Tuesday, August 8, 2017

என் கதைகளை புத்தகமாக வெளியிடப்போறேன்!

"வித்யா! என் கதைகளை புத்தகமாக வெளியிடலாம்னு இருக்கேன்? என்ன சொல்ற?"

"ஹா ஹா ஹா சும்மா  இருங்க அகில்! அதுக்கெல்லாம் ஒரு இது வேணாமா?"

"இதா? எது?  தகுதியா? இல்லை தரம் வேணும்னு சொல்றியா?"

"இல்லை அகில், நான் அப்படி சொல்லலை. ஒரு இதுனா..எதுக்கு இந்த விஷப் பரிட்சைனு சொல்ல வந்தேன்"

"அடிப்பாவி! அப்போ "அகில்! உங்க கதை நல்லாயிருந்துச்சு"னு சொன்னதெல்லாம் பொய்யா! பொண்ணுங்க யாருமே உண்மையே பேசா மாட்டீங்களா? அப்போ நீ சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஆறுதலுக்கு?  என் மேல் ஒரு பரிதாபத்தில்? எனக்கு இப்போத்தான் புரியுது நான் ஒரு ட்யுப் லைட்னு"

"அகில்! நீங்க ட்யூப் லைட் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இல்ல, உங்க கதை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் புத்தகமா வெளியிடணும்னா நெறையா எடிட் பண்ணனும், பிழை திருத்தணும். ஒரு நல்ல ஷேப் க்கு கொண்டு வரணும்?"

"நல்ல ஷேப்க்கா? எப்படி உன்னை மாதிரியா? முன்னால பின்னால எல்லாமே செக்ஸியா?"

"அகில்!!! கொஞ்ச வயசு பொண்ணுட்ட இதுமாதிரி ஃப்ளர்ட் பண்ணக்கூடாது!"

"யாராவது கிழவிட்டத்தான் ஃப்ளர்ட் பண்ணணும்னு சொல்றியா?"

"இப்போ எதுக்கு கதையிலிருந்து என் மேலே தாவுறீங்க?"

 "சரி, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எல்லாம் ஒரு மேட்டரா? நீ எதுக்கு இருக்க கிழங்கு மாதிரி? உன்னைவிட ஒரு நல்ல எடிட்டர் அல்லது ப்ரூஃப் ரீடர் யாரு கிடைப்பா? நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை! அதுவும் நீ ஒரு ஆத்துப் பொண்ணு. தமிழ் என்ன சமஸ்கிரதம், ஆங்கிலம் எல்லாவற்றையும்கூட சரி பண்ணிடுவ"

"இல்ல, அதுக்கு இல்லை..ரொம்ப காசு செலவாகும். மத்தவா காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் இல்லையா?  அதான் சொல்றேன். உங்களுக்குத் தெரியுமா? நல்லா எழுதுறவங்க நெறையப் பேரு புத்தகம் வெளியிட்டு 100 பிரதிகூட விற்காமல் "டிப்ரெஸ்" ஆகி இருக்காங்க. நீங்களும் ஏன் அப்படி ஆகணும்னுதான் யோசிக்கிறேன். உங்க மேலே உள்ள பிரியத்திலேதான் சொல்றேன், அகில்"

"உன் பிரியத்துக்கு என்ன கொறைச்சல்? அப்போ இது நல்ல ஐடியா இல்லைனு சொல்ற? என் கதையை நீ மட்டும் பாராட்டினாப் போதுமா, வித்யா?"

"அதான் வலைபூக்களில் 100-200 பேர் வாசிக்கிறாங்க இல்லையா? எனக்கென்னவோ பப்ளிஷ் பண்ணுறது  நல்ல ஐடியானு தோனலை. சும்மா வலைபூக்களிலே எழுதிட்டு அதோட விட்டுறலாமே. காலங்காலமாக அப்படியே அழியாமல் இருக்குமே?"

"வித்யா! ஐ ஆம் ரியல்லி டிப்ரெஸ்ஸெட் நவ். இங்கே வாவேன்"

"எதுக்கு?"

"என்ன இது? உன் அவ்ட் ஃபிட் ரொம்ப சின்னதான மாதிரி இருக்கு?"

"இல்லையே? என்ன இப்படி பார்க்குறீங்க?"

"இல்லை  உன் அவ்ட் ஃபிட் எல்லாம்  சின்னதாத் தெரியுது. "

"கொழுப்பா? என்ன நான் குண்டாயிட்டேன்னு சொல்றீங்களா?"

"அப்படி சொல்லலை. நீ ரொம்ப செக்ஸியா இருக்கனு சொன்னேன். டிப்ரெஷனுக்கு என்ன மருந்து தெரியுமா, வித்யா?"

"என்ன மருந்து? ச்சீ அங்கேலாம் கை வைக்காதீங்க"

"செக்ஸ்தான் மருந்தாம். சைக்காலஜிஸ்ட் சொல்றாங்க!"

"ச்சீ"

"நெஜம்மாத்தாண்டி!  ஒருத்தர் செக்ஸுவல்லி ஆக்டிவா இருந்தால்  அவருக்கு டிப்ரெஷன் வராதாம். கேன் யு  ஹெல்ப் மி, வித்யா? என் டிப்ரெஷனைப்  போக்க? சப்போஸ்  என் புத்தகம் விக்கவே இல்லைனா.. "

"உங்களுக்கு எந்தவிதமான கூச்சமோ, வெக்கமோ இல்லையா அகில்?!"

"மத்தவாட்டதான் கூச்சப் படணும்! உன் ட்ட கூச்சப்பட்டா நீயும் இவன் சரியில்லைனு ஓடிப்போயிடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"அதுக்காக இப்படியா?"

"இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா? இல்லையா?"

"சரி, உங்க கதையில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக், ப்ரூஃப் ரீட்டிங் எல்லாம் பண்ணித்தர்றேன். அதுக்கப்புறம் பப்ளிஷ் பண்றது உங்க இஷ்டம்!"

"சரி. ஏய் அப்புறம், கதைத் தொகுப்பை வெளியிட்டு 100 பிரதிகூட விற்கலைனா, என்னை விட்டுறாதே!"

"உங்களை விடமாட்டேன்! கவலைப் படாதீங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் வித்யா, என் டிப்ரெஷனைப் போக்க ஹெல்ப் பண்ணுவனு சொன்னதுக்கு"

"உங்களை என்ன பண்ணலாம்..."

 ***************************

Relax please

Image result for lovers romantic deepika padukoneWednesday, August 2, 2017

எல்லாக் காதலும் ஒருதலைக் காதலே!!

காதல் கதை எழுதி எத்தனை நாளாச்சு! இப்போ எழுத முடியுமா? ஒரு வேளை முடியாதா? இப்போ எல்லாம் எங்கே காதல் பொங்கி வழியுது? எப்படி என்னால் காதல் கதை எழுத முடியும்? ஏன் முடியாது? சும்மா எழுதித்தான் பார்ப்போமே?  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் கதாசிரியர் அகில். எப்படியோ ஒரு காதல் கதை எழுதியே ஆகவேண்டும் என்று.

ஆனால் இந்த முறை பொய்க்கதைதான் எழுதணும். ஒரு வேளை சுபத்ரா நான் எழுதுற காதல் கதையை வாசித்தால்? அவள் எங்கே இங்கே வரப்போறா? ஒரு வேளை வந்து வாசித்தால்? கதாநாயகியை நாயகன் திட்டுவதுபோல் அல்லது கொஞ்சுவதுபோல் ஏதாவது எழுதினால் அவளைப் பற்றிதான் நான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்வாளே? அது உண்மைதானே? அவளுடைய தாக்கம் அல்லது கலப்பில்லாமல் என்னால் எப்படி காதல் கதை எழுத முடியும்? சுபத்ரா என்றுமே  நான் அவளை முழுமனதாக காதலித்தேன் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை. அவளே பலமுறை சொல்லியிருக்காளே?

Related image
நேற்றைய காதலர்கள்
அகில்! உங்களுக்கு நான் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவு தான். ஒண்ணு தெரியுமா அகில்? உண்மையில் நாந்தான் உங்களை உயிருக்கு உயிராய்க் காதலிக்கிறேன் . என் தொல்லை தாங்க முடியாமல் நீங்க சும்மா என்னைக் காதலிப்பதாக நடிக்கிறீங்க. உண்மையிலே நீங்க என்னைக் காதலித்தால் அப்பா எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை, இந்தக் கார்த்திக்கை எப்படி  அழகு, உனக்கு சரியானவர் என்றெல்லாம் உங்களால் சொல்ல முடியும்? அதேபோல் உங்கள் வீட்டில் உங்களுக்கு ஒரு ரம்யாவோ, செளம்யாவோ பார்த்து அவள் ஃபோட்டோவை எனக்கு நீங்கள் அனுப்பியிருந்தால் எனக்கு அவள் மேல் கொலைவெறி வந்துவிடும். அவள் உங்களுக்கு பொருத்தமானவள்னு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால் நீங்க, கார்த்திக் ஃபோட்டோவைப் பார்த்து  நல்ல அழகு, உயரம், நல்ல நிறம், உனக்குப் பொருத்தமானவர் சுபத்ரா னுசொல்றீங்க. நீங்க என்ன "கே" யா. அகில்? இல்லை எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லாம் இன்னொரு ஆணை அதுவும் தன் காதலியை மணக்கப் போவனை எப்படி உங்களால் வர்ணிக்க முடியுது? உண்மையிலேயே என்னைக் காதலித்தால் எப்படி இதுபோல் சொல்ல முடியும்? உண்மை என்னனா நீங்க என்னை எப்போ கழட்டிவிடலாம்னு பார்க்குறீங்க! அதனால்த்தான் உங்களால் இப்படி பேசமுடியுது. இருந்தும் அகில், ஐ லவ் யு வித் ஆல் மை ஹார்ட்.. ஒண்ணு தெரியுமா அகில்? உலகில் எல்லாக் காதலுமே ஒருதலைக் காதல்தான். ஒருவர்தான் இன்னொருவர் மேல் உயிராக இருக்கிறார். இன்னொருவர் காதலியின்/காதலனின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் காதலிப்பதுபோல் நடிக்கிறார்..நம் காதலில் காதலிப்பது நான். நடிப்பது நீங்க அகில்.

 இப்படியே எத்தனை முறை சொல்லியிருக்கிறாள்? ஒருவேளை அது உண்மைதானோ? ஒருவேளை அவள் மட்டும்தான் என்னைக் காதலித்தாளா? நான் சும்மா நடிச்சேனா?  கிடையவே கிடையாது. நான் ஒரு கோழை என்று வேணா ஒத்துக்கொள்வேன். அவளைக் காதலிக்கவில்லை என்று மட்டும் ஒருப்போதும் ஒத்துக்க முடியாது. அது எனக்கு மட்டும்தான் தெரியும்.

சே, காதல் கதை எழுதணும்னு நினைத்தால், சுபத்ரா ஞாபகம் வந்துவிட்டது. இப்போ எல்லாம் அவளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. சுபத்ரா இன்று இன்னொருவரின் மனைவி. மேலும் ஒரு தாய். அவள் அன்று அனுப்பிய அவள் புகைப்படத்தைப் பார்த்தால்க்கூட ஒரு கில்ட்டி உணர்வுதான் வருது. அவளை ரசித்து அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகத் தோனுது. தப்புனு தோனுது..

சுபத்ராவை என்னைச் சுத்தமாக  வெறுக்க வைத்ததே நாந்தானே? எவ்வளவு  கேவலமாக நடந்து இருக்கிறேன்? திருமணம் ஆன பிறகு என்னை வெறுக்க வைப்பதுதான் அவளுக்கு நான் செய்யும் உதவி என்பதுபோல்  நினைத்துக் கொண்டு அப்படி செய்தேனா? இல்லைனா என்னை மூன்றாமவனாக அவள் உணர்வதைப் பார்த்து வந்த என்னுடைய கோபமா? பொறாமையா? எனக்கு ஏன் பொறாமை வருது? அவளைத்தான் நான் காதலிக்கவில்லைனு சொன்னாளே? அது உண்மை இல்லையா? இல்லைனா பொழுதுபோக்குக்கு அவள் இல்லை என்கிற கோபமா? மறுபடியும் அவள் நினைவு  தொடர்கிறது..

காதல் கதை ஒரு கற்பனைக் கதை எழுதலாம்னு நினைத்தால் சுபத்ரா வந்து நிக்கிறாள். ஒருவேளை என்னால் கற்பனை காதல் கதையே எழுத முடியாதா? ஏன் என் சிந்தனைகள்  சுபத்ராவை சுத்தி சுத்தியே போகிறது?

Related image
No love for you anymore dear


சரி, இன்று கற்பனைக் கதை எழுத முடியாதுபோல. அடுத்தவாரம் எழுதுவோமா? அடுத்த வாரம் அவள் பிறந்தநாள் வருது இல்லை. அது மட்டும் ஏன் மறக்க மாட்டேன் என்கிறது? ஒரு வேளை நாந்தான் சுபத்ராவை காதலித்தேனா? அவள் நடிச்சாளா? நிச்சயம் அவளுக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்காது. எனக்கு என்றுமே அவள் பிறந்த நாள் மறக்காது..

 சரி, அடுத்தவாரம் முயல்வோம் என்று காதல் கதை எழுதும் முயற்சியை 'கிவ் அப்" பண்ணினான் அகில்..

கற்பனைக் காதல் கதை எழுத அகிலின் முயற்சி தொடரும்..


Tuesday, August 1, 2017

மாறிவரும் சைனா! வைப்பாட்டி கலாச்சாரம்!

சைனா வேகமாக முன்னேறுகிறது. இப்போது அமெரிக்காவிற்கு அடுத்த சூப்பர் பவர்  எது என்றால் சைனா தான்.

இப்போ உள்ள சூழலில் அமெரிக்கா வந்த 80% சைனா பேராசிரியர்கள், பொறியாளர்கள் எல்லாம் சொந்த நாட்டில் நல்ல வேலை கிடைத்து சைனாவிற்கு திரும்பிப் போயிடுறாங்க. அமெரிக்காவில் இருந்த கம்பெணிகள் எல்லாம் இழுத்து மூடிவீட்டு சைனா, இந்தியாவில்தான் இப்போ பல ஃபார்மசியூட்டிகள் காம்பெணிகள் நிறுவி குப்பை கொட்டுறாங்க.

பொதுவாக சைனாவிலிருந்து இங்கு வந்த பெண்கள்  அமெரிக்க வாழ்க்கை பிடித்து சைனாவில் நல்ல வேலை பெற்ற கணவருடன் திரும்பிப் போக மனமில்லாமல் அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள். நம்மாளு 45-55 வயதில் அங்கே போனவுடன்  வாங்கும் சம்பளம் அமெரிக்காவில் சம்பாதித்த அளவுக்கு பெரிய தொகை என்கிறார்கள். இன்றைய சைனாவில் மேலை நாட்டுக்கு சென்றவர்களை அதற்கேற்ற ஊதியம் மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான வசதி எல்லாவற்றையும் கொடுத்துத்தான் சைனா அரசாங்கம் இவர்களைத் திரும்ப வரவைக்கிறார்கள்.

இப்படி மனைவியை இங்கே விட்டுவிட்டு பிள்ளைகளை அமெரிக்க கல்லூரிகளில் படிக்க விட்டுவிட்டு திரும்பிப்போகும் "பிரம்மச்சாரி" பேராசிரியர்களைத் தேடி இளம் அழகான சைனீஸ் பெண்கள் கூடுகிறார்களாம். "உங்களிடம் பணம் இருக்கிறது, என்னிடம் இளமை இருக்கிறது" என்று எக்ஸ்ட்ரா மாரிட்டல் உறவு எளிதாக வெகு சாதாரணமாக உருவாகிவிடுகிறதாம். அங்கே ஒரு "காண்டோ" வாங்கி இளம்பெண்களை "வைத்துக்கொண்டு "வாழ்கிறார்கள் இவர்கள். நவநாகரீக சைனாவில் யாருக்கும் வெட்கமில்லை என்கிறார்கள். இது இன்றைய சைனாவில் சாதாரணமாக நடக்கிறது என்கிறார்கள்.

"இன்றைய சைனா இப்படித்தான். எனக்குத் தெரியவே ஒரு 4 பேரு இப்படி வாழ்கிறார்கள்" என்கிறார்கள் என் சைன நண்பர்கள்.  

ஆக, கூட்டிக் கழித்துப்பார்த்தால் முன்னேற்றத்திற்கு விலை கலாச்சாரச் சீரழிவு என்பது தெளிவுபடுகிறது. 

அந்தக் காலத்தில் நம்ம ஊரில் காசு பணம் சேர்ந்துவிட்டால், மிட் லைஃப் ல  நம்ம ஊர் "பணம் படைத்த பெரிய மனிதர்கள்" வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள் !. கிளி மாதிரி  பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள் என்பது நம் பழமொழி. இன்றைய சைனாவில் நடப்பது அதே எழவுதான்.

நான் இங்கே எழுதுவது கதை அல்ல! கட்டுரை! உண்மையில் இன்றைய சைனாவில் நடப்பது. என் சைனீஸ் கலீக்களிடம் பேசி அறிந்து கொண்டது.

சரி, அமெரிக்காவில் இருக்கும் அவர்கள் மனைவி மார்களுக்கு இதுபோல் "நம்ம அண்ணன்" சைனாவில் ஒரு சின்னப் பொண்ணை வச்சிருக்கது தெரியுமா? னு கேட்டால்  மனைவிளுக்கும் "தெரியும்" என்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்

அதேபோல் இதுபோல் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்ளும் இளம் பெண்களின் பெற்றோர்களுக்கு, தன் மகள் ஒரு  50 வயதான திருமணம் ஆன ஒரு ஆளுடன் உறவு வைத்துள்ளது தெரியுமா? அவர்கள் அவளைக் கொன்றுவிடமாட்டார்களா? என்று கேட்டால், பெற்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதையெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில்லை என்கிறார்கள்.

எப்படியோ மகள் நல்லாயிருந்தால் சரி னு  "நம்ம மோஹனா" அம்மா "வடிவா"ட்டம் சிந்தனை உள்ளவர்கள் அவர்கள் என்கிறார்.

Image result for sugar daddy


ஆக, ஒரு நாடு முன்னேறுகிறது என்றால், அந்நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கைத் தரம் எல்லாம் நாசமாகப் போகிறது என்றே அதற்கு அர்த்தம்.