Thursday, April 7, 2016

இன்னும் உயிரோடதான் இருக்கேன்! அனாதையான தமிழ்!

எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுதுனு தலைப்பு வைத்திருக்கலாமோ? மேலே படிங்க, புரியும்!

நான்தான் இங்கே  பிரபலம்! இல்லை நாந்தான் இங்கே உன்னைவிட பிரபலம்னு அடிச்சுக்கிட்டு இருந்தவர்கள் எல்லாம் செத்து சுடுகாட்டுக்குப் போயாச்சு! கூகிள் பிளஸ் இல்லைனா முகநூல், இல்லைனா ட்விட்ட னு போயிட்டார்கள் இந்த பிரபலம்னு பிதற்றிக்கொண்டு அலைந்தவர்கள்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த த மி ழ் ம ண ம் இன்று தானியங்கியாக அனாதையாக ஆகி நிற்கிறது. ஒரு பிரச்சினையைச் சொல்லி இதை த மி ழ் ம ண ம் நிர்வாகம் சரி செய்தால் என்னனு கேள்வி ஏதாவது கேட்டால்.. உடனே..ஏன் தமிழ்மணத் திரட்டியையே கட்டி அழுறீங்க? புதுசா ஒரு திரட்டி ஆரம்பித்தால் என்ன? என்று சில தமிழ்மண நிர்வாகிகளிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும். அதன்னனு தெரியவில்லை. எத்தனையோ திரட்டிகள் ஆரம்பித்தார்கள். அவைகள் எதுவுமே தமிழ்மணத்திற்கு இணையாக வரமுடியவில்லை. திரட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக வளர்ந்து சீக்கிரமே அழிந்து விடுகின்றன. அதனால் தமிழ்மணத்தை ஓரளவுக்கு சிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி செய்யவில்லை யென்றால் அது தமிழுக்கு அவர்கள் செய்யும் இழுக்கு! தமிழ் செத்தால் என்ன? தமிழ்மணம் செத்தால்தான் என்ன?னு ஏன் போயிவிட முடியவில்லை?னு எனக்குப் புரியவில்லை! எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுது?

--------------------------

வராத ஒரு பின்னூட்டம்! சிரடி சாய்பாபா பற்றி திருமதி உஷா ஷ்ரிகுமார் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதாவது அவர் ஒரு கடவுள். வாழ்ந்து செத்த கடவுள். செத்து உயிரோட வாழும் கடவுள்னு. நல்லவர்களை எல்லாம் கடவுள் ஆக்குவது நம் கலாச்சாரம். ஒருவர் வாழும்போது நாலு பேருக்கு  உதவி செய்துவிட்டு  செத்தால் அவரை நாம் கடவுளாக்கி விடுவோம். இப்படிதான் நாம், விஷ்ணு, சிவன், முனியசாமி, மாரியம்மன்னு ஏகப்பட்ட கடவுளை உருவாக்கி இன்னைக்கும் சாய்பாபா, நிதயானந்தானு கடவுளை உருவாக்கிக்கொண்டே போகிறோம். இந்த உண்மையச் சொல்லி ஒரு பின்னூட்டம் எழுதி அவர் தளத்தில் வைத்தால் அது இன்னும் வெளிவரவில்லை. என்னவோ போங்க! எல்லாம் கடவுள் செயல். ஒரு கடவுள் என்னைப் பின்னூட்டம் எழுதச்சொல்லி தூண்டிவிட்டார். இன்னொரு கடவுள் அதை வெளியிட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் போலும். இப்படி கடவுளக்ளுக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருந்தால், கடவுள் மனிதனைப்போல் தன் தரத்தைக் குறைப்பதுபோல் தோனுது..எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோனுதுனு தெரியலை..

-------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

 Isn't she the prettiest girl in the Earth today?

 தீபிகா படுகோனே!  சாமுவேல் ஜாக்‌ஷனுடன்.

 Note! Just today she is the prettiest! Not after 5 or10 years! ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?

--------------------------

பதிவெழுதவோ பின்னூட்டம் இடவோ நேரமில்லை. வேலை அதிகம்னு சொல்லலாம். என்ன அப்படி வேலை?  வர வர ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துடுச்சு. என்ன காம்ப்ளெக்ஸ் அது? காலங்காலமாக படித்த சப்ஜக்ட்லயும் ஏகப்பட்ட சந்தேகங்கள்..புதிதாக ஒரு சப்ஜெக்ட் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கேக்கவே வேணாம். அதுவும் இதுனா என்ன? இதுனா என்ன?னு உள்ளே நுழைந்து நுழைந்து போனால், போயிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. எந்த இடத்தில் நிறுத்தணும் என்பதே விளங்க மாட்டேன் என்கிறது. என் நேரமெல்லாம் இப்படித்தான் "வீணாகிறது"! .எவ்வளவு நேரம் படித்தாலும் இன்னும் புரியாதவை ஏகப்பட்ட விசயங்கள் இருக்குனு அடிக்கடி உணருகிறேன். நான் இப்படி இருக்கும்போது.. ஒரு சிலர், "நான் எல்லாத்தையும் கரைத்துக் குடிச்சுட்டேன்" "எனக்கு தெரியாததே இல்லை" என்பதுபோல் எப்படிப் பேசுறாங்கனு விளங்கவில்லை! புதிராகவே இருக்கு. அப்படிப் பேசுபவர்கள் மேல் மரியாதை வருவதற்கு பதிலாக.."உளறுகிறான் பாரு முட்டாள்"னுதான் தோனுது. ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?

----------------------------

12 comments:

ப.கந்தசாமி said...

//ஏன் எனக்கு மட்டும் இப்படித் தோனுது?//

"கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்" துவக்க விழா வருகிற 14-4-2017 அன்று கோவையில் நடைபெருகிறது. அதற்கு வந்தீர்களானால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.

Avargal Unmaigal said...

உஷா ஷ்ரிகுமாரா அவங்க எங்கவாது ஆங்கிலதில் வந்ததை அப்படியே தமிழாக்கம் செய்து போடுவார்கள் அதில் தவறு ஏதும் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதை திருத்தவும் மாட்டார்கள் நாம் சொல்லும் விளக்கத்தை வெளியிடவும் மாட்டார்கள் அவரின் தளத்திற்கு நம் பதிவுலகத்தில் இருக்கும் 'பெரியவாள்' ஆஹா ஒகோ என்று பாராட்டி பல கருத்தை இட்டு அதில் தன் தளத்திற்கான சில லிங்கையும் போட்டுவிடுவார் அது மாதிரி 'பெரியவாள்' போடும் கருத்துமட்டும் அங்கு பதிவாகும் நீங்கள் போடு கருத்து அல்லது நான் போடும் கருத்து ஏதும் அங்கு வெளிவராது காரணம் நாம் எல்லாம் அவங்க பாஷையில் அபிஸ்டுகள்

Avargal Unmaigal said...

வருண் நீங்கள் நிறைய படிக்காதீங்க அப்படி நீங்க நிறைய படிச்சா எங்களை மாதிரி உள்ள ஆட்களுக்கு பிரச்சனை... என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? நீங்க நிறைய படிச்சால் உங்கள் படிப்பு சம்பந்தமான ஒரு பதிவை போடுவீங்க. அப்படி போடுவதை படிக்கும் என்னை போன்றவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று புரியாது. அப்படி புரியாததை எங்களுக்கு புரியவில்லை என்று சொல்ல தன்மானம் இடம் கொடுக்காது அதனால் நாங்கள் உடனே பதிவு அருமை... மிகவும் சிந்திக்க வைக்கிறது என்று ஒரு டெம்பிளேட் கருத்தை போட வேண்டி இருக்கும் இப்படி பல பிரச்சனைகள் எங்களுக்கு வருவதால் நீங்கள் அதிகம் படிக்க வேண்டாம் என்று பதிவுலக சார்பாக கேட்டு கொள்கிறோம்

G.M Balasubramaniam said...

எனக்கும் பல நேரங்களில் இவ்வாறு தோன்றும்

Yarlpavanan said...


சிறந்த பகிர்வு

ஆரூர் பாஸ்கர் said...

நல்லதொரு பதிவு வருண்.

ஆமாம். பதிவுலக சூழல் ஆரோக்கியமாக இல்லை.நீங்கள் சொலவதுபோல் நிறையபேர் முகநூல் பக்கம் சென்றுவிட்டார்கள்.

இருப்பவர்களுக்கும் பதிவுலகின் எதிர்காலம் பற்றியதொருக் கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இது நியாயமானதே. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இன்று இருப்பதைவிட குறைவானவர்களே பதிவிடுவார்கள் போல, இன்றைய உடனடித் தேவை செயல்.

பதிவுலகில் நீண்டநாள் தொடரும் சீனியர் என்ற முறையில் உங்களால் நல்ல ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொல்ல அல்ல பொதுவேளியில் பதிவிட முடியுமா? அதுநம்மை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.

யாரையாவது அல்லது எதையாவது தப்பு அல்லது குறைசொல்வதால் என்ன பலன்? - நன்றி

வருண் said...

கந்தசாமி சார், மதுரைத் தமிழர், ஜி எம் பி சார், காசி ராஜலிங்கம் அவர்கள், ஆரூர் பாஸ்கர்! தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி

ஆரூர் பாஸ்கர்!! உங்க தளத்தில் கூகிள் பிளஸ் அக்கவுண்ட் இல்லாத என்னைப்போல் பலரால் கருத்துரைக்க இயலவில்லை. ப்ளாகர் ஐ டி வைத்துள்ளவர்கள் கருத்துச் சொல்ல இயலும்படி மாற்றினால் என்னைப்போல் பலரால் பின்னூட்டமிட முடியும். உங்க தளத்தில் அதிக பின்னூட்டம் வராததற்கு இதுவும் ஒரு காரணம். :)

'பரிவை' சே.குமார் said...

எல்லாருக்கு அதே நிலைதான்...
எனக்கெல்லாம் வேலை அதிகம்...
வெள்ளி சனிதான் பதிவு வாசிக்க எழுத முடியுது....

Amudhavan said...

\\ஒரு சிலர், "நான் எல்லாத்தையும் கரைத்துக் குடிச்சுட்டேன்" "எனக்கு தெரியாததே இல்லை" என்பதுபோல் எப்படிப் பேசுறாங்கனு விளங்கவில்லை! புதிராகவே இருக்கு.\\

தமிழ் மணத்திலேயே அடிக்கடி தலைகாட்டும் ஒரு பதிவரைப் பற்றிச் சொல்கிறீர்களோ என்று எனக்கு சந்தேகம். தனக்கு வேண்டிய ஒரு ஏழெட்டுப்பேரின் புகழ் மாலைகளை மட்டும் போட்டு நிரப்பிக்கொண்டு, தான் விரும்பும் ஒரு கட்சிக்கு ஜால்ராவும், விரும்பாத கட்சியை தரக்குறைவாகவும் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு நாட்டாமையின் செயல்பாடுகளும் நீங்கள் குறிப்பிடும் வகையினதாகத்தான் இருக்கிறது. நான் இப்போதெல்லாம் அந்த மனுசரின் பதிவுகளைப் படிப்பதை நிறுத்திவிட்டேன்.

நிஷா said...

இப்போதைக்கு எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை வருண் சார்!எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதும் கூட என்னுள் தோன்ற்வில்லை.

ஆரூர் பாஸ்கர் said...

மிகஉங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி. அனைவரும் கமெண்ட் அளிப்பது போல மாற்றிவிட்டேன்.

saamaaniyan said...

நலமா வருண் ?...

வழக்கம் போலவே நாங்கள் ( நான் ) நினைக்கும் பலதையும் போட்டு உடைத்த பதிவு !

பதிவர்களில் பலர் சட்டென முகநூல், ட்விட்டர் என தாவுவது ஏன் என புரியவில்லை ! தமிழ் மணத்தை பற்றி நிறைய புலம்பியாகிவிட்டது ! தமிழ் வலைப்பூக்களின் பதிவுகளில் சிறந்தவற்றை வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒருமுறையோ தேர்ந்தெடுத்து பிரசுரிக்கும் ( ஆசிரியர் குழுவை கொண்ட ) ஒரு இணைய பத்திரிக்கையின் தோற்றம் இணையத்தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும். ஆனால் முழுநேர பணி மற்றும் நிறைய செலவு பிடிக்கும் இதனை யாரால் செயல்படுத்த முடியும் ? பத்திரிக்கை குழுமங்களில் சில மனதுவைத்தால் விடிவு பிறக்கலாம் !

எனக்கு எல்லாம் தெரியும் என ஒருவன் சொல்லும்போதுதான் அவனது அறிவு மழுங்க தொடங்குகிறது !

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி