Monday, October 24, 2016

மிகப் பெரிய சிறிய உலகம்!

வர வர என்னை நினைத்தால் எனக்கே பொறாமையா இருக்கு! அப்படினா? தமிழ்லதானே சொன்னேன்? புரியலைனா நான் என்ன பண்ண?

ஹில்லரி மற்றும் ட்ரம்ப்! (US general election)

Image result for trump vs clinton polls fivethirtyeight



ப்ளூ காலர் வைட் அமெரிக்கர்கள்தான் ட்ரம்ப்பை இந்தளவுக்கு மேலே கொண்டு வந்து விட்டது.

* நல்லவேளை நியு யாக் டைம்ஸ்  ட்ரம்ப்பின் நஷ்டக்கணக்கு டாக்ஸ் ரிட்டன் மற்றும் அந்த ஆடியோ-வீடியோவை வெளியிட்டது.

* அதில் கீழே விழுந்த ட்ரம்ப் இன்னும் எழுந்திரிக்க முடியவில்லை.

அனேகமாக ஹில்லரிதான் அடுத்த அமெரிக்கப் ப்ரஸிடெண்ட் என்று முடிவாகிவிட்டது. We don't have to listen this worthless billionaire's trash after Nov 8th!

ஆனால் ஒண்ணு ட்ரம்ப்க்கு ஆப்பு வைத்தது  பெண்கள்தான்! ஆம்பளைங்க இன்னும் அப்படியேதான் இருக்காணுக!

இது அமெரிக்கன் ஃபுட் பால் சீசன் (NFL)!

கைல பிடிச்சுட்டு ஓடுற விளையாட்டை ஏன் "கால் பந்து"னு சொல்றீங்க? அந்தப் பந்து உருண்டையாகக் கூட இல்லை! னு எல்லாம் கேக்க வேணாம்!

நான் மிகப் பெரிய  அமெரிக்கன் ஃபுட் பால் விசிறியாக்கும். ஒரு நாலு மாதம் நல்லாப் பொழுது போகும் எனக்கு. ஆமாம், For a change,  It is all about me and how much fun I am going to have.:)

 பெரிய உலகத்தை சின்ன உலகமாகப் பார்க்க!

பரிணாமவியல்படி பார்த்தால் பூமி சூரியனிலில் இருந்து உடைந்து வந்த ஒரு சின்ன உருண்டை என்கிறார்கள்.

அதுக்கப்புறம் பல தனிமங்கள் தோன்றி, அதில் உயிரிகள் தோன்றி, தாவரங்கள், விலங்குகள் அப்புறம் மனிதன் தோன்றினானாம். என்ன ஒவ்வொரு மாற்றத்த்துக்கும் மில்லியன் அல்லது பில்லியன் வருடங்கள் ஆகியிருக்கும்னு சொல்றாங்க.

இப்போதைக்கு மனிதந்தான் இவுலகம் அவனுக்கு சொந்ந்தமானதுனு முடிவு பண்ணி, மனித இனம் வளர்ந்துகொண்டே போகுது. எங்கே பார்த்தாலும் மனிதர்கள்.

When I think about it, Humans attitude seems very funny. They created God to fool themselves. They think they are going to be the dominant force in the earth for EVER. I am sure there is going to be a time in the future when Human race will be eradicated completely but EARTH will keep living with other lives!