Friday, December 4, 2015

மழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு பாலாபிஷேகம்!

என்னடா ஒரே வெள்ளக்காடா இருக்கு! பக்தர்கள் எல்லாம் பகவானிடம் எதுவும் போயி வேண்டாமல் இருக்காளே?னு யோசிச்சுண்டு இருந்தேன்..எதிர்பார்த்த செய்தி நக்கீரனில் வந்துடுச்சு.! வருண பகவானுக்கு பூஜை, பாலாபிஷேகம்! பகவானுக்கு இதை எல்லாம் செய்து அவரைக் குளிரவைத்து மழையை நிறுத்தச் சொல்லி வேண்டிக்கொண்டார்கள் பெரியவா னு!  ஆனால் ஒண்ணு அட் லீஸ்ட் இவர்கள் நேர்மையைப் பாராட்டணும். பாலையும் தயிரையும் வீணாக்கினாலும்..இது எல்லாம் நம்ம  "பாவி பகவான்" னோட செயல்தான்னு ஒத்துக்கிட்டாளே !!! அந்தப் பெரிய மனசைப் பாராட்டணுங்காணும்!!


மழை நிற்க வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் 

மழை நிற்க வேண்டி தஞ்சாவூர் பெரியகோவிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து நம்மிடம்  பேசிய குருமூர்த்தி சுவாமிகள், “ பெருவுடையார், பெரியநாயகி உடனுறையான பெரியகோவிலில்தான் இந்தியாவிலேயே வருண பகவான்  தனி சன்னதியில் மேற்கு புறத்தில் வீற்றிருக்கிறார். வேறு எங்கும் இதுபோல் தனி சன்னதியில் வருண பகவான் இருப்பது இல்லை. 

சென்னையில் பெய்யும் தொடர் மழை நிற்க வேண்டியும், மக்களை துன்பங்களில் இருந்து காக்கவும், அவர்கள் குடும்பத்தினருடன் நலமாக வாழவும், சிறப்பு பூஜைகள் நடத்தினோம்.  1500 ஆண்டுகளுக்கு முன்னால் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் மழை வேண்டியும்,  மழை நிற்பதற்கும் பாடபெற்ற திருபதிகம் செய்யப்பட்ட பாடலை ஓதுவார் மூர்த்திகள் கொண்டு வருண பகவான் சன்னதியில் பாடப்பெற்றது. எண்ணெய், பால், மஞ்சள், திரவியம், தயிர், சந்தனம் இன்னும் பல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது’’என்றார்.

     - இரா.பகத்சிங்


பக்தர்களில் ஒரு  சிலர் இந்த நேரத்தில் பகவானை ஓரமா  ஒரு பக்கம் உக்கார வச்சுட்டு "இயற்கை" யின் சீற்றம்ணு சொல்வார்கள்.  "நம்ம வில்லன் பகவானை" விட்டுப்புட்டு  "இயற்கை" யை வில்லனாக்கி ஒரு பாவமும் அறியாத பகவானை காப்பாத்திடுவா!. ஆனால் பரிணாம வளர்ச்சியில்  இல்லை, சத்தியமா உன்னையும் என்னையும் பகவாந்தான் படைச்சாரானு சொல்லுவா.. இங்கே மட்டும் "இயற்கை", நம்ம பகவானை காப்பாத்தப்  பயன்படுத்தும் "பலி கடா" . அவ்வளவுதான்!

எது எப்படியோ பாலையும் தயிரையும் பகவானுக்கு ஊத்தி அவரைக் குளிப்பாட்டி "சரிக் கட்டினால்" வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பசியில் வாடி அலையும் ஏழைகள் வயிறு ஆறும் என்கிற நம்பிக்கை  என்னவோ அபூர்வமானதுதான்.

----------------

ஆமா, வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவாளுக்கு நீ என்ன பண்ணின வருண்? நான் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ணலை! ஆனால் பகவானுக்கு பெரிய அளவில் இன்னொரு பாலாபிஷேகம் செய்து பகவானைக் குளிர வைக்கலாம்னு ஒரு ப்ளான் இருக்கு. ஆனால் ஒண்ணு பகவானுக்கு நான் இந்த முறை ஏற்பாடு செய்வது  எருமைப் பாலாபிஷேகம்தான்!  அப்போத்தான் பகவானுக்குப் புத்தி வந்து அடுத்த முறை மழையே வராமல் பூமி வறண்டு பஞ்சம் வருவதற்கு உதவுவார், பகவான்!

பக்தர்களுக்கு நான் சொல்வது ஒண்ணே ஒண்ணுதான்!  

எல்லாம் பகவான் செயல்! அவன் என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!

8 comments:

நம்பள்கி said...

அடி சக்கை! எல்லாப்பயலும் விவரமாத்தான் இருக்கான். பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் எந்த பிஸ்கோத்து எந்த புண்ணாக்குக்கு அபிஷேகம் பண்ணினாலும் எப்படியும் மழை நிற்கும் என்று! இது பருவமழை, நிற்கும் என்று கீழ்பாக்கம் மருத்துவமனை பிள்ளையார் கோவில் குருக்களுக்கு கூட தெரியும்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் ப்ளானும் பாலாபிஷேகமா...!

Unknown said...

நானும் நாலு லிட்டர் எருமைப் பாலை அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன் :)

Amudhavan said...

நீங்க எதிர்பார்த்திருந்த மாதிரியே நானும் எதிர்பார்த்திருந்தேன். கரெக்டாக பூஜைப் போட்டுவிட்டார்கள்.

மகிழ்நிறை said...

நல்ல ஐடியா தான். ஆனா பேரில் நண்பரை கொண்டிருக்கிறதேன்னு தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு:))

Iniya said...

\\\\\எல்லாம் பகவான் செயல்! அவன் என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!/////

ஆமால்ல...... சரியாச் சொன்னீங்க வருண். இனியாவது புத்தி வருதா பாப்பம்.

ம்..ம் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி ......

நன்றி வருண் ! தொடர வாழ்த்துக்கள் ....!

Yarlpavanan said...

தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்

வானிலிருந்து - கடவுள்
தன் திருவிளையாடலைக் காட்ட
தரையிலிருந்து - மக்கள்
துயருறும் நிலை தொடராமலிருக்க
கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

போதும் போதும் கடவுளே! - உன்
திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

தருமி said...

வருண பகவானைப் பற்றி வருண பகவானே இப்படி எழுதினால் எப்படி.......?