குடும்பம்னு எதுக்கு அந்த கம்மிட்மெண்ட்ஸ் எல்லாம்? பேசாமல் ஒட்டு மொத்தமாக ஊர்மேய வேண்டியதுதானே?

எதுக்கு இந்த மாதிரி வாழனும்? ஒரு வேளை அதிலெல்லாம் இவங்களுக்கு த்ரில் இருக்காதோ?

The truth is, even if you swap, there is going to be few unhappy and dissatisfied as well. So, here this is not a "winning solution" for your "fucking problem". This is also some kind of "fuck up" only! You don't resolve anything by being a "pimp" for your lovely wife!

வருண் said...

***MANO நாஞ்சில் மனோ said...

தொடரா...? தொடருங்க தொடர்கிறோம்....
30 March 2012 10:47 PM **

வாங்க மனோ!

சொல்ல வேண்டியதை எல்லாம் ஓரளவுக்கு சொல்லிட்டேன்னு நெனைக்கிறேன். ஏதாவது விட்ட கொறை தொட்ட கொறை இருக்கானு பார்த்து தேவை இருந்தால் இன்னும் கொஞ்சம் எழுதி முடிக்கிறேன்