Thursday, September 25, 2014

வருணின் உளறல்கள் (5)

கொலைச்சரம்:

வலைச்சரத்தில் ஐயா சீனா அவர்கள் "தரமான ஆசிரியர்களை"த் தேர்ந்தெடுத்து அவர்களால் தரமான சில பதிவர்களை அறிமுகப் படுத்த வைக்கிறார்.

அதென்ன கொலைச்சரம்?

நீங்க பதிவுலகில் யாரையெல்லாம் படிக்கக்கூடாது, அல்லது அசட்டை செய்யணும் என்கிற லிஸ்ட் இது.

பதிவர் பெயர்: . (ஒரு புள்ளி தெரியுதா?). 

இவர் ஒரு "பெரும் புள்ளி" பதிவர்! இவரிடம் இருந்து வரும் பதிவுகளில் எல்லாமே "ஒரிஜினல் சிந்தனைகள்" தான்!!! . ஒரு நாளைக்கு 10 அல்லது 15  அல்லது 20, ஏன் 25 பதிவுகளைக்கூட தமிழ்மணத்தில் வெளியிடுவார் இந்தப் "பெரும் புள்ளி"!

இந்த மாதிரி "பிரபலப் பதிவர்களை" நீங்க கண்டுபிடிச்சு, இவர்கள் வலைதளத்திற்கு நுழைவதைத் தடுக்க ஒரு சின்ன ஐடியா!

 தமிழ்மணத்தில் இன்றைய பதிவர்களில் இந்தப் "பெரும் புள்ளி"யை க்ளிக் பண்ணினால், இன்றைக்கு 10 இடுகைகள் அல்லது 25 இடுகைகள்னு காட்டும்! பொதுவாக "அனுபவம்" இல்லை "திரைப்படம்" பற்றி பதிவுகள் இருக்கும்.

உடனே  இவர் "கொலைச்சரத்தில் " அறிமுகம் செய்ய வேண்டியவர்ணு இவர் தளத்தை நீங்க தவிர்க்கலாம்!

இந்த "பெரும் புள்ளிகள்" இப்போதெல்லாம் அவர்கள் "பெயர்களையும்" அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள். 

இன்றைய "புள்ளி", நாளைய "ஆச்சர்யக்குறி" யாக இருக்க வாய்ப்புண்டு!

********************

சிரிக்கவைக்கும் தொழில் செய்யும் காமெடி வியாபாரிகள்!

ராபின் வில்லியம்ஸ் மரணத்திற்குப் பிறகு பொதுவாக ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலரும் விமர்சிக்கிறாங்க. இவர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும், தங்கள் வாழ்வில், தனிமையில், கவலையுடன் மனநோயாளியாகத்தான் இருக்கிறார்களாம்!  அதற்குத் தேவையான ட்ரீட்மெண்டை  இவர்கள் எடுப்பவதில்லையாம்! அதாவது, தன் மனநிலையை சரிசெய்ய  மனநலமருத்துவர்களிடம் சென்று  அதற்கான "தெரப்பி"கள் வேண்டுமென்றே எடுத்துக்கொள்வதில்லை என்கிறார்கள்.

ஏன் மனநலத்தை புறக்கணிக்கிறார்கள்?

தெரப்பியோ, மருந்தோ எடுத்துக்கொண்டால் என்ன?

ஏன் இப்படி தன் உடல்நலத்தை அசட்டை செய்கிறார்கள்? என்றால்..

அப்படி ஏதாவது செய்தால் அவர்கள் 'தொழில்" மற்றும் "இயற்கையான ஜோக்" சொல்லும்  திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்கிற பயமாம்! ஆக மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு தொழிலாகக் கொண்டதால் இவர்களே பலியாகிறார்கள்!

ஸ்டாண்ட் -அப் காமெடியன்கள்னா யாரு?

சிலர் பெயர்களை சொல்லுகிறேன்..

*  ஜெர்ரி சைன்ஃபெல்ட் 

 

*  டேவிட் லெட்டெர்மேன்

 Dave Letterman.jpg

* ஜே லெனோ





இதிலிருந்து என்ன தெரியுது?

உங்களால் பாராட்டப்படும் இவர்கள்  எல்லாருமே இன்று எப்படியாவது எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கும் பரிதாபத்திற்குரிய "காமெடி வியாபாரிகள்"!

**********************************

இரண்டு வாரம் முன்பு, இந்துவில் செய்தி..

மதுரையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் மீது ஒரு "வீரன்" ஆஸிட் (அமிலம்) ஊற்றியதாக!

 Two College Girls Hospitalised After Acid Attack in Madurai

 ஆமாம், கல்லூரியில் படிக்கும் மாணவிகள்  பட்டப் பகலில் நடந்துபோகும்போது "இந்த வீரன்" அவர்கள் மீது ஆஸிடை ஊற்றிவிட்டு ஓடிவிட்டானாம்!

இந்த வயதில் முகத்தில் முகப்பரு வந்தாலே, அதைப்பற்றி கவலைப்படும் மனநிலையில் உள்ள இளம் பெண்கள் முகத்தில் கொண்டுபோயி எப்படி ஒருவனால் அமிலத்தை ஊற்ற முடியும்?

அப்படி முயலும் ஒருவனை என்ன செய்யணும்?

இந்த வீரன் பெயர் சங்கர நாராயணனாம் !!! பகவான் பேரை வச்சிருக்கார்கள்!!


 


மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லி "ஜோடிக்கிறார்கள்"!!!

அதனால் என்ன? மனநிலை சரியில்லாதவனாகனாக இருந்தாலும் இவனுகளை எல்லாம் பிடிச்சு வந்து நடுரோட்டில் ஊரே பார்க்கத் தூக்கில் தொங்க விடணும்!

இதுபோல் அப்பாவிப் பெண்கள் மீது ஆஸிட் ஊத்துவது போன்ற ஈனத்தனமான செயல் மேலை நாடுகளில் எல்லாம் அதிகம் நடப்பதில்லை! கருணைக்கு "பெயர் போன" இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில்தான் அதிகம் நடக்கிறது.

என்ன பெரிய காரணமா இருக்கும்?

இவரு அவளை லவ் பண்ணி இருப்பாரு. அவ அவரை விரும்பி இருக்க மாட்டா.. இல்லைனா "பிடிக்கலை! வேற ஆளைப் பாரு"னு சொல்லியிருப்பா..உடனே இந்த வீரர் வந்து ஆசிடை வாங்கி வந்து பழி வாங்குறாராம்!

What an IDIOT!!!

**************************************

13 comments:

'பரிவை' சே.குமார் said...

உளறல்கள் என்றாலும் உண்மையை உரைக்கச் சொல்கிறது...

மதுரை சம்பவத்தில் ஆசிட் வீசியவன் மீது முச்சந்தியில் வைத்து ஆசிட் ஊற்ற வேண்டும்...

மகிழ்நிறை said...

இனியும் உளறல்கள் என்னும் தலைப்பை தொடரனுமா அப்டின்னு கேட்க வைக்குது பதிவு? so what. இனிக்கு எல்லாரும் பேருக்கு தக்கபடியா நடந்துக்குறாங்க. for example இந்த சங்கரநாராயணன் போல!! ஆனா இந்த தலைப்பு, நல்ல முரண்:))
ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பற்றிய உங்க வரிகள் ............எப்படி சொல்ல ?? தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் நிலையை படித்தபின் பல நாள் தேநீர் கசந்தபடியே இருந்தது:(( இப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்டாண்ட் அப் காமெடிகளை நினைத்தால் கொஞ்சம் கில்டியா இருக்கு...nice வருண். அந்த அசிட் சம்பவத்திற்காக நானும் ஒரு கவிதை(!?) எழுதியிருக்கிறேன். மனித நேயம் உள்ள அறசீற்றம்!! வாழ்த்துகள் வருண்:)

துளசி கோபால் said...

இன்னும் கொஞ்சம் உளறுங்க வருண்!

மின் வாசகம் said...

தமிழ்மணத்தில் இந்த பெரும் புள்ளிராஜாக்களின் தொல்லை தாங்கவே முடியவில்லை. தாங்களும் பலமுறை கண்டித்துவிட்டீர்கள், மேலும் பலரும் எழுதிவிட்டார்கள், ஆனால் அந்த வைரசுகளின் தொல்லை அடங்கவே இல்லையே.

தனை விரும்பாத பெண்ணை விலகி தனக்குகந்த அவளை விட சிறந்த பெண்ணை துணையாக்கிக் கொள்வதே உண்மையான ஆண்பிள்ளைக்கு அழகு. இவர்களாகவே போய் ஒரு பெண்ணை துரத்தி துரத்திக் காதலிப்பதும், சில சமயம் அவள் இவர்களது மெய் குணம் கண்டு விலகிச் சென்றால் போய் ஆசிட் வீசுவதும் எல்லாம் பெட்டைத் தனமான ஆணின் செயலாகும், பேடி என்று வள்ளுவர் கூறுவாரே.. இத்தகையோரை களையறுப்பது தான் சமூகத்துக்கு நல்லது . மனநலம் குன்றியது எனக் கூறி மருத்துவமனையில் வைத்து மூன்று வேளை சோறு போட்டால், இதே போல நாளை ஆயிரம் பேர் ஆசிட் அடிக்க கிளம்புவார்கள்..

பெண்கள் மீதான வன்முறையில் இந்தியா என்று தான் உருப்படுமோ, தெரியவில்லை.

:/

ரிஷி said...

கொலைச்சரம் - வெகுவாய் ரசித்தேன். நன்றி :-)

வருண் said...

****சே. குமார் said...

உளறல்கள் என்றாலும் உண்மையை உரைக்கச் சொல்கிறது...

மதுரை சம்பவத்தில் ஆசிட் வீசியவன் மீது முச்சந்தியில் வைத்து ஆசிட் ஊற்ற வேண்டும்...****

வாங்க, குமார்!

மிருங்கள்கூட எல்லாம் இப்படி செய்யாது! ஆறறிவு படைத்த மனித மிருகங்கள்தான் இது போல் மற்றவரைத் துன்புறுத்தி அதில் "இன்பம்" அடைகின்றன! :(

கடுமையான தண்டனைகள்தான் இதையெல்லாம் அடியோடு ஒழிக்க உதவும்!

வருண் said...

**** Mythily kasthuri rengan said...

இனியும் உளறல்கள் என்னும் தலைப்பை தொடரனுமா அப்டின்னு கேட்க வைக்குது பதிவு? ****

உண்மைகள் நிறைந்த உளறல்கள்னு பேர் வச்சுடுவோமா, மைதிலி? :)

***so what. இனிக்கு எல்லாரும் பேருக்கு தக்கபடியா நடந்துக்குறாங்க. for example இந்த சங்கரநாராயணன் போல!! ****

பெயர் வச்சது அப்பா, அம்மா. மகன் இறைவனைப்போல் உயர் குணங்களுடன் வரணும்னு ஒரு ஆசையில்! நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, பாருங்க!

***ஆனா இந்த தலைப்பு, நல்ல முரண்:))***

:-)

***ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பற்றிய உங்க வரிகள் ............எப்படி சொல்ல ?? தேயிலைத்தோட்டத்தொழிலாளர்களின் நிலையை படித்தபின் பல நாள் தேநீர் கசந்தபடியே இருந்தது:(( இப்போ எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்டாண்ட் அப் காமெடிகளை நினைத்தால் கொஞ்சம் கில்டியா இருக்கு...nice வருண். ***

சிரிக்க வைப்பதும் காசுக்காக அல்லது புகழுக்காகச் செய்யும் "தொழில்" என்றாகிவிட்டால், அது "ஸ்ட்ரெஸ்ஃபுல்"லாக ஆகிவிடுகிறது.

***அந்த அசிட் சம்பவத்திற்காக நானும் ஒரு கவிதை(!?) எழுதியிருக்கிறேன். மனித நேயம் உள்ள அறசீற்றம்!! வாழ்த்துகள் வருண்:) ***

உங்க கவிதையை என்னனு பார்க்கிறேன். அந்தப்பெண்ணையும் தன் அம்மாவாக, சகோதரியாக, தோழியாக ஒரு நிமிடம் வைத்து யோசித்துப் பார்த்தால் இதுபோல் தவருகளெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க.

சட்டம் நம் கையில் இல்லை! இதுபோல் பதிவுகள் எழுதி இவர்களை "நம் சட்டத்தில்" இவர்களை கடுமையாகத் தண்டிப்பதைத் தவிர வேறென்ன நம்மால் செய்ய முடியும், மைதிலி?

வருண் said...

****துளசி கோபால் said...

இன்னும் கொஞ்சம் உளறுங்க வருண்!***

அடடா! "அருமையான பதிவு"னு நீங்கள் பாராட்டுவதைவிட இதுபோல் எதார்த்தமான பின்னூட்டம் ரொம்ப நல்லாயிருக்கு டீச்சர்! நன்றி! :)

வருண் said...

**மாநகரன் said...

தமிழ்மணத்தில் இந்த பெரும் புள்ளிராஜாக்களின் தொல்லை தாங்கவே முடியவில்லை. தாங்களும் பலமுறை கண்டித்துவிட்டீர்கள், மேலும் பலரும் எழுதிவிட்டார்கள், ஆனால் அந்த வைரசுகளின் தொல்லை அடங்கவே இல்லையே.****

வாங்க, மாநகரன்!

எனக்கென்னவோ தமிழ்மண நிர்வாகிகள் எல்லாமே ஏதோ ஆக்ஸிடெண்டில் கூண்டோட போய் சேர்ந்துவிட்டார்கள் ..அனாதையான தமிழ்மணம் இப்போது தானியங்கியாகத்தான் இயங்குகிறது என்றுதான் தோன்றுகிறது!

***தனை விரும்பாத பெண்ணை விலகி தனக்குகந்த அவளை விட சிறந்த பெண்ணை துணையாக்கிக் கொள்வதே உண்மையான ஆண்பிள்ளைக்கு அழகு. இவர்களாகவே போய் ஒரு பெண்ணை துரத்தி துரத்திக் காதலிப்பதும், சில சமயம் அவள் இவர்களது மெய் குணம் கண்டு விலகிச் சென்றால் போய் ஆசிட் வீசுவதும் எல்லாம் பெட்டைத் தனமான ஆணின் செயலாகும், பேடி என்று வள்ளுவர் கூறுவாரே..* இத்தகையோரை களையறுப்பது தான் சமூகத்துக்கு நல்லது . மனநலம் குன்றியது எனக் கூறி மருத்துவமனையில் வைத்து மூன்று வேளை சோறு போட்டால், இதே போல நாளை ஆயிரம் பேர் ஆசிட் அடிக்க கிளம்புவார்கள்..***

நம்ம உணர்வுகள் இந்த "அமில வீரர்களுக்கு"ப் புரியாது.

அவர்கள் "வீரம்" நம்க்குப் புரியாது.

இரண்டு வகையான மனிதர்கள் அவர்களும், நாமும்.

ஆனால்,இதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் அரசாங்கம், கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து இவர்களை கடுமையாக தண்டிக்கணும். அதை அரசாங்கம் சரிவர செய்யாமல் அசட்டையாகவிட்டு தவிர்ப்பது என்பது அப்பெண்கள் உடலில் அரசாங்கமே அமிலத்தை ஊற்றியதுக்கு சமம்!

வைரஸ்களை களையெடுக்காமல் இருக்கும் தமிழ்மண நிர்வாகம், அமில வீரர்களை, கடுமையாக தண்டிக்காத நம் அரசாங்கம் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!

வருண் said...

***ரிஷி said...

கொலைச்சரம் - வெகுவாய் ரசித்தேன். நன்றி :-)***

வாங்க, ரிஷி! நன்றி!

saamaaniyan said...

" இன்றைய "புள்ளி", நாளைய "ஆச்சர்யக்குறி" யாக இருக்க வாய்ப்புண்டு! " ...

மேலும் இந்த " புள்ளிகளால் " ஏதோ கொஞ்சம் சிந்தித்து எழுதும் பதிவர்களின் நிலை தமிழ்மணத்தில் " கேள்விக்குறி " ஆகிவிடுகிறதே !

காமெடி வியாபாரிகள் ...

இதை இப்படியும் யோசிக்கலாம்... தன் திறமையை எதிர்பார்ப்பு, போட்டியின்றி பயன்படுத்தினால் நிம்மதியாக தூங்கலாம் ! அதற்கு விலை வைத்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, அதனை தக்கவத்துக்கொள்ள போட்டியுடன் முயன்றால் மனநலமருத்துவர் சீக்கிரமே தேவைப்படுவார் !

" மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லி "ஜோடிக்கிறார்கள்"!!! "

ஆசிட்டைவிட அதிகமாய் எரிய வைப்பது இது போன்ற அறிக்கைகள்தான் !

" மேலை நாடுகளில் எல்லாம் அதிகம் நடப்பதில்லை! கருணைக்கு "பெயர் போன" இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில்தான் அதிகம் நடக்கிறது. "

இங்கு நான் அடிக்கடி உபயோகப்பத்தும் வரியை அப்படியே கொடுத்துளீர்கள் வருண் !

நன்றி
சாமானியன்

( எனது பதிவின் உங்களின் பின்னூட்டத்துக்கு பதிலளித்துள்ளேன். நேரமிருப்பின் பார்க்கவும். நன்றி )

Kasthuri Rengan said...

ஹ ஹா
ஆரம்பத்தில் இருந்தே அதிரடி சரவெடி

பட்டய கிளப்புங்கள்..

வருண் said...

சாம்:

***மேலும் இந்த " புள்ளிகளால் " ஏதோ கொஞ்சம் சிந்தித்து எழுதும் பதிவர்களின் நிலை தமிழ்மணத்தில் " கேள்விக்குறி " ஆகிவிடுகிறதே !***

தமிழ்மண நிர்வாகம் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!

போற போக்கைப் பார்த்தால் விரவில் திரட்டியை மூடிவிட்டு போனாலும் போய்விடுவார்கள் என்ரு தோன்றுகிறது.


***இதை இப்படியும் யோசிக்கலாம்... தன் திறமையை எதிர்பார்ப்பு, போட்டியின்றி பயன்படுத்தினால் நிம்மதியாக தூங்கலாம் ! அதற்கு விலை வைத்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, அதனை தக்கவத்துக்கொள்ள போட்டியுடன் முயன்றால் மனநலமருத்துவர் சீக்கிரமே தேவைப்படுவார் !***

நல்ல புரிதல் சாம்! :)

உங்க தளத்தில் பதிலைப் பார்த்தேன். :)