Saturday, August 2, 2014

இந்த ஆம்பளைங்களே மஹா மட்டமானவங்கதான் - ஒன்பது

 "எதுக்குடி இப்போ அடிச்ச?" னு சிரித்துக்கொண்டே கேட்டான் மோகன்.

"அவளோட போயி கொஞ்சியதை எல்லாம் என்னிடம் சொன்னால் உனக்கு அறை விழத்தான் செய்யும்!"

"அதான் நான் கூப்பிட்டப்போ நீ வரலைனு சொல்லிட்ட இல்ல? அப்புறம் என்ன?"

"ஆமா. அதுக்காக நீ என்ன வேணாப் பண்ணுவியா? யாரைனாலும் இழுத்துட்டுப் போவியா? "

  "ஆமா!  நான் எவளோட போனா உனக்கென்ன? விட்டுத் தொலைய வேண்டியதுதானே?"

"அப்படியெல்லாம் உன்னை கோயில்மாடு மாதிரி மேயவிட முடியாது!"

"அப்படி என்ன என் மேல் அக்கறை?"

"ரொம்ப நாள் உன்னோட பழகிட்டேன் இல்ல?"

"இவ்ளோ நாள் பழகியும் இன்னும் என்னைப் பத்தி தெரியாமல் மக்காத்தான் இருக்க?"

"நான் மக்கா? இல்லை நீ பொறுக்கியா?"

"நான் பிக்னிக்கு போகவே இல்லைடி மக்கு. சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன்"னு அவளை கட்டி அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்தான். பிறகு அவன் உதடுகள் இடம்பெயர்ந்து அவள் கழுத்தில் பதிந்தன..
 


"நெஜம்மாவே பொய்யா?" என்றாள் அவன் அனைப்பில் இருந்து கொண்டே

"நெஜம்மாவே நெஜம் இல்லை!  பொய்தான்! அதென்ன ஒரு முத்தம் கொடுத்ததும் உன் குரலே மாறிடுத்து?"னு அவளை "பின்னால்" மெதுவாக கிள்ளினான்.

"சரி, ஐஸ் வச்சது போதும்! ஏன் போகலைனு சொல்லு?"னு கொஞ்சுவதுபோல் கேட்டாள், விஜி.

"போகலாம்னுதான் புறப்பட்டேன்.  திடீர்னு கார்ல ஃப்ளாட் டயராயிடுச்சு. அதுக்கப்புறம்  "ஃப்ரீ ரைட்" எதுவும்  கெடைக்கல. அதான் வீட்டிலேயே இருந்துட்டேன்."

"ஏய் இங்கே நான் வீட்டிலேதானே இருந்தேன். என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?"

"இப்போல்லாம் பி எம் எஸ் ல இருக்கமாதிரி எப்போவுமே ரொம்ப"moody" யா இருக்க. உன்னைக்கூப்பிட பயம்மா இருந்துச்சு."

"உனக்கு என்னிடம் பயமா? ச்சும்மா நடிக்காதே"

"ஆமா எதுக்கு உன்னைக் கூப்பிட?  "ரைட்" க்குத்தானே?"

"ஒரு "ரைட்"க்குத்தான் ஆனால் பிக்னிக்கு இல்லை!"னு இழுத்தாள்

"புரியலை?"

"என்ன புரியலை? It is more than few weeks now! ரைட் என் வீட்டுக்குத்தான்"

"எதுக்கு?"

"அதுக்குத்தான்"

"ஆக, இங்கே கூட்டி வந்து பகல்லயே என்னை பலவந்தமா புணரலாம்னு பார்த்தியா?"

"ஹா ஹா ஹா. புணரவா? அதென்ன சுத்தமான தமிழா?"

"நாந்தான் துரோகியாயிட்டேனே? இதுக்கு மட்டும் வேணுமாக்கும்? யாரும் புதுசா பாய்ஃப்ரெண்ட் பிடிக்கலையா? இல்லை யாரும் மாட்டலையா?"

"No, I still like you for that."

"For WHAT?!"

" நீயும் சும்மாதானே தனியா இருக்க?"

"For fucking? நீங்க "ஹார்னி"யா இருந்தா நாங்க வேணும்?"

"என்னவோ பிடிக்காத மாரித்தான்..சும்மா  நடிக்காதே!"

"உனக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் கெடையாதா?"

"ஹாஹாஹா. எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. இந்த ரேச்சல் சனியன் எப்போ வந்தாளோ அதிலிருந்துதான் எல்லாமே போச்சு."

"விஜி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேக்றியா?"

"என்ன?"

"கொஞ்சம் ஒரு மாதிரியா சொல்லவா?"

"சொல்லு!"

"இல்ல..ரேச்சல் இருக்கா இல்ல?"

"ஆமா..செத்தா போயிட்டா? இருக்கா?"

"அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது.. அதான் கெமிஸ்ட்ரி..ஒரு சிலவற்றை எக்ஸ்ப்ளைய்ன் பண்ணி, அவ புரிந்து அதை அப்ரிசியேட் பண்ணும்போது. ஒரு பொண்ணுக்கு "ஆர்கஸம்" வர வச்சு சந்தோஷப்படுத்தியதைவிட 10 மடங்கு எனக்கு திருப்தியா இருக்கு!"

"இருக்கும் இருக்கும். வெள்ளைக்காரி! ஆளும் அழகா இருக்கா, அதானே?"

"அவ அழகுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை!"

"அவ மேலே எனக்குப் பொறாமையா இருக்கு"

அவள் உதட்டில் தன் இதழ்களைப் பொருத்தி அவளை பேசவிடவில்லை, அவன்.

 

-தொடரும்


அத்தியாயம் எட்டு, படிக்கணும்னா கீழே க்ளிக் செய்யவும்!


 ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு


இன்னொரு விசயம்...தயவுசெய்து இந்தக் கதையை நீங்க படிச்சீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. உங்களை ஒரு மாதிரியாக "அவர்கள்" நினைக்க வாய்ப்பிருக்கு. :)



5 comments:

Avargal Unmaigal said...

//.தயவுசெய்து இந்தக் கதையை நீங்க படிச்சீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. உங்களை ஒரு மாதிரியாக "அவர்கள்" நினைக்க வாய்ப்பிருக்கு. :)..////

இதை பதிவின் ஆரம்பத்தில் போட்டு இருக்கலாம் அல்ல இப்ப நான் இந்த கதை முழுவதையும் படிச்சுட்டேனே இப்ப யாரெல்லாம் என்னை ஒரு மாதிரியாக நினைப்பார்களே..

மைண்ட் வாய்ஸ்; டேய் மதுரைத்தமிழா யாரு என்ன நினைச்சா எப்படி நினைச்சா நீ கவலைபடுற ஜென்மமா நீ. நீ அவுத்துவிட்ட கழுதை அல்லது எருமைதானடா நீ

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்ட
கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வருண் said...

@ தல ம த அண்ட் ரூபன்!

அச்சசோ, இந்தக் கதையைப் படிச்சுட்டீங்களா!! :)))

உங்க தைரியத்தை என்னால பாராட்டாமல் இருக்க முடியலை! :)

நன்றி! :)

saamaaniyan said...

வருண்,

பாசாங்குகளற்ற, ஒளிவு மறைவு என்றெல்லாம் " புலம்பாத ", தைரியமான உங்கள் எழுத்து ஆச்சரியம். இப்படி எழுதி, " கலாச்சார " காவலர்களிடமிருந்து நிறைய வசவு வாங்கியிருப்பீர்களே ?!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !

http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

வருண் said...

saam: கடைசியாக் உங்க தளத்திற்கு சென்று பார்த்தேன்.. என் தடம் இருக்கும் பாருங்க..

நீங்க திரட்டிகளிலெல்லாம் இன்னும் இணையவில்லையா??