Thursday, January 28, 2016

பத்ம ஸ்ரி ஜெய..செய்திகள் வாசிப்பது வருண்!

பத்மஸ்ரியல்லாத ஜெயமோகன்!

நம்ம ஜெயமோகன் இருபத்தைந்து வருடமாக தமிழில் இலக்கிய சேவை செய்துகொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட அந்த மனுஷனை மதிச்சு ஒரு பாரதீய ஞான பீடம் அல்லது ஒரு சாகித்ய அகாதமி விருதாவது கொடுத்து இருந்தால் தன் தகுதிக்கு ஏற்ற அவ்விருதினை அவர்  நிச்சயமாக முழுமனதோடு  வாங்கியிருப்பார். அதை விட்டுவிட்டு சும்மா தறுவுக்கு இந்தா உனக்கொரு பத்மஸ்ரி னு கொடுத்ததும் கடுப்பாவாரா, மாட்டாரா?

இதெல்லாம் எழுத்தாளர்களை அவமதிப்பதுனு நம்ம மத்திய அரசுக்கு தெரியாததுதான் பரிதாபம்!

 காணவில்லை!

பரபரப்பாக அரசியல் கலந்த இடுகைகள் எழுதும் நண்பர் மதுரைத் தமிழன் அவர்கள் உண்மைகளை இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் தளத்தில் காணவில்லை! அவருடைய நட்பு வட்டம், தோழர், தோழியர் எல்லாம் அவருக்கு "என்னாச்சோ ஏதாச்சோ"னு ஒரே கவலையில் இருக்கிறார்கள். மதுரைத்தமிழன் விரைவில் வந்து சேர்வார் என்று நம்பப்படுகிறது.

ட்விட்டரில் கமல்ஹாசன் என்ட்ரி!

குடியரசு தினத்தன்று, திரு கமலஹாசன் அவர்கள் முதல் ட்வீட் செய்துள்ளார். அவருக்கு ட்விட் உலகில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கமல் ரசிகர், நடிகர் சூர்யா அவரை வர வேற்கிறார்.

  Jan 27
Yet another way to feel even more closer sir!! Very respectful welcome!!@ikamalhaasan

 நீங்களும் அவரைத் தொடர்பவராக ஆகி அவருக்கு "க்ளோஸ்" ஆகலாமே?


ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது!

மத்திய அரசாங்கம், நடிகர்  ரஜினிகாந்த்க்கு பத்ம விபூஷன் விருதை வழங்கியுள்ளார்கள். இதற்கு முன்னால் பத்ம பூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. அப்போ யாரு ஆட்சி நடந்ததுனு எனக்குத் தெரியவில்லை இவருக்கு இந்த விருதைப் பெற என்ன தகுதி இருக்கு? னு எல்லாரும் கேக்கிறாங்க. நடிகர்கள் அமிதாப் மற்றும் திலீப் குமாருக்கும் இதே விருது வழங்கியுள்ளார்கள் என்பதை நான் பிறருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.

மேலும் நம்ம கமலுக்கு  போனவருடமோ என்னவோ பத்ம பூஷன் வழங்கியபோது அவருக்கு அவ்விருது பெற முழுத்தகுதியிருக்குனு எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இதென்ன ஜுஜுபி  கமலுக்கு நோபல் பரிசு, அதுவும் வேதியிலில் பெறவே தகுதியிருக்கு! னு வேற பலரும் சொல்லிக்கிட்டாங்க. அவருதான் எல்லா சப்ஜெக்ட்லயும் டாக்டர் பட்டம் பெறாமல் பெறத் தகுதி பெற்றவராச்சே?!

இப்போ  முக்கியமாக கமல் ரசிகர்களின் மத்தியில்  ரஜினி பெற்ற இவ்விருது மிகுந்த பரபரப்பையும் எரிச்சலையும் கிளப்பி உள்ளது என்பதை அவர்கள் ட்வீட்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே கபாலி, எந்திரன் 2.0 என்ற படங்களின் தொடர் செய்திகளால் நிம்மதி இழந்து அலையும் இவர்கள் தலையில்  மண்ணள்ளிப்போட்டதுபோல் இப்படி ஒரு செய்தி.

ட்விட்டர்ல இவணுக அழுதழுது கண்ணீர் வடித்து எழவைக்கூட்டி வைக்கிற ஒப்பாரியில்  இன்னொரு வெள்ளம் வந்து சென்னையை அழிச்சாலும் அழிச்சுடும்.

இவ்வளவுக்கும் கமல் டிவீட்ட ஆரம்பிச்சுட்டாரு, ஹார்வேட் பல்கலைக்கழகத்தில் பிசினெஸ் ஸ்கூல்ல போயி எல்லாம் ஏதோ பெரிய இன்வைட்டெட் லெக்ச்சர் கொடுக்கப்போறாருனு சொல்றாங்க. நல்லவேளை நான் ஹார்வேட்ல இல்லை, என்னிடம் பிசினெஸ் டிக்ரி யும் இல்லை! அப்பாட  தப்பிச்சேன்!

அப்புறம் அம்மா அப்பா விளையாட்டுனு ஏதோ படம்லாம் எடுக்கப் போறாராம். 20 வருடமாக உறங்கும் மருதநாயகத்தை எடுக்கப் போறேன்னு வேற சொல்லுறாரு. இதுபோல் கமல் தரப்பில் நடக்கும் எத்தனையோ நல்ல நல்ல விசயங்களை எல்லாம் பேசித் தீர்ப்பதை விட்டுப்புட்டு சண்டியர்கரன், பழுவேட்டரையர் னு சில கமல் ரசிகப் பொறுக்கிகள் எந்நேரமும் ட்விட்டரில் "ரஜினி ட்ரால்"தான் பண்ணிக்கிட்டு அலையுதுக!

ப்ளாகரில் உங்களைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை! 

சமீபத்தில் ப்ளாகரில் ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளார்கள், அதாவது ஜி மெயில் அல்லது ப்ளாகர் அக்கவுண்ட் இல்லாதவர்களை உங்களைத் தொடர்பவர்களில் இருந்து கழட்டிவிட்டுவிட்டார்கள். அதனால உங்களை தொடர்பவர்களில் உள்ள எண்ணிக்கை திடீர்னு குறைந்திருக்கும். திடீர்னு நெறையப் பேர் உங்களோட கோவிச்சுட்டுட்டு போயிட்டதா நெனச்சுடாதீங்க. எல்லோருடைய தளத்திலும் தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. :)



19 comments:

'பரிவை' சே.குமார் said...

அதான் நம்ம ஏரியாவுலயும் 8 பேரைக் காணாமா... அது சரி...

விசு said...

Hi Varun,

Madurai tamilan is back..

வருண் said...

***Blogger பரிவை சே.குமார் said...

அதான் நம்ம ஏரியாவுலயும் 8 பேரைக் காணாமா... அது சரி...***

ஆமாம் குமார். எல்லாத் தளங்களிலும் இதுபோல் கூகுள் ஐடி இல்லாதவர்கள் தானாக மறைந்ந்துள்ளார்கள்! :)

வருண் said...

***விசுAWESOME said...

Hi Varun,

Madurai tamilan is back..**

கவனிச்சேன் விசு! இங்கே அழுதழுது கெடந்தது அவருக்கு தெரியட்டுமே!

Angel said...

கமல் அண்ட் கெமிஸ்ட்ரி :)))))))))) ROFL ..நிச்சயம் கொடுத்தே ஆகணும்

//திடீர்னு நெறையப் பேர் உங்களோட கோவிச்சுட்டுட்டு போயிட்டதா நெனச்சுடாதீங்க//

இதுதான் விஷயமா !!160 பேரிலிருந்து 145 ஆகிடுச்சி என் லிஸ்டில் ..

Avargal Unmaigal said...

வாழ்க்கையில் நான் இதுவரை சந்திக்காத பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் 2 பிரச்சனையில் ஒரு பிரச்சனை தீர்ந்துவிட்டது மற்றொரு பிரச்சனையை எதிர் நோக்கி கொண்டிருக்கிறேன்.அதனால்தான் இணையபக்கம் வரவில்லை நேற்று பேஸ்புக்பக்கம் வந்த போதுதான் சில பேர் இன்பாக்ஸில் விசாரித்து இருந்தார்கள் அவர்களுக்கு பதில் அளித்துவிட்டு இன்று ஒரு மொக்கை பதிவை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்..அவ்வளவுதான்

Avargal Unmaigal said...

பாலோவர் எண்ணிக்கை கடந்த மாதத்தில் இருந்து குறைய ஆரம்பித்துவிட்டது. கூகுலில் அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள் அதை பற்றி நான் எழுத வேண்டும் என நினைக்கும் போதுதான் நான் இணையத்தில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு இருந்தது. எனது பலோவர் எண்ணிக்கை 697 ல் இருந்து இப்போது 581 ஆக குறைந்து உள்ளது..

வருண் said...

*** Angelin said...

கமல் அண்ட் கெமிஸ்ட்ரி :)))))))))) ROFL ..நிச்சயம் கொடுத்தே ஆகணும்

//திடீர்னு நெறையப் பேர் உங்களோட கோவிச்சுட்டுட்டு போயிட்டதா நெனச்சுடாதீங்க//

இதுதான் விஷயமா !!160 பேரிலிருந்து 145 ஆகிடுச்சி என் லிஸ்டில் ..***

நான் பார்த்தவரைக்கும் கமலஹாசனுக்கு உலகில் எந்த ஒரு விருதைப் பெறவும் எல்லாத் தகுதியுமே அதிகமாக உண்டு. எந்தத் துறையிலும் பெரிய ஆளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அவர்களுக்கு ஒருபடி மேலேதான் இவரை நிறுத்துவார்கள். அவரும் இவர்களை நம்பி பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கிக்கொண்டு அழகாக புன்னகைப்பார்! :)

Otherwise why is giving an "invited lecture" in Harvard business school? Has have ever gone to any business school? You should not ask any such questions because he is qualified for anything and everything!

வருண் said...

*** Avargal Unmaigal said...

வாழ்க்கையில் நான் இதுவரை சந்திக்காத பிரச்சனைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறேன் 2 பிரச்சனையில் ஒரு பிரச்சனை தீர்ந்துவிட்டது மற்றொரு பிரச்சனையை எதிர் நோக்கி கொண்டிருக்கிறேன்.அதனால்தான் இணையபக்கம் வரவில்லை நேற்று பேஸ்புக்பக்கம் வந்த போதுதான் சில பேர் இன்பாக்ஸில் விசாரித்து இருந்தார்கள் அவர்களுக்கு பதில் அளித்துவிட்டு இன்று ஒரு மொக்கை பதிவை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்..அவ்வளவுதான்>***

போராடும் அளவுக்கு பிரச்சினை என்றால் என்னனு கவனித்துப் பாருங்கள்! ஆல் த பெஸ்ட்! May the force be with you!

வருண் said...

*** Avargal Unmaigal said...

பாலோவர் எண்ணிக்கை கடந்த மாதத்தில் இருந்து குறைய ஆரம்பித்துவிட்டது. கூகுலில் அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள் அதை பற்றி நான் எழுத வேண்டும் என நினைக்கும் போதுதான் நான் இணையத்தில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு இருந்தது. எனது பலோவர் எண்ணிக்கை 697 ல் இருந்து இப்போது 581 ஆக குறைந்து உள்ளது..***

Actual ஆக தொடர்கிறேன் என்று சொல்லிய அனைவரும் தொடர்வதும் இல்லை. தொடர்கிறேன் என்று சொல்லாமல் தொடர்பவர்களும் உண்டு! :)

SathyaPriyan said...

//
இப்போ முக்கியமாக கமல் ரசிகர்களின் மத்தியில் ரஜினி பெற்ற இவ்விருது மிகுந்த பரபரப்பையும் எரிச்சலையும் கிளப்பி உள்ளது என்பதை அவர்கள் ட்வீட்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
//

ஒரு சிலர் அப்படி இருக்கலாம் வருண். ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். ரஜினி தானாக ஓய்வு பெரும் வரை அவர் தான் தென் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். அதில் மாற்றே கிடையாது. அவருக்கு அளித்ததில் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது தான் உண்மை.

உண்மையில் கமல் தனது ட்விட்டரில் ரஜினியை வாழ்த்தி ஒரு பதிவிட்டிருக்கலாம். கமல் வாங்கி இருந்தால் ரஜினி அதை செய்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன். கமலை ரஜினி பொதுவெளியில் புகழ்வதை போல கமல் அதிகம் செய்வதில்லை. ஆனால் அவர்களுக்கிடையே உள்ள நட்பை பற்றி நமக்கென்ன தெரியும்.

வருண் said...

சத்யபிரியன்: உங்களைப் போல் கமல் ரசிகர்களைப் நினைக்கும்போது மனது சங்கடப்படுகிறது. இப்படி எல்லாம் பதிவெழுதுவதே அநியாயமாகத்தான் தெரிகிறது என்பதை மறைக்காமல் சொல்லிவிடுகிறேன்.

தகுதி, தராதரம்னு பார்த்தால் எனக்கும் உங்களுக்குமே பத்மவிபூஷன் பெற ரஜினி கமலைவிட தகுதி அதிகமே. நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன். ஆனால் தனி ஒரு மனிதனை சமூகம் மற்றும் விருது வழங்குவோ பார்ப்பதில்லை.பிரபலங்களைத்தான் பார்க்கிறார்கள். பிரபலங்கள் உலகறிய எதும் பெரிய குற்றங்கள் செய்யாதவரை, அநியாயம் செய்யாதவரை, அவர்கள்மேல் எதுவும் பொய்குற்றச்சாட்டுகள் இல்லாதவரை தகுதியானவர்களாகத்தான் பார்க்கிறார்கள். இதை சாதாரணமாக எடுத்துக்கலாம்னுதான் எனக்குத் தோனுது.

G.M Balasubramaniam said...

நான் சில நாட்கள் பதிவுப்பக்கம் வரவில்லை. மீண்டும் வந்தபோது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை குறைந்து விட்டது கண்டு எழுதி இருக்கிறேன் இப்போது காரணம் தெரிந்து விட்டது நன்றி வருண்

ஸ்ரீராம். said...

மதுரைத் தமிழன் பதிவு போட்டு விட்டாரே..

ட்விட்டர் பக்கம் போவதே இல்லை.

தொடர்பவர்கள் எண்ணிக்கைக் குறித்த விளக்கம் உங்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன். எங்களுக்கு ஒரு நாளில் திடீரென உயர்ந்து அப்புறம் சரிந்தது!

மதுரைத் தமிழன்! உங்கள் இரண்டாவது பிரச்னையும் விரைவில் நல்லபடியாய்த் தீரட்டும்.

வருண் said...

***G.M Balasubramaniam said...

நான் சில நாட்கள் பதிவுப்பக்கம் வரவில்லை. மீண்டும் வந்தபோது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை குறைந்து விட்டது கண்டு எழுதி இருக்கிறேன் இப்போது காரணம் தெரிந்து விட்டது நன்றி வருண்***

வாங்க சார். சிறிய இடைவெளிக்குப் பிறகு பதிவுலகில் உங்க பதிவை நேற்று கவனித்தேன். வந்து என்னனு பார்க்கிறேன், சார். :)

வருண் said...

***ஸ்ரீராம். said...

மதுரைத் தமிழன் பதிவு போட்டு விட்டாரே..

ட்விட்டர் பக்கம் போவதே இல்லை.

தொடர்பவர்கள் எண்ணிக்கைக் குறித்த விளக்கம் உங்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன். எங்களுக்கு ஒரு நாளில் திடீரென உயர்ந்து அப்புறம் சரிந்தது!

மதுரைத் தமிழன்! உங்கள் இரண்டாவது பிரச்னையும் விரைவில் நல்லபடியாய்த் தீரட்டும்.***


வாங்க ஸ்ரீராம்!

நான் பதிவெழுதி வெளியிட்ட உடனேதான் கவனித்தேன். அவர் பதிவென்று எழுதியிருக்கிறார் என்று. :)

நிஷா said...

செல்வாக்குக்கு முன்னால் சொல்வாக்குக்கு மதிப்பில்லை போலும்!பணமிருந்தால் பட்டங்கள் தலையின் மேல் அமரும் கூடவே பட்டங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் வானத்தில் பறக்கும்.
மதுரைத்தமிழனின் இப்படியும் சிலர் வந்து விட்டது!

தொடர்பவர்கள் எண்ணிக்கை குறித்த தகவலுக்கு நன்றி!

Kasthuri Rengan said...

வணக்கம் வருண்,

தமிழன் குறித்த அக்கறைக்கு நன்றி.

நிறைய தகவல்கள்
குறிப்பாக கூகிள் அப்டேட் அருமை

தொடர்க
தம +

balaamagi said...

பட்டங்கள் குறித்த தங்கள் பகிர்வு அருமை,
கூகுல் குறித்த தகவலுக்கு நன்றி,